சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Jul 2015

தென்ஆப்ரிக்க வீரர்களை இனம் குறித்த வார்த்தைகளால் திட்டிய வங்கதேச 'மைனர்கள்' கைது!

 தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.சிட்டாகாங் நகரில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

வங்கதேச அணி நேற்று பேட்டிங் செய்து வந்தது. பீல்டிங்கில் ஈடுபட்ட தென்ஆப்ரிக்க வீரர்கள் சிலர்,  மைதானத்தில் உள்ள பெரிய டி.வி. அருகேயிருந்த சில ரசிகர்கள் இனம் குறித்த வார்த்தைகளை பயன்டுத்தி தங்கள் மனம் புண்படும்படி திட்டுவதாக போட்டி நடுவரிடம் புகார் தெரிவித்தனர். 

உடனடியாக இந்த பிரச்னை வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், அந்த கூட்டத்தில் இருந்தவர்களை பிடிக்க முயற்சித்தனர். கூட்டத்தில் இருந்த கொஞ்ச பேர் அந்த இடத்தில் இருந்து ஓடி விட்டனர். எனினும் அந்த கூட்டத்தில் இருந்த 11 வயது சிறுவர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். இருந்தாலும் அவர்கள் மைனர்கள் என்பதால் 2 மணி நேரம் போலீஸ் நிலையத்தில் வைத்து விட்டு விடுவித்து விட்டனர் 

இது குறித்து வங்தேச கிரிக்கெட் வாரிய பாதுகாப்புத்துறை செயலாளர் முகமது அலி கூறுகையில், '' கிரிக்கெட் விளையாட்டில் எந்த ரூபத்திலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தி அந்த ரசிகர்கள் தென்ஆப்ரிக்க வீரர்களை கிண்டலடித்துள்ளனர். ஐ.சி.சி. இனம் குறித்து வகுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு எதிரான வார்த்தைகளை அவர்கள்  பயன்டுத்தியுள்ளனர். அந்த ரசிகர்கள் தங்கள் தவறை ஒப்புக் கொண்டுள்ளனர். எனினும் மைனர்கள் என்பதால் எச்சரித்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்'' என்றார்.



No comments:

Post a Comment