பாகுபலியின் வெற்றிக்கு நன்றி சொல்ல சென்னை வந்திருந்தார் பிரபாஸ். அவரிடம் இந்தப்படஅனுபவங்கள் பற்றிக் கேட்டபோது, இந்தப்படத்துக்காக இரண்டரை ஆண்டுகளுக்கும் மேல் கடுமையாக உழைத்தோம், இப்போது எல்லா மொழிகளிலும் படம் நன்றாகப் போகிறது என்பதைப் பார்க்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இது எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப்பெண் படம் போல இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
சூப்பர்சார் எம்ஜிஆர் மாதிரி ஒரு பெரியஸ்டார் படம் மாதிரி என் படமும் இருக்கிறதென்றால் சந்தோசம்தானே சார்.
இந்தப்படத்தில் சத்யராஜ் தலையில் கால்வைக்கும் காட்சியில் நடித்தது எப்படி?
சத்யராஜ் சாருடன் எற்கெனவே ஒருபடத்தில் நடித்திருக்கிறேன். அந்தப்படத்தில் அவர் எனக்கு அப்பா. அந்தப்படம் சூப்பர்ஹிட். இந்தப்படத்தில் இந்தக்கேரக்டரில் சத்யராஜை நடிக்கவைக்கலாம் என்றிருக்கிறேன் என்று ராஜமௌலி சொன்னவுடன் எனக்குப் பதட்டமாகிவிட்டது. இப்படி ஒரு சீன் இருக்கிறது, அப்படியிருக்கும்போது அதை அவரிடம் எப்படிச் சொல்வாரோ என்று பயந்து, அந்தசீனைப் பற்றி அவரிடம் சொல்லாதீர்கள் என்று ராஜமௌலியிடம் சொன்னேன்.

அவரோ, சொல்லிப்பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டார். இன்னொருபக்கம், சத்யராஜ் சார் எனக்குப் போன் பண்ணி, ராஜமௌலி கதை சொல்ல வருகிறார், அது எப்படி இருக்கும்? நான் என்ன சொல்லட்டும்? என்று கேட்டார். எனக்கு என்ன சொல்வதெனற்தெரியவில்லை, கதையைக் கேளுங்கள் சார் என்று மடும் சொன்னேன். அதன்பின் கதையைக் கேட்டுவிட்டு, கதைக்கும் காட்சிக்கும் மிகப்பொருத்தமாக இருக்கிற இந்தக்காட்சி அப்படியே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார். ஆனாலும் அந்தக்காட்சியைப் படமாக்குகிற நாளில் எனக்குக் காய்ச்சல்வராதகுறைதான்.
நேரடித்தமிழ்ப்படங்களில் நடிப்பீர்களா?
ஏன் நடிக்காமல்? பொருத்தமான பிராஜெக்ட் அமைந்தால் உடனே நடிப்பேன்.
தமிழில் எந்த இயக்குநரின் இயக்கத்தில் நடிக்க விருப்பம்?
தமிழில், சிறந்த இயக்குநர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். ஷங்கர், கௌதம்மேனன் உட்பட நிறைப்பேர் இருக்கிறார்கள்.
இரண்டாம்பாகம் எப்போது? எடுத்து முடித்துவிட்டீர்களா?
கண்டிப்பாக 2016 இல் வந்துவிடும் என்பதை மட்டும் இப்போது சொல்லமுடியும். இரண்டாமப்£கத்துக்கான 40 சதவித படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. மீதியை இனிமேல் படமாக்கவிருக்கிறோம்.
இரண்டாம்பாகத்தின் கதையில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா?
அடிப்படைக்கதையில் மாற்றங்கள் இருக்காது, முதல்பாகத்தின் இவ்வளவு பெரிய வெற்றி காரணமாகக் காட்சிகளில் சில மாற்றங்கள் இருக்கலாம்.
இந்தப்படத்தில் நடிப்பதற்காக நீங்கள் எவ்வளவு படங்களை இழந்திருப்பீர்கள்?
நிறைய இருக்கும். நான் இந்தப்படத்தில் இருக்கிறேன், இது முடிந்தபின்புதான் அடுத்தபடம் என்று தெரிந்து பலர் என்னை அணுகாமலே இருந்துவிட்டார்கள். அதையும் தாண்டி என்னை அணுகியதில் ஐந்து படங்களைத் தவிர்த்தேன்.

No comments:
Post a Comment