ஸ்கூட்டர் கம்பெனி என்ற இமேஜை, ஜிக்ஸர் பைக் மூலம் உடைத்து எறிந்திருக்கிறது சுஸூகி.
150 சிசி செக்மென்ட்டுக்கு, ஸ்போர்ட் டியான உணர்வை அளித்தது ஜிக்ஸர் பைக்தான். இப்போது ஃபுல் ஃபேரிங் கொண்ட ஜிக்ஸர் SF பைக்குடன் ‘வேற’ லெவலை அடைய விரும்புகிறது சுஸூகி.
டிஸைன்
ஃபேரிங்கைவிட பளீரென்று மனதில் பதிவது ஜிக்ஸர் SF பைக்கின் நீல வண் ணமும், மஞ்சள் வண்ணக் கோடுகளும்-தான். ‘கண்ணா, இது ஸ்போர்ட்ஸ் பைக்’ என்று சொல்வதுபோல இருக்கிறது இதன் தோற்றம்.
GSX-1000RR, 2015 மோட்டோ ஜீபி ரேஸர் GS-RR போன்ற பைக்குகளில் உள்ள கிராஃபிக்ஸுடன் ஃபுல் ஃபேரிங் டிஸைன் பிரமாதம். ஜிக்ஸர் பைக்கின் அதே ஹெட்லைட்தான் இதிலும். ஃபேரிங்கில் இருக்கும் ஏர் இன்டேக்குகள், வெறுமனே டிஸைனுக்காகத்தான். பைக்கின் டிஸைனில் ஒருவித சாஃப்ட்னெஸ் இல்லாமல், ஷார்ப்பாக இருந்திருந்தால், இன்னும் ஸ்போர்ட்டியாக இருந்திருக்கும்.
பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது, பைக் இன்னும் அழகாக இருக்கிறது. ஹயபூஸா, GSX-R, GSX-RR போன்ற பைக்குகளின் ஃபேரிங் உருவாக்கப்பட்ட அதே விண்டு டனலில்தான் (ஏரோடைனமிக் டெஸ்ட்டிங்) ஜிக்ஸர் SF-ன் ஃபேரிங் டிஸைனும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால், சாதாரண ஜிக்ஸரைவிட 17 சதவிகிதம் அதிக ஏரோடைனமிக் திறன், 3 சதவிகிதம் அதிக டாப் ஸ்பீடு, 16 சதவிகிதம் அதிக டவுன்ஃபோர்ஸ் என யதார்த்தமான நன்மைகளை அளிக்கிறது இந்த ஃபேரிங் டிஸைன் கொண்ட புதிய ஜிக்ஸர். ஹேண்டில்பாருக்கு இப்போது புதிய சிங்கிள் பீஸ் கிளாம்ப் உள்ளது.
டிஸைன் தவிர சாதாரண ஜிக்ஸரும், ஜிக்ஸர் SF பைக்கும் ஒன்றுதான். அதே டயர்கள், அதே சேஸி, அதே கியரிங், அதே சஸ்பென்ஷன் செட்-அப் என டெக்னிக்கல் விஷயங்களில் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை சுஸூகி. ‘எதுக்கு நல்லா இருக்கிறதைக் கெடுக்க வேண்டும்?’ என்று சுஸூகியும் ரிஸ்க் எடுக்கவில்லை. ‘ஜிக்ஸரின் இன்ஜின் இன்னும் அதிக சக்தியைத் தரும்; ஆனால், பெர்ஃபாமென்ஸைக் கூட்டினால் மைலேஜ் அடிபடும்’ என்கிறார்கள் சுஸூகியின் இன்ஜினீயர்கள். சாதாரண ஜிக்ஸரில் இருக்கும் அதே 266 மிமீ Bybre டிஸ்க் பிரேக்கும், MRF டயர்களும்தான் இதிலும்.
பெர்ஃபாமென்ஸ்
சாதாரண ஜிக்ஸரைவிட சிறப்பான ஏரோடைனமிக்ஸ் இருப்பதால், SF பைக்கின் டாப் ஸ்பீடு அதிகமாக இருக்கிறது. இந்திய சாலைகளில் சாதாரண ஜிக்ஸரைப் போலவே ஓட்டுதல் தரத்திலும், கையாளுமையிலும் சிறப்பாக இருக்கிறது. மணிக்கு 100 கி.மீ வேகத்தில் ஸ்டேபிளாக க்ரூஸ் செய்ய முடிகிறது. 0-100 கி.மீ வேகத்தை அடைய 16.7 விநாடிகளை எடுத்துக் கொள்கிறது. லிட்டருக்கு 44 கி.மீ மைலேஜை அளிக்கிறது.
வழுக்கலான சாலைகளிலும் டயர்கள் நல்ல க்ரிப்பைக் கொடுக்கின்றன. பைக்கின் முன்பக்கம் மட்டும் எடை கொஞ்சம் அதிகமாக இருப்பதால், இன்னும் க்விக்கான ஸ்டீயரிங் இருந்திருக்கலாம். அதேபோல், ஜிக்ஸரில் இருக்கும் அதே ரைடிங் பொசிஷன், இந்த பைக்குக்கு100 % செட் ஆகவில்லை.
இந்தியாவில் விலை குறைந்த ஃபுல் ஃபேரிங் பைக், ஜிக்ஸர் SF. யமஹா R15 பைக்குக்கு உண்மை யான போட்டி என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒரு பிராக்ட்டிக்கல் பைக்காக இருக் கிறது. குறைவான விலை, தினமும் டிராஃபிக் நெரிசலில் எளிதாக ஓட்டிச் செல்ல முடிவது, வார இறுதிகளில் ஜாலி ரைடுக்கு ஏற்ற ஸ்போர்ட்டியான கையாளுமை என சரியான பேக்கேஜாக இருக்கிறது ஜிக்ஸர் SF.
No comments:
Post a Comment