உலக நாடுகளின் அதிபர்களில் யாருக்கு இணையத்தில் விசிறிகள்(ஃபேன்ஸ்) அதிகம் தெரியுமா? பராக் ஒபாமா என்றால் நீங்கள் இணையத்தின் ஒரு பகுதியைத்தான் பார்த்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். இணையத்தின் ஃபேவரிட் எப்போதும் ரஷ்யாவின் அதிபர் புதின்-தான். ஏன்? புதின்-ன் புகைப்படங்கள்தான்.
ரஷ்ய அதிபர் புதினுக்கு தன்னை மற்ற அதிபர்களிடம் இருந்து வித்தியாசமாகக் காட்டிக் கொள்வதில் எப்போதுமே விருப்பம் அதிகம். மற்ற நாடுகளின் அதிபர்களின் புகைப்படங்களில் பெரும்பாலும், கோட்சூட் அணிந்துகொண்டு கைகுலுக்கிக் கொண்டிருப்பார்கள் அல்லது நம்மூர் அரசியல்வாதிகள் அரெஸ்ட் ஆகும்போது சிரித்துக்கொண்டே கையசைப்பதுபோல டாடா காண்பித்துக்கொண்டிருப்பார்கள்.
ஆனால் புதின், காட்டில் துப்பாக்கியுடன் உலாவுகிறார். சட்டையில்லாமல் குதிரைகளில் வலம்வருகிறார். ஃபார்முலா 1 காரில் சீறிப் பாய்கிறார். நீர்மூழ்கிக் கப்பலில் Baikal ஏரியின் ஆழம் பார்க்கிறார். ஜூடோ பயிற்சியில் எதிரியை தூக்கி அடிக்கிறார். இன்னொரு பக்கம் கச்சேரியில் பியானோ வாசிக்கிறார், பாடுகிறார். ஐஸ் ஹாக்கியில் கோல் போடுகிறார். பப்பி நாய்க்குட்டியைத் தூக்கிக் கொஞ்சுகிறார்.
எல்லாத்தையும் நீங்களே பாருங்க பாஸ்!
வாட் எ மேன்...!
டாப்லெஸ் புதின்!(ஆகஸ்ட் 15, 2007. Dmitry Astakhov/AP)
ச்சோ க்யூட்ல...!(அக்டோபர் 11, 2008. REUTERS/RIA Novosti/Alexei Druzhinin/Pool)
ஓவர் ஆக்டிங் (AFP/GETTY)
காட்டுக்குள் வேட்டை!
(ஆகஸ்டு15, 2007. REUTERS/RIA Novosti/KREMLIN)
ரஷ்யாவின் GRU மிலிட்டரி இன்டெலிஜென்ஸ் தலைமையகத்தில் 'பாயின்ட் & ஷூட்'!(Reuters)
பாசக்கார நண்பன்ஸ்..!
(RIA Novosti / Alexsey Druginyn)
குதிரையுடன் கூலிங் கிளாஸில் புதின்!(Getty)
சைபீரியாவின் Khakasiya பகுதியில் இளைப்பாறும்போது!(ஃபிப்ரவரி 25, 2010 - REUTERS/Ria Novosti/Alexei Druzhinin/Pool)
என்னா ஸ்டைலான ஃபோட்டோ...!(ஆகஸ்டு 3, 2009. REUTERS/RIA Novosti/Pool/Alexei Druzhinin)
(டிசம்பர் 18, 2009 - REUTERS/Ria Novosti/Pool/Alexei Druzhinin)
(இப்ப எதுக்குய்யா சம்பந்தமில்லாம என்ன இழுக்குறீங்க..?)
'அமெரிக்காவையும் இப்படித்தான் டீல் செய்வேன்!'
(AP)
அந்த வானத்தப்போல மனம் படைச்ச மன்னவனே..!(மே 9, 2012. . REUTERS/Alexei Nikolsky/RIA Novosti/Pool)
தல...நீங்க ஹீரோ லெவல்....
(ஆகஸ்டு 3, 2009. REUTERS/RIA Novosti/Pool/Alexei Druzhinin)
புதின் அதிகமாக பியானோவில் வாசிக்கும் இசை 'From What the Motherland Begins?' (செப்டம்பர் 15, 2011. REUTERS/Alexei Nikolsky/RIA Novosti)
இவற்றில் பெரும்பாலான புகைப்படங்கள் புதினுக்காகவே பிரத்யேகமாக எடுக்கப்பட்டது. அவர் நன்றாக இருக்கிறார் என்று ரஷ்ய மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கவும், உலகத்துக்குச் சொல்லவும் 'அரெஞ்ச்' செய்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. இதனாலே புதின் மீம்களும் இணையத்தில் பிரபலம்.
ஆனாலும், ரசனைக்கார பிஆர் டீமைத்தான் வைத்திருக்கிறார் மனுஷன்!
No comments:
Post a Comment