சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Jul 2015

சத்யராஜ் நடிக்கும் நைட்ஷோ படத்தின் கதை !

தென்னிந்தியாவின் சிறந்த படத்தொகுப்பாளர்களில் ஒருவர் ஆண்டனி. தமிழின் முன்னணி இயக்குநர்களான முருகதாஸ், ஷங்கர், கெளதம் மேனன், விஜய், லிங்குசாமி உள்ளிட்டவர்களின் படங்களுக்கு படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்தவர். இப்போது இயக்குநராக அவதாரமெடுத்திருக்கிறார்.
மலையாளத்தில் ஜாய் மேத்தியூவின் இயக்கத்தில் லால், ஸ்ரீநிவாசன் நடிப்பில் வெளியாகி பாராட்டப்பட்ட படமான “ஷட்டர்” படத்தின் ரீமேக்கே “நைட் ஷோ”. இப்படத்திற்கு திரைக்கதை, இயக்கம் மற்றும் எடிட்டிங் பணிகளை ஆண்டனியே செய்திருக்கிறார். சத்யராஜ், வருண், அனுமோல் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஷூட்டிங், டப்பிங் பணிகள் முடிவடைந்து ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகவிருக்கிறது. 


நைட்ஷோ படத்தின் கதையாவது, “ சிங்கப்பூரில் வேலை செய்துக் கொண்டிருக்கும் சேகர் (சத்யராஜ்), தன் சொந்த ஊரான சென்னைக்கு விடுமுறைக்காக வருகிறார். தன் வீட்டிற்க்கு அருகில் இருக்கும் தனக்கு சொந்தமான கடைகளில் ஷட்டர் மூடிய ஒரு கடையை தவிர அனைத்து கடைகளையும் வாடகைக்கு விட்டு வந்திருந்தார்.

விடுமுறையில் வந்திருக்கும் சேகர் தன் நன்பர்களுடன், தினமும் இரவில் மது அருந்துவதை பழக்கமாக வைத்திருந்தார்.  திடீரென்று ஒரு நாளில், சேகரின் நண்பன் சூரி (வருண்), ஆட்டோ ஓட்டுனரான அவன் சேகரை தங்கம் (அனு மோல்) என்னும் விபச்சாரியுடன் ஷட்டர் மூடிய கடையில் அடைத்து விடுகின்றான். அவர்கள் இருவரும் ஆனந்தமாய் இரவைக் கழிப்பதற்காக, சூரி, அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் ஷட்டரை திறந்து விடுவதாக நம்பிக்கை தெரிவிக்கிறான். 

சூரி காலையில் வராததால், சேகரும் தங்கமும் ஷட்டர் மூடிய கடையில் இரண்டு நாட்கள் கழிக்க நேரிடுகிறது. இந்தச் சம்பவத்தால் தனது நல்ல பெயரையும் குடும்ப பெருமையையும் இழந்து விட நேரிடுமோ என்று சேகர் அச்சம் கொள்கிறார். அதே இடத்திற்குள் எதிர்பாராத விதமாக திரைப்பட இயக்குனர் சேது பாரதி (யூகி சேது) தனது திரைக்கதையைத்  தொலைத்து விட்டுத் தவித்து கொண்டிருக்கிறார். 

அடைக்கப் பட்ட கடையின் ஷட்டர் திறக்கப்பட்டால் சேகரின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாற நேரிடும் ஆனால் அதே சமயத்தில் கஷ்டத்தில் இருக்கும் சேது-வின் வாழ்க்கையோ சந்தோஷமாய் மாற நேரிடும். இறுதியாக கடையின் ஷட்டர் யாருக்குச் சாதகமாகத் திறக்கப்படவிருக்கிறது என்பதை நோக்கிக் கதை பயணிக்கிறது.



No comments:

Post a Comment