சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Jul 2015

நேற்று ஹெல்மெட்... இன்று வேகக் கட்டுப்பாட்டு கருவி... நாளை?

க்களின் உயிர் மேல் அக்கறை கொண்ட நீதிமன்றம், வேகமாக வாகனம் ஓட்ட வைக்கும் போதை சரக்கு விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடாமல், கட்டாய  ஹெல்மெட் சட்டம் மூலம் உயிர் காக்கவும், அதற்கு அடுத்த கட்டமாக தற்போது, வேக கட்டுப்பட்டு கருவியும் பற்றி ஆலோசித்து வருகிறது. நேற்று பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவியை ஏன் பொருத்தக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தலைக் கவசமும், வேகக் கட்டுபாட்டு கருவியும் உயிர் போக்கும் வகையிலான அசம்பாவிதத்தையும், விபத்தையும் தடுக்கும் என்றாலும்  அடிப்படையான பிரச்னைகளான அதிவேகம் கொண்ட வாகனத்தை தடை செய்யாமலும், வாகனப் பெருக்கமும், வாகன நெரிசல் தரும் சாலைகளை சீர் செய்யாமல் விபத்துக்களை தவிர்ப்பது முடியாத ஒன்றாகும். வேகம் இல்லாத வாகனம் மோதினாலும் தலை தவிர நெஞ்சில் அடிபட்டு உயிர் போவதும், உயிர் இழப்பிற்கு நிகரான கை, கால் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க இயலாது.


மாதந்தோறும் பலசரக்கு மளிகை சாமனுக்கு பணம் ஒதுக்கும் வகையில் 'நீதிமன்ற உத்தரவுச் செலவு' என தனியாக பணம் ஒதுக்கும் அளவிற்கு நீதிமன்றம் வாகன ஓட்டிகளுக்கு ஏதாவது ஒரு பொருளை வாங்கி மாட்டச் சொல்வது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. நேற்று ஹெல்மெட், இன்று வேகக் கட்டுப்பாட்டு கருவி, நாளை சுத்தமான காற்று கிடைக்காத காரணத்தால் மூக்கில் மாட்டும் சுவாசக் காற்று கருவி கவசம் வருமா என்று தெரியவில்லை.

இப்போது தான் அறுநூறு ரூபாய் மதிப்புள்ள ஹெல்மெட்டை இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் போட்டி போட்டு வரிசையில் நின்று வாங்கிய ஹெல்மெட் பிரச்னை ஓய்வதற்குள் நான்கு சக்கர வாகனங்களுக்கு களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி என்ற புது சட்டம் விரைவில் எப்போது வரும் என்று தெரியவில்லை.

இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்கள் அதிவேகம் கொண்ட வாகனத்தால் அவர்கள் சம்பாதிப்பதோடு  நிற்கவில்லை. அந்த வண்டியின் மூலம் ஏற்படும் வாகன விபத்தால் உயிர் இழப்பும், அரசுக்கு வீண் செலவும், ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவையும் தருகிறார்கள் என்ற உண்மை மறுக்க முடியாது. வண்டியின் வேகம் (சிசி) கூடும் போது வாகனத்தின் எரி பொருள் செலவு அதிகமாகும். நாட்டிற்கு இழப்பை ஏற்படுத்தும் இந்த வாகனத் தயாரிப்பாளர்களை ஒரு கேள்வி கூட கேட்காத நீதிமன்றம் பொதுமக்களை தலைக்கவசம், வேகக் கவசம், மூக்குக் கவசம், கழுத்துக் கவசம், கிட்னி கவசம் என்ற பட்டியல் கொடுத்து விடுமோ என்ற பயம் உள்ளது.
ஆண்டுக்காண்டு விபத்தின் எண்ணிக்கை கூடும் நிலையில் சுமார் 25 ஆண்டுக்குப் பிறகு சாலை போக்குவரத்து அமைச்சகம், சென்ற  வருடம் விபத்தில் முதலிடம் வகிக்கும் இரு சக்கர பைக்குகள் தேசிய நெடுஞ் சாலைகளில் 80 கி.மீ. வேகத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பேருந்து 80 கி.மீட்டரும், எட்டு பேர் செல்லும் கார்கள் 100 கி.மீ. வேகத்திலும் செல்ல அனுமதித்துள்ளது. ஆனால், மக்கள் செல்லும் பயணிகள் பேருந்து, தனியார் பேருந்து 100 கி.மீ. வேகத்தில் எமனுக்கு வணக்கம் சொல்லும் வகையில் வேகமாகச் செல்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமல்லாமல், உள்ளூர் சாலைகளிலும், மாநிலச் சாலைகளிலும் அதே வேகத்தில் அனைத்து வாகனமும் செல்வது நாம் காணும் விபத்துச் செய்திகள் சொல்லும் உண்மை.

வேகக் கட்டுப்பாட்டு கருவியை பொருத்துவதற்கு பதில் கார்கள் 80 கி.மீ.க்கு மேல் செல்ல முடியாத வகையில் வாகனத்தை தர முடியாதா? இரு சக்கர வாகனம் 50 கி.மீ. வேகத்திற்கு மேல் செல்ல முடியாதபடி வாகன என்ஜின் வேகத்தை குறைக்கலாமே. நமது சாலை உள்ள அவலத்திற்கு கூடுதல் சிசி உள்ள பைக்குகள் பெட்ரோலை காலி செய்து விடும். மேலும், அதிவேகம் ஓட்டிச் செல்ல நாம் ஒன்றும் அமெரிக்காவில் இல்லை. வேகம் அதிகமாகி விபத்தும், நாட்டிற்கு எரி பொருள் இறக்குமதி செலவும் கூடுவதை நீதிமன்றம் ஏன் அனுமதிக்க வேண்டும்.

பல கோடிகள் சம்பாதிக்கும் நிறுவனங்களை வாகன வடிவமைப்பில்  மாற்றம் கொண்டு வர செய்யாமல் அவர்களை கட்டுப்படுத்தாமல் கடன் வாங்கி காரும், பைக்கும் ஓட்டுபவர்களுக்கு நீதிமன்றம் சட்டம் கொண்டு வருவது, சட்டம் நடுத்தர மக்களுக்குத் தான் சொந்தமா என்று கேள்வி கேட்க வைக்கிறது.

மக்கள் நீதிமன்றத்திடம் எதிர்பார்ப்பது என்ன?

1. விபத்தில் சிக்காமல் சீக்கிரம் சாகும் டாஸ்மாக் குடி பிரியர்களை நீதிமன்றம் அக்கறை கொண்டு மதுக்கடைகளை மூட வேண்டும். முடியாத பட்சத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் குறைந்த பட்சம் ரூ.50 ஆயிரமாக இருக்க வேண்டும்.
2. விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த அவசரம் காட்டுவது போல வாகன நெரிசலுக்கு சாலையை அகலப்படுத்தவும், பேருந்துகள் நிறுத்த தனியாக பஸ் பே ஏற்படுத்த முக்கியமான நெரிசல் மிகுந்த சாலைகளில் இடங்களை அரசு கையகப்படுத்த வேண்டும்.

3. வேகம் குறைந்த வண்டியை மட்டும் ஓட்டும் அளவிற்கு வாகன வடிவமைப்பை சீர் செய்யவும், வேகம் அதிகமுள்ள வண்டிக்கு தடையும் வேண்டும்.

4. ஹெல்மெட் தரம் பற்றி சொன்ன நீதிமன்றம் சாலைகளின் தரம் பற்றி இதுவரை ஏன் கேள்வி கேட்கவில்லை.

 5. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே ஷேர் ஆட்டோக்கள் நகருக்குள் இயங்க அனுமதிக்க வேண்டும்.

6. பாதசாரிகள் நடக்கும் நடை மேடைகள் பல நகரங்களில் காணாமல் போய் விட்டதால் நடைபாதை பயணிகளால் நெரிசல் ஏற்படுகிறது.
No comments:

Post a Comment