சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Jul 2015

எஸ்.எஸ்.ராஜமெளலி தந்தையின் கதையில் உருவான 'பஜ்ரங்கி பாய்ஜான்'

கதை மிக எளிமையானது தான். ஆனால், கதை சொன்ன விதம் சிலிர்ப்பு, சிறப்பு. பாகிஸ்தானில் இருக்கும் ஷாஹிதா (ஹர்சாலினி மல்ஹோத்ரா)வுக்குப் பிறந்ததிலிருந்து பேசும் திறன் இல்லை. சின்ன பரிகாரம் செய்தால் சரியாகிவிடும் என்பதற்காக டெல்லியில் இருக்கும் தர்காவிற்கு அழைத்துச் செல்கிறாள் அவளது தாய். அங்கிருந்து திரும்பி வரும் போது தொலைந்துவிடுகிறாள் ஷாஹிதா.
அப்படி தொலைந்துவிடும் ஷாஹிதா சல்மானிடம் சேருகிறார். ஷாஹிதாவை சல்மான் எப்படி பாகிஸ்தானுக்குக் கொண்டு செல்கிறார் என்பதே மீதிக் கதை. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குப் பயணம். அதற்கு ஒரு காரணம், அதில் வரும் பிரச்சனைகள் என மிகத் தெளிவாக பயணிக்கும் திரைக்கதை படத்தின் பெரிய ப்ளஸ். முரட்டுத் தோற்றத்துடன், பயபக்தியான சல்மான் கதாபாத்திரம் செம கலாட்டா.

ஆஞ்சநேயர் பக்தர், வழியில் குரங்கைக் கண்டால் கூட குனிந்து கும்பிடும் அளவுக்குக் காட்டும் மரியாதை என சல்மான் செம கூல்மேன். ஷாஹிதாவாக நடித்திருக்கும் ஹர்சாலினி அவ்வளவு அழகு. தன் அம்மாவை நினைத்துக் கலங்குவது, அசைவம் சாப்பிட பக்கத்துவீட்டுக்குள் நுழைவது, சல்மானுடன் சேர்ந்து செய்யும் குறும்புகள் என க்யூட் சுட்டியாக வசீகரிக்கிறாள்.
பயணத்தின் இடையே இணைந்து கொள்ளும் நவாஸுதீன் சித்திக் கதாபாத்திரமும் படத்தின் முக்கியத் திருப்பத்தில் அவரின் பங்கும் பக்கா. 

'இவளுடைய வீடு எங்க இருக்குன்னு தெரியாது, அவளால பேச முடியாது, அப்புறம் எந்த தைரியத்தில் நீ கிளம்பி வந்த' என நவாஸ் கேட்க 'அனுமார் காப்பாத்துவாருங்கற தைரியத்தில தான்' என சல்மான் சொன்னதும் 'பாக்கிஸ்தான்ல கூடவா?' என்று கேட்கும் வசனங்கள், இயல்பு நிலவரத்தை இயல்பாகவே விளக்குகிறது.
சின்ன கதாபாத்திரத்தில் வந்தாலும் கரீனா கபூர்  தன் கதாபாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். படத்தின் இன்னொரு ப்ளஸ், அமீஸ் மிஷ்ரா ஒளிப்பதிவு காஷ்மீரின் குளிரையும், டெல்லியின் கலரையும் அப்படியே அள்ளி ஸ்க்ரீனில் தெளித்திருக்கிறது.
படத்தின் கதாசிரியர் வேறு யாருமில்லை, விஜயேந்திர பிரசாத். எஸ்.எஸ்.ராஜமௌலியின் தந்தையும் அவரது படங்களுக்கு கதாசிரியருமான இவர் தான் இந்தப் படத்திற்கும் கதை எழுதியிருக்கிறார்.

க்ளைமாக்ஸில் சல்மானுக்கு தரும் காந்தி ரேன்ஜ் பில்டப்பைத் தவிர்த்திருந்தால், அழகாகத் தொடங்கிய படம் அழகாகவே முடிந்திருக்கும். இருந்தாலும் ஒரு வாம் வெல்கம் சொல்லலாம் இந்த பஜ்ரங்கிக்கு!


No comments:

Post a Comment