சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Jul 2015

''இந்த பல்ஸரை பயம் இல்லாமல் ஓட்டலாம் !'' - ரெவ்யூ / PULSAR RS 200

நான் பணிபுரிவது ஆட்டோ மொபைல் துறை என்பதால், ஓரளவுக்கு பைக்குகள் பற்றி எனக்குத் தெரியும். ஏற்கெனவே நான் பல்ஸர் 180 வைத்திருந்தேன். அது வாங்கி ஏழு ஆண்டுகளாகிவிட்டது என்பதால், ஸ்போர்ட்டியாக ஒரு பைக் வாங்க நினைத்தேன்.
ஏன் பல்ஸர் RS 200?
கேடிஎம் RC200, தண்டர்பேர்டு, CBR என ஒவ்வொரு பைக்காகப் பார்த்தேன். அப்போது தண்டர்பேர்டு எனக்குச் சிறப்பாகப் பட்டதால், அதை வாங்குவதற்கு முன்பதிவும் செய்துவிட்டேன். அப்போதுதான் பஜாஜ் பல்ஸர் RS200 பைக், இந்தோனேஷியாவில் வெளியிடப்பட்டது. அந்த பைக் பற்றி வந்த செய்திகள் என்னைக் கவர்ந்தன.
ஷோரூம் அனுபவம்
பல்ஸர் RS200 பைக் பற்றி, கோவை ஜெய்கிருஷ்ணா பஜாஜ் ஷோரூமில் விசாரித்தேன். ‘இன்னும் சில மாதங்களில் வந்துவிடும்’ எனக் கூறி, என் எதிர்பார்ப்பைக் கூட்டினார்கள். 
உடனே என் எண்ணத்தை மாற்றிக் கொண்டு, ‘வாங்கினால் RS200தான் வாங்க வேண்டும்’ என தண்டர்பேர்டு புக்கிங்கை கேன்சல் செய்துவிட்டு, பல்ஸர் RS200 பைக்கை புக் செய்தேன்.

 எப்படி இருக்கிறது பல்ஸர் RS200?
டெஸ்ட் ட்ரைவ்கூடச் செய்யாமல் இதை வாங்கினேன். என்னை ஏமாற்றாமல் முழுத் திருப்தி அளிக்கும் வகையில் இருக்கிறது பல்ஸர். இந்த விலைக்குள் இவ்வளவு சிறந்த சூப்பரான பைக் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. பைக்கின் பிளாஸ்டிக்ஸ் தரம், டிஸைன், பவர், பிக்-அப் என அனைத்திலும் ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார்கள். வேகமாகச் செல்லும்போது இன்ஜின் கொஞ்சம்கூட அதிரவில்லை; சத்தமும் கிடையாது. கரடுமுரடான சாலைகளில்கூட ஸ்மூத்தாகச் செல்ல முடிகிறது. நகருக்குள் ஓட்டும்போது மிகக் குறைந்த நேரத்தில் 0-100 கி.மீ வேகத்தைத் தொட்டுவிட முடிகிறது.
இதுவரை மசினகுடி, முதுமலை, மூணாறு என நீண்ட தூரப் பயணங்கள் இந்த பைக்கில் சென்று வந்துள்ளேன். பயணத்தில் எந்தப் பிரச்னையும் வந்தது இல்லை. குறிப்பாக, முதுமலைக் காட்டில் தனியாக சாலையில் வர வேண்டியிருந்தது. அதுவும் இரவு நேரம். அப்போதுதான் இதன் ட்வின் புரொஜக்டர் ஹெட்லைட்டின் அருமை புரிந்தது.
அதேபோல, நகரத்துக்குள் ஆக்ஸிலரேட்டரை முறுக்கினால், ரேஸ் பைக் போல சத்தம் கொடுக்கிறது. இது ஒரு ஹீரோ இமேஜைக் கொடுக்கிறது. மேலும், 140 கி.மீ வேகத்தில் செல்லும்போதும், காற்றினால் கொஞ்சம்கூட அலைபாயாமல் இருப்பதுபோல வடிவமைத்திருக்கிறார்கள். வளைவுகளில்கூட பயமின்றி பிரேக் பிடிக்க முடிகிறது.
ப்ளஸ்
முன்பக்க டிஸைன், பின்பக்க டிஸைன், ஹெட்லைட் போன்றவை இந்த பைக்கைத் தனியாகக் காட்டுவதுடன் மிகவும் ஸ்போர்ட்டியாகத் தெரிகிறது. இன்ஜின், இதன் மிகப் பெரிய பலம். ஃப்யூல் இன்ஜெக் ஷன் தொழில்நுட்பம் என்பதால், பிக்-அப் அருமை. சத்தமோ, அதிர்வுகளோ கிடையாது.
சீட்டிங் பொசிஷன், நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்றவாறு வசதியாக இருக்கிறது. உயரம் அதிகமானவர், குறைவானவர் என அனைவருக்கும் ஏற்றவாறு இருக்கிறது சீட்டிங் பொசிஷன்.
எந்தச் சாலையிலும் ஸ்மூத்தாகச் செல்ல இதன் சஸ்பென்ஷனும் ஒரு காரணம். அதனால், களைப்பு இல்லாமல் பயணம் செய்ய முடிகிறது
மைனஸ்
இன்ஜின் விரைவில் சூடாகிவிடுகிறது. இன்ஜின் வெப்பம் கால் வரை வருகிறது. சில சமயம், கியர் மாற்றும்போது சரியாக மற்றும் தொடர்ச்சியாக கியரை இறக்க முடிவது இல்லை. அதற்காக, மீண்டும் கிளட்ச்சைப் பிடித்து இன்னொரு முறை கியர் மாற்ற வேண்டியிருக்கிறது.
என் தீர்ப்பு
200 சிசியில் ஸ்போர்ட்டியான, பட்ஜெட்டுக்குள் கிடைக்கும் ஒரு சூப்பரான பைக் வேண்டும் என்பவர்களுக்கு, RS200தான் என்னுடைய பரிந்துரை.No comments:

Post a Comment