சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Jul 2015

‘‘இரு சக்கர சொகுசு கார்!’’

பைக் ஆர்வலன் நான். பள்ளியில் படிக்கும்போதே பைக் சம்பந்தமான விஷயங்களைத் தேடித் தேடிப் படிப்பேன் அப்போதே CBZ வாங்கிவிட்டேன். இதுவரை 10 பைக்குகள் மாற்றியுள்ளேன். சுஸூகி ZXR, B-KING, இன்ட்ரூடர், ஹோண்டா 1000R ஆகிய நான்கு சூப்பர் பைக்குகள் வைத்திருந்தேன். இது, என் ஐந்தாவது சூப்பர் பைக்.
ஏன் ட்ரையம்ப் டைகர்?
நான் இதற்கு முன்பு வைத்திருந்தது நேக்கட் பைக். அது கரடுமுரடான பயணத்துக்கு ஏற்றபடி இருக்காது என்பதால், ஒரு அட்வென்ச்சர் பைக் வாங்க நினைத்தேன். அப்போதுதான் ட்ரையம்ப் டைகர் கண்ணில்பட்டது. நண்பர்களுடன் புதுச்சேரிக்குப் பயணம் சென்றிருந்தபோது, நண்பர் ஒருவர் இந்த பைக்கைக் கொண்டுவந்திருந்தார். பார்த்ததுமே பிடித்துவிட்டது. அப்போது புதுவை முதல் உளுந்தூர்பேட்டை வரை ஓட்டிப் பார்த்தேன். 800 சிசி பைக் என்றாலும், பவரும் ஓட்டும்போது கிடைக்கும் செளகரியமும் மிகவும் பிடித்துவிட்டன. எனவே, இதை வாங்க முடிவு செய்தேன்.

 ஷோரூம் அனுபவம்:
ட்ரையம்ப் டைகர் என முடிவானதுமே, சென்னையில் உள்ள ஹார்பர் சிட்டி மோட்டார்ஸுக்குச் சென்றேன். டெஸ்ட் டிரைவுக்கு ஏற்பாடு செய்தனர். எனக்கு ஏற்பட்ட எல்லா சந்தேகங்களையும் முழுக்கப் பூர்த்தி செய்தனர். கடந்த அக்டோபரில் புக் செய்தேன். நவம்பரில் பைக் டெலிவரி தந்தனர். அதேபோல, சர்வீஸ் பற்றி நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். போன் செய்தால், அடுத்த நாளே வீட்டுக்கே வந்துவிடுகின்றனர்.

எப்படி இருக்கிறது ட்ரையம்ப் டைகர் ?
இதை இரு சக்கர சொகுசு கார் என்றுதான் கூற வேண்டும். ஓட்டும்போது களைப்பு என்பது சுத்தமாகத் தெரியவில்லை. வாரந்தோறும் நண்பர்களோடு பைக்கில் 300 கி.மீ தூரம் வரை பயணம் செய்வேன். அப்படி இதுவரை பல பைக்குகளில் சென்றுள்ளேன். பயணத்துக்குப் பிறகு நிச்சயம் களைப்பாகிவிடுவேன். ஆனால், இதில் சென்றுவந்தபோது களைப்பே  இல்லை. பைக்கின் அபாரமான சக்தியினால் மிக எளிதாக 200 கி.மீ வேகம் வரை செல்ல முடிகிறது. சஸ்பென்ஸன் மிக அருமையாக இருப்பதால், மேடு பள்ளங்களில் மென்மையாகப் பாய்கிறது. பிக்அப் நன்றாக இருக்கிறது. பயணத்தின்போது ஒரே ஒருமுறை பஞ்சர் ஆகிவிட்டது. ட்யூப்லெஸ் டயர் என்றால், பிரச்னை இருந்திருக்காது. அது ஒன்றுதான் குறை. விண்ட் ஷீல்டு சிறிதாக இருந்தது. இப்போது அதனை நான் மாற்றியமைத்துளேன்.
ப்ளஸ்

800 சிசி இன்ஜின்கொண்ட இதில் பவருக்குப் பஞ்சமே இல்லை. பிக்அப் நன்றாக இருப்பதால், சில விநாடிகளிலேயே அதிக வேகத்தை எட்ட முடிகிறது. இது நகரத்துக்குள் ஓட்டும்போது கை கொடுக்கிறது. சீட்டிங் பொசிஷன் வசதியாக இருப்பதால், இதைக் கையாள்வதும் ஓட்டுவதும் தனி சுகம். இதில் சவாரி செய்யும்போது பாதுகாப்பாக உணர முடிகிறது. கீழே விழுந்தாலும்கூட சேதமடையாத அளவுக்கு உறுதியான கட்டமைப்பு கொண்டது. 13.5 லட்சத்தில் இவ்வளவு வசதிகளோடு சூப்பர் பைக் கிடைப்பது பெரிய ப்ளஸ். கரடுமுரடான சாலைகளிலும் சரி; ரேஸ் ட்ராக்கிலும் சரி; இரண்டிலும் இதை ஓட்ட முடியும். இதன் டிஸைனும் அருமையாக இருப்பதால், சாலையில் இதை ஓட்டிக் கொண்டு செல்லும்போது பலரையும் கவர்கிறது.
மைனஸ்
சூப்பர் பைக்கில் ட்ராக்ஷன் கன்ட்ரோல் கிடையாது என்பது குறைதான். அதேபோல ட்யூப்லெஸ் டயரும் இல்லை. இந்த இரண்டும்தான் பெரிய குறை. ஆனால், ஓட்டும்போது இதை அனைத்தையும் மறக்கடிக்கிறது ட்ரையம்ப் டைகர். கொடுக்கும் பணத்துக்கு ஏற்ற வசதிகளோடு, பாதுகாப்பான சூப்பர் பைக் வாங்க வேண்டும் என நினைப்பவர்கள், ட்ரையம்ப் டைகர் வாங்கலாம். சொகுசு காரில் பயணிப்பதைப் போன்ற அனுபவத்தை இந்த பைக் தரும்.



No comments:

Post a Comment