மதுரையில் மீனாட்சி கோயிலுக்கு வரும் டூரிஸ்ட் வாகனங்களை நிறுத்துவதற்கு "பார்க்கிங்' வசதி இல்லை. இதனால் ஆண்டுதோறும், ஐயப்ப பக்தர்கள் அலைக்கழிக்கப்படுவது, தொடர்கதையாகி விட்டது.
சபரிமலை சீசனில், மதுரைக்கு தினமும் சராசரியாக 400 வாகனங்களில் பக்தர்கள் வருகின்றனர். திருப்பரங்குன்றம், மீனாட்சிஅம்மன் கோயில், அழகர்கோயிலுக்கு செல்வதை வழக்கமாக
கொண்டுள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ்ஸ்டாண்ட், தெற்கு மாரட்வீதி, டி.பி.கே.,ரோடுகளில் "பார்க்கிங்' செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், எல்லீஸ்நகர் மற்றும் பைபாஸ் ரோடுகளுக்கு மாற்றப்பட்டது.
மதுரை அரசு பாலிடெக்னிக் பாலம் பணிகள் நடந்து வருவதால், மூன்று நாட்களாக எல்லீஸ்நகர் ரோட்டில் இந்த வாகனங்களை நிறுத்த அனுமதிக்கவில்லை. பைபாஸ் ரோட்டில் நிறுத்தப்படுகிறது.
இங்கு குடிநீர், கழிப்பறை என எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததால், இப்பகுதிகள் சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கின்றன.
பார்க்கிங் பிரச்னை: சென்ட்ரல் மார்க்கெட் இருந்த இடத்தில், கார் மற்றும் வேன்களை பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. டூரிஸ்ட் பஸ்கள், இரவு 11
மணி முதல் காலை 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
எல்லீஸ்நகர் ரோட்டில், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான காலி இடத்தில், வாகன பார்க்கிங் செய்ய, கடந்த ஆண்டு கோயில் நிர்வாகம் முன்வந்தது. அந்த இடத்தில் கோயில் சார்பில் பார்க்கிங் கட்டணமும் வசூல் செய்யப்பட்டது. இதற்கு, எல்லீஸ்நகர் ரோட்டில் வாகன பார்க்கிங் வசூல் செய்ய உரிமம் பெற்றுள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கைவிடப்பட்டது.
பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் கடந்த ஆண்டு பார்க்கிங் அனுமதிக்கப்பட்டது. அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டதால், இந்த ஆண்டு இப்பகுதியில் பார்க்கிங் அனுமதி அளிக்கவில்லை. இங்கு பக்தர்களுக்கு கழிப்பறை, தண்ணீர், ஓட்டல் வசதிகள் உள்ளன.
எனவே பக்தர்களின் வாகனங்களை எங்கே நிறுத்த வைப்பது என்பதில் போக்குவரத்து போலீசார் திணறுகின்றனர்.
வசூல் மட்டுமே குறி:
பைபாஸ்ரோடு, எல்லீஸ்நகர் ரோடுகளில் நுழையும் அனைத்து வாகனங்களையும் பின்தொடர்ந்து சென்று, கட்டண வசூல் செய்யப்படுகிறது. பஸ்களுக்கு ரூ.100, மற்ற வாகனங்களுக்கு ரூ.50. இதிலும் முறைகேடுகள் தொடர்கின்றன. கூடுதலாக பத்து ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.
அதற்கு ரசீது தருவது இல்லை. இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்களும் முகாமிட்டுள்ளன.
ஆட்டோவில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்ல, தலா ரூ.10 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஒரே ஆட்டோவில் 12க்கும் மேற்பட்டோர் சவாரி செய்வது தனிக்கதை.

No comments:
Post a Comment