சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Jul 2015

10 ஆயிரம் ரன்களை கடந்து திலகரத்னே தில்ஷன் சாதனை!

ருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை அடித்து இலங்கை வீரர் திலகரத்னே தில்ஷன் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை எட்டிய 11வது வீரர் இவர் ஆவார்.

ஹம்பான்தொட்டாவில் இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதும் 5வது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் இலங்கை வீரர் திலகரத்னே தில்ஷன் 55 ரன்கள் எட்டிய போது ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். இலங்கை வீரர்களில் ஜெயசூர்யா, மகிலா ஜெயவர்த்தனே, சஙகக்காரா ஆகியோருக்கு பிறகு இந்த மைல்கல்லை எட்டிய வீரர் இவர்.

தற்போது 39 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் தில்ஷன் 318 சர்வதேச போட்டிகளில் விளையாடி 293வது இன்னிங்சில்  10 ஆயிரம் ரன்களை அடித்துள்ளார். அந்த வகையில் இலங்கை வீரர்களில் மிக விரைவாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் இவர்தான்.
இலங்கையை பொறுத்தவரை. அதிக வயதில் 10 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் இவர். இவரது 10 ஆயிரம் ரன்களில்  22 சதங்களும் 45 அரை சதங்களும் அடங்கும். அதிகபட்சம் 161 ரன்கள் ஆகும்.
சச்சின், சங்கக்காரா, ரிக்கி பாண்டிங், ஜெயசூர்யா,ஜெயவர்த்தனே, இன்சமாம்,காலீஸ், கங்குலி,ராகுல் டிராவிட், லாரா ஆகியோர் 10 ஆயிரம் ரன்களை கடந்த பிற வீரர்கள். 


No comments:

Post a Comment