முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றது போல மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி பிரதமர் மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நாளை பீகார் மாநிலம் செல்கிறார். அங்கு பாட்னா மற்றும் முஸாபர் நகரில் நடைபெறும் இரண்டு பொதுக் கூட்டம் மற்றும் பேரணிகளில் கலந்து கொள்கிறார். விரைவில் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமரின் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், மோடி பாட்னா அல்லது முஸாபர்பூர் பயணத்தின் போது அவர் மீது மனித வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும், உஷாராக இருக்குமாறு மாநில போலீசார் மற்றும் சிறப்பு பாதுகாப்பு குழுவினரிடம் மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளதாக பீகார் மாநில மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
கடந்த 1991 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை மனிதவெடிகுண்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்ததை போன்று பிரதமர் மோடியை கொலை செய்ய பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்கு பயிற்சி பெற்ற பெண் மாவோயிஸ்ட் மனிதகுண்டாக மாறி இந்த தாக்குதலை நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பிரதமரின் பயணம் மற்றும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், செய்தியாளர், போலீஸ் அதிகாரி, எலக்ட்ரீசியன், தொழிலாளர் வேடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரதமர் வருகையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment