சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Jul 2015

மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன்!

''நான் 17 வருஷத்துக்கு முன்னாடி புல்லட் பைக் வாங்கினேன். ஒரு சமயம் மைலேஜ் ரொம்பக் குறைவா தந்தது. நானும் பல ஊர்ல இருக்க மெக்கானிக்கிட்ட  சர்வீஸ் விட்டுப் பார்த்தேன். ஆனா, மைலேஜ் பிரச்னை மட்டும் தீரலை. அப்போதான் நண்பர் ஒருத்தர், 'திருச்சி ஒத்தக்கடையில இருக்கிற பிச்சை பட்டறைல கொடு’ன்னு சொன்னாரு. எத்தனை மெக்கானிக்கப் பார்த்துட்டோம்... இவரையும் பார்த்திடுவோம்னு கொடுத்தேன். 
என்ன பண்ணுனாருன்னு தெரியலை. அரை நாள்ல பைக்கைத் திருப்பிக் கொடுத்து, 'நல்லா ஓட்டிப் பார்த்துட்டு வாங்க’ன்னு சொன்னாரு. என்ன ஆச்சர்யம், பைக்கோட உண்மையான மைலேஜ் கொடுக்க ஆரம்பிச்சது. நாலு நாள் கழிச்சுதான் அவர் வேலை செஞ்சதுக்கான கூலியைக் கொடுக்கப் போனேன். ஆனா, அவரு வேணாம்னு சொல்லிட்டாரு. இந்த பைக்குல எப்ப பிரச்னை வந்தாலும் என்கிட்ட கொடுங்க.. நான் சர்வீஸ் பண்ணித் தர்றேன்னு சொன்னார். எனக்கு இன்னும் ஆச்சர்யமாயிடுச்சு. அன்னைக்கு  இருந்து  இன்னைக்கு வரைக்கும் அண்ணன் 'புல்லட் முருகன்’தான் என்னோட ஆஸ்தான பைக் மெக்கானிக்'' என்கிறார் ரவிக்குமார் பெருமிதத்தோடு.

புல்லட் முருகன் என்ற முருகானந்தத்தின் வொர்க் ஷாப்பின் பெயர் 'பிச்சை பட்டறை.’ இப்படிச் சொன்னால்தான் தெரிகிறது.  தாத்தா, அப்பா, மகன் - மூன்று தலைமுறையாக புல்லட் பைக்குக்கு மட்டுமே மெக்கானிக்காக இருக்கும் குடும்பம்.
முருகானந்தம் என்ற புல்லட் முருகனிடம் பேசினேன். ''இந்தப் பட்டறை ஆரம்பிச்சு 50 வருஷம் ஆச்சு. 1962-ல இருந்து இங்க வேலை செய்றவர் அண்ணன் முருகேசன். அவருக்கு இப்போ வயசு 74. ஒத்தக்கடை பிச்சை பட்டறைன்னா, அந்தக் காலத்துல ரொம்ப பிரபலம். அப்போ, போலீஸும், பண்ணையாருங்களும்தான் புல்லட் பைக் வெச்சுருப்பாங்க. திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஏரியாவுல இருந்து எல்லாம்  சர்வீஸுக்கு இங்க வருவாங்க.
1976-ல அப்பா இறந்த பிறகு, நாலாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்த நான், பைக் சர்வீஸ் செய்றதுல ஆர்வம் அதிகமானதால, படிப்ப விட்டுட்டு  அண்ணன் முருகேசனுக்கு ஹெல்பரா இருந்தேன். இந்த பட்டறையில புல்லட் பைக்குக்கு மட்டும்தான் சர்வீஸ். அதனால, எல்லா மாடல் புல்லட்டும் அத்துப்படி ஆயிடுச்சு.
1998-ல கடையோட முழு பொறுப்ப ஏத்துக்கிட்டேன். 2010 வரைக்கும் எந்த ஊர்ல இருந்து கூப்பிட்டாலும் சர்வீஸ் பண்ணி திருப்பி ஒப்படைப்பேன். ஒரு தடவை டூரிஸ்டா வந்த வெளிநாட்டுக்காரர் ஒருத்தரோட பைக் ரிப்பேர் ஆச்சு. அதை அவர் ஷோரூம்ல கொடுத்ததும் ஒண்ணும் சரிசெய்ய முடியலைன்னு என்கிட்டே வந்தார். நான் சரிபண்ணி கொடுத்தேன். ரொம்ப சந்தோஷமாயிட்ட அவரு, என்னை பைக்குல பின்னாடி உக்கார வெச்சு ஊரைச் சுத்தி ஒரு ரவுண்டு வந்துட்டு, என்னை போட்டோ எடுத்துக்கிட்டுப் போனார். ரொம்பப் பெருமையா இருந்துச்சு. ஆனா, கூடவே பயமும் வந்துடுச்சு. ஏன்னா, எல்லா வாடிக்கையாளர்கள் கிட்டேயும் நல்ல பேர் வாங்கணும் இல்லையா?
ரீ-டிசைன் பண்றது, எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் மாத்துறதுன்னு இப்ப இருக்கிற இளைஞர்களின் வேகத்துக்கு இணையா என் தொழில்ல பல மாற்றங்களைக் கொண்டுவந்தேன். இந்த தொழிலில் ரொம்ப முக்கியம் வேலைபாடு, நேரம், கூலி - இது மூணும் சரியா இருக்கணும். எங்க அப்பா சொல்லிக்கொடுத்த தொழில் பக்தி, நேர்மையை நான் எப்பவும் கைவிட்டது கிடையாது. என்னோட 99 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் எங்கிட்ட ஒரு தடவை சர்வீஸ் கொடுத்தா, அடுத்த தடவை கொடுக்க ரொம்ப நாள் ஆகணும். இதை மனசுல வெச்சுக்கிட்டுதான் வேலை செய்றேன்.
புல்லட் பைக் வெச்சுருகிறவங்க 15 நாளைக்கு ஒரு தடவையாவது ஆயில் லெவல் செக் பண்ணனும். பிரேக், கேபிள், ஸ்பார்க் பிளக் மாதிரி விஷயங்கல மூணு வாரத்துக்கு ஒரு தடவை செக் பண்ணணும். 50,000 கிலோ மீட்டர் ஓடினா வால்வு - பிஸ்டன் செக் பண்ணணும். இதை எல்லாம் பராமரிச்சு வந்தாலே, புல்லட் பைக் எந்த பிரச்னையும் கொடுக்காம இருக்கும். கம்பீரமா ஜமாய்க்கலாம்'' என்று முடித்தார்  புல்லட் முருகன்.



No comments:

Post a Comment