சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 May 2014

You Tube, Facebook ல் வரும் வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி?You Tube, Facebook மற்றும் இதர சோஷியல் நெட்வொர்க்குகளில் நீங்கள் பார்க்கும் வீடியோக்களை தேவைப்பட்டால் டவுன்லோட் செய்வது எப்படி என தெரியுமா? அதற்கென்று ஒரு சாப்ட்வேர் இருக்கிறது. கூகுளில் You Tube Downloader என்று தேடினால் DVD Videosoft என்ற இணையத்தளத்தில் You Tube Downloader சாப்ட்வேர் கிடைக்கும். அதனை டவுன்லோட் செய்து உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அதன் பின் You Tubeல் உங்களுக்கு பிடித்த வீடியோவினை ஒபன் செய்து கொண்டு அதன் மேல் உள்ள URL லிங்கினை படத்தில் காட்டியுள்ளபடி காப்பி செய்து நீங்கள் டவுன் லோட் செய்து வைத்திருக்கும் You Tube Downloaderல் பேஸ்ட் செய்யவும். அந்த லிங்க் சில நொடிகளில் டவுன்லோட் செய்யத் தயாராகிவிடும். கீழ் நோக்கிய அம்புக்குறியை கிளிக் செய்தால் உங்கள் வீடியோ டவுன்லோட் ஆகும். உங்கள் வீடியோவின் அளவை பொறுத்து அது டவுன்லோட் ஆகும் நேரம் மாறுபடும். இந்த சாப்ட்வேர் You Tube வீடியோக்களை மட்டுமே டவுன்லோட் செய்ய பயன்படும்.

 அடுத்து Facebook மற்றும் இதர சோஷியல் நெட்வொர்க்குகளின் வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி என பார்ப்போம். இதற்கு உங்களுக்கு கண்டிப்பாக இண்டர்நெட் இணைப்பு தேவைப்படும். இதில் KEEPVID.COM எனும் இணையத்தளம் இந்த வசதியை இலவசமாக வழங்குகிறது.


மேலே சொன்னது போல Facebook ல் வரும் வீடியோவின் URL லிங்கினை படத்தில் காட்டியுள்ளபடி காப்பி செய்து அதனை KEEPVID.COM இணையத்தளத்தில் பேஸ்ட் செய்யவும். இதற்க்கு அந்த இணையத்தளத்தை சப்போர்ட் செய்யும் ஜாவா ஸ்கிரிப்ட் தேவைப்படும். உங்கள் கம்ப்யூட்டரில் அது இருந்தால் நேரடியாக டவுன்லோட் ஆகிவிடும். அப்படி இல்லையெனில் அந்த இணையத்தளமே அதனை தரவிறக்கம் செய்து கொண்டு உங்கள் வீடியோ டவுன்லோட் செய்ய தயாராகும்.
அடுத்து KEEPVID.COMல் இன்னொரு வசதி என்னவெனில் உங்கள் வீடியோ பல வகையான FORMAT ( 3GP, MP4, MPG4, MP2 ) களில் டவுன்லோட் செய்யும் வசதியினை கொடுக்கிறது.இதன் மூலம் உங்களுக்கும் நல்ல குவாலிட்டியான வீடியோவினை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவெனில் காப்பிரைட் செய்யப்பட்ட எந்தவொரு வீடியோவினையும் நீங்கள் தரவிறக்கம் செய்ய முடியாது.


அதே போல You Tube வீடியோவில் சில வீடியோக்களின் லிங்குக்கள்  https://www.youtube.com/watch?v=ycWvQgpFH7E&feature=related    என்று காணப்படும். அதனை டவுன்லோட் செய்ய & என்பதற்க்கு முன்னால் உள்ள லிங்கினை மட்டும் காப்பி பேஸ்ட் செய்ய வேண்டும். எனக்கு தெரிந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே. இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டம் இட்டால் உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன்.

No comments:

Post a Comment