சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Jul 2015

மார்ஷல் லண்டன்: உலகின் முதல் ‘ராக்ஸ்டார்’ ஆண்ட்ராய்டு ஃபோன்! - ஃபர்ஸ்ட் லுக்

சை ஆர்வலர்களுக்கு, முக்கியமாக கிட்டார் இசை ஆர்வலர்களுக்கு ‘Marshall’ எனும் பிராண்டு நன்கு பரிச்சயம். எலெக்ட்ரிக் கிட்டார்களுக்கான ஆம்ப்ளிஃபையர் உருவாக்கத்தில் மிகவும் பிரபலமானது மார்ஷல் நிறுவனம். மேலும், பிரத்யேக ஹெட்ஃபோன்களையும் ‘மார்ஷல் ஹெட்ஃபோன்ஸ்’ பிராண்டின் கீழ் உருவாக்கி வருகிறது. இப்போது சம்பந்தமேயில்லாமல் ‘London’ எனும் புதிய ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தியிருக்கிறது மார்ஷல் ஹெட்ஃபோன்ஸ் நிறுவனம்.

ஆனால், இதுதான் உலகின் முதல் ‘ராக்ஸ்டார்’ ஆண்ட்ராய்டு ஃபோன். இசை..இசை..இசை என இசையை மட்டுமே குறிக்கோளாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்த லண்டன் ஸ்மார்ட்ஃபோன். டிஸைனும் மார்ஷல் ஆம்ப்ளிஃபையர்கள் போலவே பழைமையும் புதுமையும் கலந்து அழகாக, நேர்த்தியாக இருக்கிறது.


ஃபோனின் மேலே தங்க நிறத்தில் மார்ஷல் லோகோவுடன் பிரத்யேக  ‘மியூஸிக்’ பட்டன் சேர்க்கப்பட்டுள்ளது. தட்டினால் நேரே மியூஸிக் அப்ளிகேஷனுக்கு சென்றுவிடும். பக்கவாட்டில் உள்ள வால்யூம் கன்ட்ரோலைப் பாருங்களேன். வழக்கமான ஃபோன்களில் 2 பட்டன்கள்தான் இருக்கும். இதில் வித்தியாசமாக தங்க நிற ஸ்க்ரோல் டைப் கன்ட்ரோல் கொடுத்திருக்கிறார்கள். ஃபோனின் முன்பக்கம் உள்ள வெள்ளை நிற கோடு ஒரு ‘ரெட்ரோ’ டச்சைக் கொடுக்கிறது.
 டிசைனில் மார்ஷல் ‘லண்டன்’ ஃபோன் ரசனையின் உச்சம்.  
லண்டன் ஃபோனில் 2 ஸ்பீக்கர்கள் (முன்பக்கம்), 2 ஆடியோ அவுட்புட்கள் (2 ஹெட்ஃபோன்களை இணைக்கலாம்) உள்ளன. பிரத்யேக மார்ஷல் இன் - இயர் ஹெட்ஃபோன்ஸ்-ன் பின் எவ்வளவு கெத்தாக இருக்கிறது பாருங்கள்.

னால், இதையெல்லாம்விட முக்கியமான விஷயம் இந்த ஃபோனின் ஆடியோ தரம். ஆடியோவுக்கென தனியே பிரத்யேக பிராசஸரைக் கொண்டுள்ளது லண்டன். பிரபல Wolfson WM8281 பிராசஸர் இந்த ஃபோனில் உள்ளது. இதனால், FLAC போன்ற ஹை-ரெசல்யூஷன் ஆடியோ இந்த ஃபோனில் கேட்கலாம். வழக்கமான MP3 ஃபார்மட் ஆடியோவின் தரமும் இந்த ஃபோனில் சிறப்பாக இருக்கும் என்கிறது மார்ஷல். மேலும், குளோபல் ஈக்குவலைஸர், ஸ்பெஷல் DJ அப்ளிகேஷனும் உள்ளது.
 
மேலே குறிப்பிடப்பட்ட பிரத்யேக வசதிகளைத் தவிர மார்ஷல் லண்டன் சாதாரண ஃபோன்-தான். ஆண்ட்ராய்டு 5.0.2, 4.7 இன்ச் ஸ்க்ரீன், 720p டிஸ்பிளே, 2GB RAM மெமரி, 8 மெகாபிக்ஸல் கேமரா என சாதாரணமான ஸ்பெக்ஸ்தான். ஆனால், இசை தரமும் டிஸைனும்தான் இந்த ஃபோனின் செல்லிங் பாயின்ட்டுகள். வரிகள் சேர்க்காமல் இந்த ஃபோனின் விலை இந்தியாவில் சுமார் 38,000 ரூபாய் வரும். ஆனால், ஃபோன் இன்னும் முழுமையாக விற்பனைக்கு வரவில்லை!

இசைதான் என் உலகம் என்பவர்களுக்கான ஸ்மார்ட்ஃபோன் இது!


No comments:

Post a Comment