சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Jul 2015

தமிழ் தெரிந்த நடிகைகளோடு நடிப்பது எளிது- விக்ரம்பிரபு பேட்டி

விஜய் இயக்கத்தில் விக்ரம்பிரபு, கீர்த்திசுரேஷ் நடித்திருக்கும் இதுஎன்னமாயம் படம் ஜூலை 31 அன்று வெளியாகவிருக்கிறது. இப்படம் பற்றி தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் விக்ரம்பிரபு.
இந்தப்படத்தின் கதையை இயக்குநர் விஜய் சொன்னவுடனேயே எனக்குப் பிடித்திருந்தது. பிரிந்துபோன காதலர்கள் சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும்போது என்னவெல்லாம் நடக்கிறது என்கிற சுவாரசியமான கதை படத்துக்குப் பலம். 

வெள்ளைக்காரதுரை படத்தை முடித்துவிட்டு இந்தப்படத்தின் படப்பிடிப்புக்கு வந்தேன். அந்தப்படத்தில் சத்தமாகப் பேசிக்கொண்டிருப்பேன். அந்தப் பழக்கமே இந்தப்படத்தின் படப்பிடிப்பிலும் தொடர்ந்தது. இயக்குநர் விஜய் படங்களைப் பற்றி உங்களுக்கே தெரியும். தேவைக்கதிமாகப் போகவும் விடமாட்டார், குறைவானாலும் விடமாட்டார்.

சரியான மீட்டரில் இருக்கவேண்டும் என்பதற்காக மெனக்கெடுவார். முதலில் சில நாட்கள் அதனால் கஷ்டப்பட்டோம். அதன்பின் அது நன்றாகப் பழகிவிட்டது. மாயம் என்றதும் மேஜிக் செய்கிறவர் என்கிறமாதிரி தோற்றம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அரியசெயல்களை மேஜிக் என்று சொல்வோம். அதுபோலத்தான் இந்தப்படத்திலும் நடக்கிறது.

இது உணர்வுப்பூர்வமான காதல்கதை. மாயம் என்பதற்குக் காதல் என்று சொல்வதுகூடப் பொருத்தமாக இருக்கும். இந்தப்படம் நிச்சயம் பேசப்படும் என்று சொல்வேன்.
இந்தப்படத்தில் எனக்கு ஜோடியாக நடித்த கீர்த்திசுரேஷ் மிகவும் திறமையானவர். அவர் ஏற்கெனவே மலையாளத்தில் நல்லபடங்களில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பிலும் இயக்குநர் சொன்னதைக் கற்பூரம்போல் பற்றிக்கொண்டு உடனே செய்துவிடுவார். 

என்னோடு நடித்த நடிகைகள் எல்லோருமே திறமைசாலிகன்தாம். லட்சுமிமேனன், பிரியாஆனந்த் ஆகியோருடன் பணியாற்றியதும் எளிதாக இருந்தது. இவன்வேறமாதிரி படத்தில் சுரபியோடு வேலை செய்யும்போது கொஞ்சம் சிரமப்பட்டோம்.
அதற்குக் காரணம் அவருக்குத் தமிழ் தெரியாததுதான். மொழி தெரியாத காரணத்தால் கேமிரா முன் நிற்கும்போது உடல்மொழி மாறிவிடும். மிகவும் இறுக்கமாக இருப்பார். பல நேரங்களில் இயக்குநர் ரிலாக்ஸ் சுரபி என்று சொல்வார். தமிழ் தெரிந்த நடிகைகளோடு நடிப்பது எளிதாக இருக்கும்.

படத்துக்குப் படம் வித்தியாசமாக நடிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். இந்தப்படத்துக்குப் பிறகு வாகா படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். அதில் என் தோற்றம் வேடம் எல்லாம் புதிதாக இருக்கும்.No comments:

Post a Comment