சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Jul 2015

தமிழகத்தில் புதிய மதுக்கொள்கை கொண்டு வரப்படும்: கொட்டும் மழையில் திருச்சியில் ராகுல் காந்தி உரை!

தமிழகத்தில் மக்கள் நலனுக்காக புதிய மதுக்கொள்கையை கொண்டு வருவோம் என திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்உரையாற்றிய ராகுல் காந்தி தெரிவித்தார்.
நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு வருகிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. அதன்படி, இன்று திருச்சியில் தமிழக விவசாயிகளை சந்தித்து அவர் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி,  தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து திருச்சி விமானம் நிலையம் வந்தார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருச்சி, பொன்மலை ஜி கார்னர் மைதானத்திற்கு மாலை 5.20 மணிக்கு ராகுல் காந்தி வந்தார். அவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தனர். ராகுல் காந்தி மேடைக்கு வருவதற்கு முன்பே அங்கு மழை பெய்ய ஆரம்பித்தது. இருப்பினும், ராகுல் காந்தியின் பேச்சை கேட்பதற்காக கொட்டும் மழையிலும் தொண்டர்கள் காத்திருந்தனர்.
பின்னர் மேடை ஏறிய ராகுல் காந்தி, கொட்டும் மழையில் நனைந்தபடியே தமிழில் 'வணக்கம்' எனக் கூறி உரையாற்றினார். அப்போது, ''தமிழக மக்களிடம் உரையாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. காமராஜரால் முதல் முறையாக பள்ளிக்கு செல்லும் வாய்ப்பு பலருக்கு கிடைத்தது.
ஏராளமானோர் நல்ல வேலை வாய்ப்பு கிடைத்து, சிறப்பாக வாழ வழிவகுத்தவர் காமராஜர். எனது குருநாதர் காமராஜர் எல்லோருக்கும் குரல் கொடுத்தார். எல்லோருடைய குரலையும் மதித்தார். இன்று ஆட்சியில் இருப்பவர்கள் மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிப்பதில்லை. பிரதமராக, முதல்வராக மக்கள் விருப்பம் அறியாது ஆட்சி நடத்த முடியும் என நினைக்கிறார்கள்.

தமிழகத்தில் மிக முக்கியமான பிரச்னையாக வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளது. இங்கு மூன்றில் ஒருவருக்கு வேலையில்லை. அதேபோல், தமிழக அரசு இளைஞர்களின் குரலை கேட்பதில்லை'' என ராகுல் காந்தி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் திடீரென மைக் கட்டாகி விட்டது.

இதனால், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் பெரும் கூச்சலிட்டனர்.

மீண்டும் மைக் இணைப்பு கிடைத்ததும் தனது உரையை தொடர்ந்த ராகுல், ''தமிழகத்தில் மிக முக்கியமான பிரச்னையாக வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளது. இங்கு மூன்றில் ஒருவருக்கு வேலையில்லை.

தமிழக அரசின் மதுக்கொள்கையால்  குடும்பங்கள் சீரழிந்து வருகிறது. மது விற்பனையாளர்களுக்கு மட்டுமே தமிழக அரசு செவிசாய்க்கிறது. ஆனால், இளைஞர்களின் குரலை கேட்பதில்லை. 

தமிழகத்தில் சென்ற ஆண்டு மட்டும் மது விற்பனை மூலம் ரூ. 30 ஆயிரம் கோடி வருமானம் அரசுக்கு கிடைத்துள்ளது. குடிப்பவர்கள் ஆண்டுக்கு தலா ரூ.10 ஆயிரத்தை அரசு மற்றும் மது நிறுவனங்களுக்கு தருகிறார்கள். தமிழக பெண்களின் வலியை, கஷ்டத்தை நான் உணர்ந்துள்ளேன். மதுவால் சீரழியில் குடும்பங்களின் கஷ்டத்தை தீர்ப்போம். தமிழகத்தில் மக்கள் நலனுக்காக புதிய மதுக்கொள்கையை கொண்டு வருவோம்'' என்றார்.
'2, 3 தொழிலதிபர்களுக்காக ஆட்சி நடத்தும் மோடி'

பொதுக்கூட்ட  உரையை முடித்த  ராகுல்காந்தி, சுமார் 6.30 மணியளவில் 145 விவசாயிகளுடன் திருச்சி ஜே.கே. நகரில் கலந்துரையாடினார். அப்போது விவசாயிகளின் குறைகளை அவர் கேட்டறிந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறுகையில், ''இரண்டு, மூன்று தொழிலதிபர்களுக்காக பிரதமர் மோடி அட்சி நடத்துகிறார். விவசாயிகளின் சக்தி என்னவென்று பிரதமர் மோடிக்கு தெரியவில்லை. விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை தடுப்போம்'' என்றார்.


No comments:

Post a Comment