நாராயணசாமி ஒரு கட்சியின் எம்.எல்.ஏ.
கேரளாவுக்கு சுற்றுலா சென்ற அவர், சட்டைவாங்க துணிக் கடைக்கு சென்றார். அங்கே அழகான இளம்பெண் ஒருவள் சேல்ஸ் கேர்ளாக இருந்தாள்.
சின்ன கட்டம் போட்ட வெள்ளை கலர் சட்டைதான் நாராயணசாமிக்கு தேவை.
எனவே, அவர் விற்பனைப் பெண்ணிடம், "கொச்சு கள்ளி... வயற்றில் உண்டோ?"
உடனே அந்தப் பெண் பளார் என்று அவரை அறைந்து விட்டாள்.
நாராயணசாமிக்கு தமிழே தகறாரு ... இதில் மலையாளம் வேறு....
அது வேறொன்றும் இல்லை....
கொச்சு என்றால் சின்ன. கள்ளி என்றால் கட்டம்.
வொயிட் என்பதை கேரளத்தில் வயற் என்பார்கள்.
அவர் கேட்டது சின்ன கட்டம் போட்ட வொயிட் கலர் சட்டை இருக்கிறதா என்றுதான்.
அதன் இன்னொரு அர்த்தம்,
"அடி கள்ளி உண்டாயிருக்கியா"
No comments:
Post a Comment