சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Jul 2015

”எனக்கு எல்லாமே நல்ல‘மாரி’ நடக்குது !”

தியேட்டர் வட்டாரங்களில் 'மாரி’ ஜுரம் எகிறிக்கொண்டிருக்கும்போது, அந்த கெட்டப் கலைத்து, இயக்குநர் பிரபு சாலமன் படத்துக்காக வேற மாரி இருந்தார் தனுஷ். 
''ஆக்ச்சுவலா 'மாரி’க்காக வேற கெட்டப்தான் ஐடியா. ஆனா, அதுக்குத் தேவைப்பட்ட தாடி, மீசையோடு குறிப்பிட்ட நேரத்துக்குள் தயாராக முடியலை. அதான் இருக்கிறதுல என்ன பண்ணலாம்னு யோசிச்சு இந்த கெட்டப் பிடிச்சோம். நாங்க எதிர்பார்த்ததைவிட சூப்பர் ஸ்பெஷலா அமைஞ்சிருச்சு. ஒரு புராஜெக்ட் நல்லா வரணும்னா, எல்லாமும் நல்லா அமையணும்னு சொல்வாங்க. அப்படி 'மாரி’க்கு எல்லாமே அமைஞ்சிருக்கு'' - நெஞ்சில் கைவைத்துச் சொல்கிறார் தனுஷ். அவரிடம் ஒரு தடதட பேட்டி...
'' 'எட்டு வருஷத்துக்கு முன்ன நடந்ததாச் சொல்றாங்க சார்... அப்ப அவன் அயிட்டங்காரன்கூட கிடையாது’னு 'மாரி’யில வர்ற வசனம் 'புதுப்பேட்டை’யைக் ஞாபகப்படுத்துதே. அதான் உங்க நோக்கமா?''

''சொந்த வாழ்க்கையில இருந்து எதையும் நான் படத்துல வசனமா வைக்க மாட்டேன். அந்த கேரக்டருக்கு என்ன தேவையோ அதான் வசனமா வந்திருக்கு. அது என்னைப் புகழ்ந்து எழுதின வசனமும் கிடையாது. 'மாரி’ கேரக்டர்ல யார் நடிச்சாலும் அந்த டயலாக் வந்திருக்கும். அதுவும் போக, 'மாரி’ ஸ்க்ரிப்ட் என்னை மட்டுமே மனசுல வெச்சு எழுதினேன்னு சொன்னார் பாலாஜி மோகன். அதனால இது முழுக்க முழுக்க ஃப்ரெஷ்ஷான படம். 'புதுப்பேட்டை’யோ என் மத்த படங்களோ... அதோட எந்தப் பாதிப்பும் இருக்காது. 'மாரி’ உங்களை செமத்தியா என்டர்டெய்ன் பண்ணவைப்பான்!''
''நீங்க நடிக்கிற படமோ, தயாரிக்கிற படமோ... அனிருத் சொல்லியடிக்கிறாரே... அது என்ன கெமிஸ்ட்ரி?''
''நானும் அனிருத்தும் பிரதர்ஸ். அண்ணன்-தம்பி மாதிரிதான். அவர் மேல எனக்கு அதிகமான அக்கறையும் பாசமும் உண்டு. ரொம்ப நெருக்கமாப் பழகுறதால, இது நல்லா இருக்கு... இது நல்லா இல்லைனு வெளிப்படையாப் பேசி, வேணும்கிற விஷயத்தை வாங்கிக்க முடியுது. நானும் அனிருத்தும் பாட்டு கம்போஸிங் பண்ண உட்கார்ந்தா, வேலை செய்ற மாதிரியே இருக்காது. அரட்டை அடிச்சுட்டே கலாட்டாவா வேலைபார்ப்போம். அந்த எனர்ஜிகூட பாடல்கள்ல வந்துடும்னு தோணும். இன்னைக்கு டிரெண்டுக்கு அனிருத் மியூசிக் பண்றது விஷயமே இல்லை. ஆனா, 'வி.ஐ.பி’-க்காக 'அம்மா... அம்மா... நீ எங்க அம்மா...’னு மியூசிக் பண்ணதுதான் க்ளாசிக். அப்படி ஒரு பாட்டு பண்ண ஒரு மெச்சூரிட்டி வேணும். அனுபவம் உள்ளவங்களாலதான் அப்படிப் பண்ண முடியும். அனிருத் மியூசிக்ல அந்தப் பாட்டுத்தான் என் இஷ்டம். மத்த ஹீரோக்கள் நடிச்ச படங்கள்னா, 'கத்தி’ சாங்ஸ் எல்லாமே பிடிக்கும்!''
'' 'காக்கா முட்டை’ வெற்றியை எதிர்பார்த்தீங்களா?''
''சத்தியமா இல்லை! அது குவாலிட்டியான சினிமா, நம்ம கம்பெனி மூலமா அதை சினிமா ரசிகர்களுக்குக் கொண்டுபோகணும்னு ஆர்வமா, சந்தோஷமா எடுத்தோம். ஆனா, ரசிகர்கள் அதை இந்த அளவுக்குக் கொண்டாடி ஏத்துக்குவாங்கனு நாங்க நினைக்கலை. படம் இவ்வளவு வசூல் பண்ணும்னு எதிர்பார்க்கலை. இனி அஞ்சு படங்கள் தயாரிச்சா, அதுல ஒண்ணு 'காக்கா முட்டை’யா இருக்கணும்னு நினைக்கிறேன். ஆனா, அந்தப் பொக்கிஷத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறதுதான் கஷ்டம். அப்படிக் கிடைச்சா நிச்சயமா லாபம் - நஷ்டம் கணக்கு பார்க்காம, படத்தைத் தயாரிச்சுருவேன்!''
''அடுத்த இந்தி சினிமாவில் எப்போ நடிப்பீங்க?''
''ஒரு மாசத்துக்குக் குறைஞ்சது நாலு கதைகளாவது வருது. ரொம்ப சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு. ஏன்னா, நாமெல்லாம் இந்த சுமாரான மூஞ்சியை வெச்சுக்கிட்டு இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம். இதுல இன்னொரு மொழியிலயும் நாம நடிக்கிறதை ஒப்புக்கிறாங்க, நமக்காக கதை எழுதுறாங்கனு நினைச்சா பெருமையாவும் சந்தோஷமாவும் இருக்கு. ஏன்னா, என்னைவிட திறமையானவங்க, அழகானவங்க எவ்வளவோ பேர் இங்கே இருக்காங்க. அவங்களையும் மீறி இதெல்லாம் எனக்குக் கிடைக்குதுன்னா, என் அப்பா-அம்மாவின் பிரார்த்தனைகளும் புண்ணியங்களும்தான் காரணம். கடவுளுக்கும், என்னை ஏத்துக்கிட்ட ரசிகர்களுக்கும் எப்பவும் என் நன்றி!''



No comments:

Post a Comment