லங்கை அணியின் தொடக்க வீரர் குஷால் பெரைரா 17 பந்தில் அரை சதமடித்து சாதனை படைத்தார். கிரிக்கெட் வரலாற்றில் மிக விரைவாக அடிக்கப்பட்ட இரண்டாவது அரை சதம் இது.
பாலேகால் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி, 287 ரன்கள் எடுத்தது. அடுத்து இலங்கை அணி பேட் செய்யத் தொடங்கியது. இதில் குஷால் பெரைரா பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். வெறும் 17 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதில் 11 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். இந்த 17 பந்துகளில் 3 பந்துகளை மட்டுமே பெரைரா வீணடித்தார். ஒரே ஒரு ரன்தான் பெரைரா ஓடியும் எடுத்தார்.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிக விரைவாக அடிக்கப்பட்ட 2வது அரை சதம் ஆகும். இறுதியில் 25 பந்துகளில் 68 ரன்களில் பெரைரா அவுட் ஆனார். இதற்கு முன் தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 16 பந்துகளில் அரை சதமடித்ததுள்ளார். சனத் ஜெயசூர்யா, பாகிஸ்தான் அணிக்கு எதிராக 17 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளனர்.
இந்த போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

No comments:
Post a Comment