மாறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து படமாக்குபவர் வெற்றிமாறன். அவருடைய அடுத்த படம் விசாரணை. தனுஷ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க படம் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது.
இதற்கு நடுவில் பாரம்பரியமிக்க வெனிஸ் திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் பங்கேற்று உலக சினிமாக்களுடன் போட்டிபோடவிருக்கிறது. முதன் முறையாக தமிழிலிருந்து வெனிஸ் திரைப்பட விழாவில் கலந்துகொள்ளவிருக்கும் படமும் இதுவே.
தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி என்றாலே விருதுகளும் பாராட்டுகளும் நிச்சயம் என்பதை ஆடுகளம், காக்காமுட்டை ஆகியவற்றைத் தொடர்ந்து விசாரணை படம் வெளியாவதற்கு முன்னரே நிரூபித்துவிட்டனர்.
ஆட்டோ சந்திரகுமார் என்பவர் தான் ஜெயிலில் அனுபவித்த சம்பவங்களை மையப்படுத்தி எழுதிய லாக்-அப் நாவலை மையப்படுத்தியே இப்படத்தை உருவாக்கியுள்ளார் வெற்றிமாறன். விசாரணைக்கு அழைத்துச் சென்று, பின்னர் காவல் நிலையத்தில் நிகழும் உண்மை நிகழ்வை அப்படியே படமாக்கியிருக்கிறாராம் இயக்குநர்.

கைதியாக அட்டகத்தி தினேஷ் நடித்திருக்கிறார். கிஷோர், சமுத்திரகனி, முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோர் இறுதியாக படத்தொகுப்பு செய்த படமும் இதுவே.
No comments:
Post a Comment