சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Jul 2015

களமிறங்கிய சஞ்சு சாம்சன்... உற்சாகத்தில் மிதந்த கடற்கரை கிராமம்!

பொதுவாக கால்பந்து வீரர்களை இந்தியாவுக்கு அள்ளித்தருவதுதான் கேரளத்தின் வழக்கம். இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் ஐ.எம்.விஜயன், சத்யன் போன்றவர்கள் கேரளத்தில் இருந்து புறப்பட்டு வந்து இந்திய கால்பந்து களத்தை ஆண்டவர்கள், ரசிகர்கள் மனதை ஆக்கிரமித்தவர்கள். தற்போது கேரளா கொஞ்சம் கொஞ்சமாக கால்பந்து போல கிரிக்கெட் வீரர்களையும் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.
100 ஆண்டு கால இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கடந்த 1990களில்தான் முதன்  முதலில் இந்திய அணிக்காக ஒரு கேரள வீரர் களமிறங்கினார். வேகப்பந்துவீச்சாளரான அபே குருவிலாதான் அவர். அதற்கு பின் டினு யோகணன் வந்தார் ஆனால் இவர் சோபிக்கவில்லை. கடந்த 2002ஆம் ஆண்டு வாக்கில் ஸ்ரீசாந்த் இந்திய அணியில் இடம் பிடித்தார். ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அவரது கிரிக்கெட் வாழ்க்கையும் முற்று பெற்று விட்டது. அதற்கு பின் கேரளத்தை சேர்ந்த யாருக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியின் பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு காயம் காரணமாக அணியில் இருந்து விலக்கப்பட்டார். இதையடுத்துதான் கேரளத்தை சேர்ந்த சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இதனால், இந்திய அணிக்காக விளையாடும் 4வது கேரள வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றார். கடந்த 2012ஆம் ஆண்டு முதல் சஞ்சு சாம்சன் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்று வருகிறார். கடந்த ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய சஞ்சு அசத்தினார். இதனைத் தொடர்ந்தே இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது.

திருவனந்தபுரம் அருகில் விழிஞ்சம் பக்கத்தில் அரபிக்கடல் ஓரத்தில் உள்ள பலித்துரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சு . இந்த கிராமத்து மக்களின் முக்கிய தொழில் மீன் பிடிப்பதுதான். சஞ்சுவின் தந்தை, டெல்லி காவல்துறையில் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றியவர். விக்கெட்கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக கலக்கும் சஞ்சு நேற்று இந்திய அணிக்காக முதல் ஆட்டத்தில் அறிமுகமானதையடுத்து தமிழக வீரர் முரளி விஜய், அவருக்கு இந்திய அணியின் தொப்பியை வழங்கி வரவேற்றார்.

தொலைகாட்சியில் இதனை பார்த்த பலித்துரா கிராமத்தை சேர்ந்த மக்கள் சஞ்சுவின் வீட்டு முன் திரண்டு வாழ்த்து கோஷம் எழுப்பினர். கொல்லத்தில் நடைபெற்ற கேரள கிரிக்கெட் சங்க விழாவில் பங்கேற்க சஞ்சுவின் பெற்றோர் போய்விட்டதால், அவரது வீடு பூட்டி கிடந்தது. எனினும் வீட்டு முன் திரண்ட மக்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். 

சஞ்சு குறித்து கிராமவாசி ஒருவர் கூறுகையில், '' சஞ்சு அமைதியான பையன். எங்களது கிராமத்துக்கு புகழ் சேர்த்திருக்கிறான். அவன் மென்மேலும் வளர நாங்கள் பிரார்த்திப்போம் '' என்றார்.



No comments:

Post a Comment