சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Jul 2015

வாலு படம் வெளியாக விஜய் செய்த பெரியஉதவி

சிம்புவின் வாலு படம் பல்வேறு முறை வெளியீட்டுத் தேதிகள் அறிவிக்கப்பட்டதோடு சரி. கடைசிநேரத்தில் ஏதாவதொரு சிக்கல் காரணமாகத் தள்ளிப்போய்விடும். ரசிகர்களைப்போல திரைத்துறையினரும் இதை ஒரு செய்தியாகத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

இந்தச் செய்திகளை அண்மையில் கேட்டறிந்த நடிகர் விஜய், படத்துக்கு என்ன சிக்கல்? என்று சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டறிந்திருக்கிறார். ஒரு இந்தப்படம் வெளியாகவேண்டுமென்றால் பெரியதொகை கொடுத்தாகவேண்டும் என்கிற விசயம் அவருக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அதைக் கேட்டவுடனே அவ்வளவு தொகையையும் தாமே தருவதாக ஒப்புக்கொண்டாராம் விஜய்.

“பலமுறை இந்தப்படம் தள்ளிப்போனதில் எனக்கு வருத்தம். எனவே படம் வெளியாக என்னாலான இந்த உதவியைச் செய்கிறேன் இதை எப்போது முடியுமோ அப்போது திருப்பிக்கொடுத்தால் போதும்” என்று சொல்லி அந்தப்பணத்தைக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதோடு தமக்கு வேண்டிய விநியோகஸ்தர்களிடம் இந்தப்படம் வெளியாக உதவி செய்யுமாறும் கேட்டுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. 

இவ்வளவையும் செய்துவிட்டு நான் இதைச் செய்கிறேன் என்பதை யாருக்கும் தெரியாமல் பார்த்தக்கொள்ளுங்கள் என்றும் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. பொதுவாக சிம்பு தன்னை அஜித் ரசிகன் என்றே சொல்லிக்கொள்வார். இந்தப் படத்தைத் தயாரித்தவரும் அஜித்தின் முன்னாள் நெருங்கிய நண்பர். ஆனால் இந்தப் படத்துக்கு இப்போது உதவியிருப்பது விஜய் என்பதால் இதை எல்லோரும் ஆச்சரியத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார்களாம்.No comments:

Post a Comment