சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Jul 2015

தொழில் துவங்க.. நல்ல நேரம்!

தொழில் ஸ்தானம் என்பது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எண்ண வரும் 10-ம் இடம் ஆகும். 1, 4, 7, 10 ஆகியவை கேந்திர ஸ்தானங்கள். இவற்றில் 10 என்பது உயர் கேந்திரமாகும். 10-ம் இடமும், 10-ம் வீட்டோனும்  வலுப் பெற்றிருக்கும் அன்பர்களே சொந்தத்தொழிலில் வெற்றி பெறமுடியும்.
கோசாரப்படி குருபலம் உள்ள காலங்களில் அதாவது ராசிக்கு 2, 5, 7, 9, 11-ம் இடங்களில் குரு உலவும்போது தொழில் தொடங்குவது நல்லது. தொழில் தொடங்குபவரின் நட்சத்திரத் துக்கு, தொழில் தொடங்கும் நாளின் நட்சத்திரம் 2, 4, 6, 8, 9-ஆக அமைவது விசேஷமாகும்.
அமிர்த யோகம் உள்ள நாள் விசேஷம். அடுத்தபடியாக சித்தயோகம். மரணயோகமும், பிரபாலாரிஷ்ட யோகமும் நிச்சயம் விலக்கப்பட வேண்டும். தொழில் தொடங்கும் நாள் சுப முகூர்த்த நாளாக அமைவது சிறப்பு. தொழில் ஸ்தானமும் தொழில் ஸ்தானாதிபதியும் பலமாக உள்ள லக்னத்தைத் தேர்ந்தெடுத்து, குறிப்பிட்ட லக்னம் அமையும் பஞ்சக சுத்தம் உள்ள (திதி, வார, நட்சத்திரம், லக்னம், துருவம்) நேரத்தில் தொழில் ஆரம்பிப்பது நல்லது. மேலும் உலகில் பலவிதமான தொழில்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கிரகம் வலுப் பெற்றிருக்க வேண்டும். தொழிலில் ஈடுபடும் முன் அந்தத் தொழிலுக்குரிய கிரகம் ஜாதகத்தில் பலமாக உள்ளதா என்பதை அறியவேண்டும்.

ஜன்ம லக்னப்படி தொழில் ஸ்தானாதிபதி எங்கிருக்கிறார், அவருடன் கூடிய கிரகம் எது, அந்தக் கிரகத்தின் தன்மை, தொழில் ஸ்தானாதிபதி இருக்கும் வீடு, தொழில் ஸ்தானாதிபதியைப் பார்க்கும் கிரகம், தொழில் ஸ்தானாதிபதி இருக்கும் வீட்டின் அதிபதியின் பலம் இவற்றைப் பொறுத்தே தொழில் அமையும். குறிப்பாக ஒருவர் தங்கம், வெள்ளி, ரத்தின வியாபாரம் செய்ய நல்ல நேரம் கேட்டால் துவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி ஆகிய திதிகள் வரும் நாள் சிறப்பானவை. அசுவினி, ரோகிணி, புனர்பூசம், பூசம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்கள் சிறப்பானவை.
குறிப்பிட்ட திதிகளில் எந்தத் திதி வந்தாலும் சிறப்பானதாகும். நட்சத்திரம் மட்டும் அவரது ஜன்ம நட்சத்திரத்துக்கு 2, 4, 6, 8, 9ஆக வருமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். குறிப்பிட்ட நாளில் வரும் ராசி, ஜாதகரின் ராசிக்கு 6, 8, 12-வது ராசியாக இல்லாமல் இருப்பது அவசியமாகும்.
குறிப்பிட்ட நாளில், லக்னத்துக்கு கேந்திர, திரிகோணங்களில் குரு, சுக்கிரன், பாபிகளுடன் சேராத புதன், வளர்பிறை சந்திரன் இருப்பது விசேஷமாகும். பொதுவாக சுப நாட்களான திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் தொழில் தொடங்குவது விசேஷம்.
இதில் புதன் கிழமை மிகச் சிறந்தது. பிஸினஸுக்குக் காரகன் புதன் என்பதால், புதன் கிழமையில் தொழில் ஆரம்பிப்பது சிறப்பு!



No comments:

Post a Comment