ஸ்கூட்டி க்யூட்டிகள், இப்போது பைக் ப்யூட்டிகள். இண்டிகேட்டர் போட்டுத் திரும்ப மாட்டாங்க; தரையில் காலால் பிரேக் போடுவாங்கனு பெண்கள் டிரைவிங் பற்றி ஒரு பக்கம் கேலிகள் ஓடிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பைக்கில் சீறிப் பறக்கிறார்கள் மில்லினியம் பெண்கள்!
யமஹா ஆர்15, ராயல் என்ஃபீல்டு புல்லட், கேடிஎம் 200 என பைக்குகள் மட்டும் அல்ல; அதை ஓட்டும் பெண்களும் அழகாகவே இருக்க, அசென்மென்ட் ஓகே ஆகாமல் இருக்குமா என்ன? சென்னை பெசன்ட் நகரில் பைக் கேர்ள்ஸைச் சந்தித்தேன்.
‘‘நான் தீவிரமான ‘தல’ ரசிகை. அவரை மாதிரியே ஏதாச்சும் பண்ணணும்னு ரொம்ப யோசிச்சப்ப, சிக்கின ஐடியாதான் இந்த பைக் அவதாரம். நான் பைக் ஓட்டுறதுக்கு முதல்ல க்ரீன் சிக்னல் காட்டினதே எங்க அம்மாதான். ‘உன் அண்ணா பைக் சும்மாதானே இருக்கு, எடுத்து ஓட்டு’னு சொன்னாங்க. எனக்கு பைக் ஓட்ட அவ்வளவு பிடிச்சிருக்கு. சிலர் ‘செமயா ஓட்டுறே’னு ‘தம்ஸ் அப்’ காட்டுவாங்க... சிலர் ‘உங்களுக்கெல்லாம் எதுக்கு பைக்?’னு கமென்ட் அடிப்பாங்க. நான் பாட்டுக்கு கியர் மாத்திக்கிட்டுப் போயிட்டே இருப்பேன்!” என்று சொல்லும் ஈவ்லினுக்கு, பைக் ரேஸராக வேண்டும் என்பது கனவு.
“எனக்கு காலேஜ்ல ஒரு ஃபேன் கிளப்பே இருக்கு. பசங்க ‘பைக்தான் எங்களோட முதல் காதலி’னு ஓவரா ஃபீல் பண்ணுவாங்க. ஆனா, பைக்கை ஒழுங்கா துடைக்கக்கூட மாட்டாங்க. பைக்னாலே பறக்கணும்னு வெறி பிடிச்சுத் திரிவாங்க. எங்களுக்கு அந்தப் பதற்றம் இல்லை. பைக்கை உண்மையாவே லவ் பண்றோம். அனுபவிச்சு ஓட்டுறோம்!” என்று சொல்லும் சுஜி, சென்னை சிட்டிக்குள் கேடிஎம் பைக்கில் தடதடக்கிறார்.
“பைக் ஓட்ட எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணது என் அண்ணன்தான். யார் சொல்றதையும் கேட்காதே, நேரா ரோட்டைப் பார்த்து ஓட்டுனு சொன்னான். பாய்ஸ்லயும் எங்க அண்ணனை மாதிரி சில நல்லவங்க இருக்காங்க!” என்கிற பட்பட் புல்லட் மஹாவுக்கு, எப்படியாவது தன் கனவு பைக்கான ஹார்லி டேவிட்சனை வாங்கிவிட வேண்டும் என்பது லட்சியம்.
“என்னோட பதினெட்டாவது பிறந்த நாளுக்கு நான் பண்ணின ரெண்டு முக்கியமான விஷயம்: ஒண்ணு, லைசென்ஸ் வாங்கினது; இன்னொண்ணு, ஆர்15 புக் பண்ணுனது. இந்த மஹாதான் நமக்கு இன்ஸ்பிரேஷன். அவங்க புல்லட் ஓட்டுறதைப் பார்த்தே நானும் பைக் ஓட்டணும்னு முடிவு பண்ணி பைக் வாங்குனேன். ஸ்கூட்டர் ஓட்டுறதெல்லாம் எங்களைப் பொறுத்தவரை பாவாடை தாவணி போட்டுட்டு காலேஜுக்கு வர்ற மாதிரி. ஜீன்ஸ் கேர்ள்ஸுக்கு பைக்தான் பெர்ஃபெக்ட் மேட்ச்!” என்கிறார் தீபிகா.
கெட் ரெடி கேர்ள்ஸ்!
No comments:
Post a Comment