சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Jul 2015

கோலிவுட் டைரி- 4 விரலாட்டும் தம்பு... கொலவெறி ஒல்லி...!

எம்.ஜி.ஆரின்  'நாடோடி' படத்தில் கண்ணதாசன் 'முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள் முதுகுக்கு பின்னால் சீறும்... முகஸ்துதி பேசும் வளையும் குனியும் காரியம் ஆனதும் மாறும்..." என்று பாடல் எழுதியிருப்பார் அது அத்தனையும் அக்மார்க் உண்மை என்பதை நிரூபித்து வருகிறார், ஒல்லி நடிகர். சென்ற வருஷம் ஒரே மேடையில் இருவரும் தோன்றி,  "நீங்க நினைக்கிற மாதிரி நாங்க சண்டை போட்டுக்கலை  நண்பர்கள்" என்று நெய் மணக்க, முந்திரி தெறிக்க அல்வா கொடுத்து சகலரையும் சர்க்கரை நோயாளி ஆக்கினர். 

அடுத்து கடந்த சில மாதங்களில் பாஞ்சாலி நிறுவனம், வெளிச்ச டிவியில் ஸ்டார் நைட் நடத்தியது. அப்போதும் ஒல்லியும்,விரலும் ஒன்றாக மேடையேறி ஒற்றுமையை நிலை நாட்டினர்.

ஒல்லியுடன் அண்ணாத்தே படத்தில் விரல் நடிக்கிற அளவுக்கு சமாதானக்கொடி சடசடவென பறந்தது. இரவுப் பொழுதில் இருவரும் ஆல்கஹால் குளத்தில் குளிக்கும் ரேஞ்சுக்கு அன்பு பரிமாற்றம் எகிறியது.  'கோழி முட்டை'  படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க விரலை அழைத்தார், ஒல்லி. அன்பாக சென்று பண்பாக நடித்துவிட்டு வந்தார் விரல்.  ஏற்கெனவே முருங்கைக்காய் நடிகர் பட டைட்டிலில் விரல் நடித்து வருகிறார். "இந்த படத்துல ஒல்லி ஒரு பாட்டு பாடினா நல்லா இருக்கும்" என்று டைரக்டர் கூடல்நகர அரசர் தெரிவித்தார். 'நான் சொன்னேனு கேளுங்க. கண்டிப்பா பாடுவார்" உறுதிபட கூறினார், விரல். டைரக்டரும் அப்படியே கேட்க "யாரைக் கேட்டுக்கிட்டு நீங்க முடிவு எடுத்தீங்க"  என தாம் தூமென்று எகிறி குதித்தார், ஒல்லி.


என்னதான் ஆச்சு ஒல்லிக்கு?  ஒற்றர்கள் மூலம் கேட்டார், விரல். "நீங்க ஒரு தடவை உற்சாகத்தோட உச்சத்துல இருக்கும்போது,  பழைய காதல் விவகாரத்தை ஏடாகூடமா பேசினதை கேட்டு  ஒல்லி உஷ்ணமாயிட்டார்" என்று விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள். அதன்பின் விரல்மீது  ஒல்லிக்கு  உச்சக்கட்ட கோபம். 'உன்னை என்ன செய்கிறேன் பார்.." என்று விழாத தொப்பையை தடவி வீரச் சபதம் எடுத்துக் கொண்டார், ஒல்லி. 

'அரட்டை' படத்தை  இந்த மாசத்தின் ஒரு தேதியில்  வெளியிட அறிவித்தார், விரல். அதேநாளில் 'மழை' படத்தையும் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று அடம்பிடித்தார், ஒல்லி. "சாட்டிலைட் இன்னும் விற்கவே இல்லையே  அதுக்குள்ளே எப்படி ரிலீஸ்...?" என்று கையை பிசைந்தது படத்தை தயாரித்த பாஞ்சாலி நிறுவனம். "நானே வாங்குறேன்" என்று சொந்தமாக வாங்கிக் கொண்டார்.

தமிழ்நாட்டில் என்னென்ன பெரிய தியேட்டர்கள் இருக்கிறதோ அங்கெல்லாம்  'மழை' ரிலீஸாக மடமடவென இறங்கிய ஒல்லி,  முன்கூட்டியே ஒப்பந்தமும் செய்தார். தமிழகத்தில் தியேட்டரை புக் செய்யாமல் வெறும் பத்திரிகை விளம்பரத்தோடு நிறுத்திக் கொண்டார், விரல். சொன்ன தேதியில் 'அரட்டை' வெளிவராததால் சுணங்கி  போனார், விரல்.  

தனது 'மழை' படம் ரிலீஸாகும் சந்தோஷத்தைவிட விரல் நடிகரின் படம் வெளிவராததில் ஒல்லி நடிகருக்கு உற்சாகம், சந்தோஷம் தாங்கமுடியவில்லை,  தனது சக நண்பர்களுக்கு போன் போட்டு அழைத்தார், சல்பேட்டா விருந்து கொடுத்து சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்.



No comments:

Post a Comment