கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலுக்கும் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் தொடர்ச்சியான கிரிக்கெட் மற்றும் ஸ்குவாஷ் போட்டிகளால் திருமணம் தள்ளிப் போய் கொண்டு வந்தது.
இந்நிலையில், அடுத்த மாதம் இவர்களது திருமணத்தை நடத்த பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். தீபிகா பல்லிகல் கிறுஸ்துவர் என்பதால், முதலில் ஆகஸ்ட் 18ஆம் தேதி சென்னையில் கிறுஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெறுகிறது. தொடர்ந்து 20ஆம் தேதி தினேஷ் கார்த்திக் இந்து முறைப்படி தீபிகா பல்லிகல் கழுத்தில் தாலி கட்டுகிறார்.
இருவருமே விளையாட்டுத்துறையை சேர்ந்த பிரபலங்கள் என்பதால் ஏராளமான கிரிக்கெட் வீரர்கள், விளையாட்டு வீரர் , வீராங்கனைகள் இந்த திருமணத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment