ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் வீட்டு தோட்டத்தில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளை ஆஸ்திரேலிய போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்று வருகிறது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் தனது மனைவி கரினா மற்றும் குழந்தை மியாவுடன் இங்கிலாந்தில் உள்ளார். இந்நிலையில் ஆஸஷ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டியில் பிராட் ஹாடின் விளையாடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக பிராட் ஹாடின் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று சொல்லப்பட்டது.
இந்த நிலையில் சிட்னி நகரில் டென்னிஷன் பாயின்ட் பகுதியில் உள்ள பிராட் ஹாடின் வீட்டில் வெடி குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 3.15 மணியளவில் இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டுளது. வீட்டிலேயே தயாரிக்கப்படும் வெடிகுண்டு ரகம் என்றும் ஐ.ஈ.டி என்று அழைக்கப்படும் வெடி பொருட்கள் அடங்கியது என்றும் ஆஸ்திரேலிய போலீசின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஹாடின் வீட்டில் இருக்கும் போதே இந்த குண்டு வைக்கப்பட்டுள்ளது என்றும் ஆனால் அது வெடிக்காமல் போனதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள பிராட் ஹாடினுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டதும் மிகவும் மனம் உடைந்து போய் விட்டராம். அதனால்தான் 2வது டெஸ்ட் போட்டியில் ஹாடின் பங்கேற்கவில்லை. அதோடு கடந்த 2012ஆம் ஆண்டு பிராட் ஹாடினின்13 வயது மகள் மியாவுக்கு புற்று நோய் தாக்கியிருந்தது. சிகிச்சை அளிக்கப்பட்டதும் மியா குணமடைந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு சென்ற நிலையில் ஹாடின் மகளுக்கு மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டதால், தற்போது இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு சென்ற நிலையில் ஹாடின் மகளுக்கு மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டதால், தற்போது இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment