சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Jul 2015

படித்தால் மட்டும் போதுமா?

டித்துக்கொண்டிருக்கும் அனைவருக்குமே இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. படித்து முடித்தவர்களுக்கோ இது ஒரு புரியாத புதிர். காரணம் பள்ளியிலோ, கல்லூரியிலோ முதல் மாணவராக இருந்தபின்பும் வேலை கிடைக்காமையே. 

சிலருக்கு வேலை கிடைத்திருந்தாலும், நல்ல சம்பளம் இல்லை. காரணங்கள் என்ன என்று ஊர் உறவு எல்லாம் வந்து, வீட்டில் விளக்கம் கேட்டு, துக்கம் விசாரித்து செல்வதை கூனிக்குறுகி குடும்பம் எதிர்கொள்ளும். இதற்கெல்லாம் ஒரு முடிவில்லையா? என்று விவசாய நிலத்தை விற்று மகனையோ மகளையோ வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று ஏங்கும் ஊருக்கு ஒரு விவசாயியையேனும் காண இயலும்.

உண்மையில் நடப்பது என்ன? நம் வாழ்க்கை அவ்வளவுதானா? படித்து முடித்து, தன் இருபதுகளிலேயே குறைந்தது இருபதாயிரம் ரூபாயாவது சம்பளம் வாங்கிவிடலாம் என்று கனவு கண்டதெல்லாம் வெறும் கனவாகவே பொய்த்துவிடுமா? மீண்டும் அதே கேள்வி.. படித்தால் மட்டும் போதுமா?  இல்லை என்பதே இதற்கான விடை.

படித்தோம், பரீட்சை எழுதினோம் பாடத்தை விட்டுவிட்டோம் என்றால், நாம் படித்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். நியூட்டனின் மூன்றாம் விதி நம் எல்லோருக்கும் தெரிந்ததே. அதை எதில் பயன்படுத்தலாம் என்று யாராவது என்றாவது யோசித்ததுண்டா? சரி எதில் பயன்படுத்தியிருக்கிறார் என்றாவது நாம் அறிய முற்பட்டதுண்டா? நீங்கள் நியூட்டனின் மூன்றாம் விதியை ஞாபகம் வைத்திருக்கும் ஆறறிவு ஜீவியாகவே இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு வேலை இல்லை. காரணம் இந்த வேலையை இன்று கூகுள் இலவசமாக செய்கிறது. 

இதற்கு ஏன் ஒரு நிறுவனம் சம்பளம் கொடுத்து ஒருவரை வேலைக்கு அமர்த்தவேண்டும்? இது மட்டும் அல்ல, இன்று பல வேலைகளை கணினி இலவசமாகவே செய்து தருகிறது. பணம் எண்ணுவதற்கும், பணத்தை வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்கும் கூட கருவிகள் ஏடிஎம் என்ற பெயரில் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. சரி.. படித்தால் மட்டும் போதாது என்றால் வேறு என்னதான் செய்யவேண்டும்?
படித்ததை நாம் வாழும் இன்றைய சூழலில் பொருத்திப்பார்க்கவேண்டும். அதை எங்கெங்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை யோசித்து நடைமுறைப்படுத்த முயலவேண்டும். அப்போது வரும் நடைமுறை சிக்கல்களை கண்டுணர்ந்து அதை களைய முற்படவேண்டும். இத்தனையும் செய்து முடிக்கும்போது உங்கள் கையில் ஒரு அற்புதமான கருவியோ, அதை உருவாக்குவதற்கான நடைமுறையோ இருக்கும். இப்போதுதான் நீங்கள் தலைமைப்பண்புடைய நல்ல மாணவர். 

இதையெல்லாம் கல்லூரிகளில் சொல்லிக்கொடுப்பதில்லையே என்று அங்கலாய்த்தால், நீங்கள் ஒழுங்காக படிக்கவில்லை அல்லது சொல்லித் தரப்படவில்லை என்று கொள்ளலாம்.

காரணம் மேலாண்மை கல்வியைத்தரும் பாடத்திட்டங்கள் எல்லா இளங்கலை படிப்புகளிலும் வழங்கப்பட்டுள்ளன. சரி.. இத்தனையும் செய்துவிட்டால் வேலை கிடைக்குமா என்றால், இது போதாது என்பதே பதில். காரணம் காகத்திற்கு சாப்பாடு வைத்தபின்பு யாரும் அப்படியே செல்வதில்லை. கா கா கா என்று கத்தி காகத்தை அழைத்து சாப்பாடு வந்திருக்கிறது என்று சொன்னால் தான் காகமே வரும்.
அதுபோல உங்கள் பொருளை நீங்கள் சந்தைப்படுத்த வேண்டும். ஆங்கிலத்தில் மார்க்கெட்டிங் என்று சொல்வார்கள். உங்கள் பொருளுக்கு, அல்லது நீங்கள் கண்டுபிடித்த நடைமுறைக்கு எங்கு அதிகமாக தேவை இருக்கிறது என்று பார்த்து, அங்கே சென்று அந்த நிறுவன அதிகாரியிடம் உங்கள் திறமையை நிரூபிக்கலாம். அவர்கள் இது போதாது என்று சொல்லலாம். 

அப்போது அவர்களுக்கு என்ன தேவை என்று கேட்டறிந்து அதற்கேற்றார்போல் நீங்கள் வடிவமைத்து கொடுக்கலாம். அவர்கள் உங்கள் திறமையை கண்டுணர்ந்தால், உங்களுக்கு நீங்கள் விரும்பிய வேலை ரெடி...

புதிதாய் கல்லூரி சேரும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்!


No comments:

Post a Comment