சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 May 2014

மேடி டிப்பெட் - ஆஸ்திரேலிய தேவதை


சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவதுதான்.இந்த வார்த்தை நம் வாழ்க்கையில் அடிக்கடி யாராவது சொல்ல நாம் கேட்டிருக்கலாம். ஆனால் வெறும் இரண்டே நிமிடங்களில் கோடிக்கணக்கான மக்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறாள் ஆஸ்திரேலியாவை சார்ந்த மிக் மற்றும் கெரின் டிப்பெட் என்ற தம்பதியின் குழந்தை மேடி டிப்பெட்.


2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யூ டுயூப்பில் அப்லோட் செய்யப்பட்ட மேடி டிப்பெட்டும், அவளது தந்தையும் பேசிக்கொள்ளும் வீடியோவில் " உனக்கு அப்பா பிடிக்குமா? அம்மா பிடிக்குமா? என்று கேட்கிறார். கேள்வியை முடிக்கும் முன்பே மேடி அம்மாதான் என்று சொல்ல " நான் உனக்கு பொம்மை வாங்கி தருகிறேன்.திரும்ப சொல்லு அப்பா பிடிக்குமா? அம்மா பிடிக்குமா? என்று கேட்கிறார். அப்பா தான் பிடிக்கும் என்று மேடியை சொல்ல வைக்க அவள் தந்தை கேட்க்கும் கேள்விகளை மேடி எப்படி சமாளிக்கிறாள் என்பதை காட்டுகிறது இந்த வீடியோ.

 மேடியின் மழை பேச்சும், எக்ஸ்பிரஸ்ண்களும் பார்ப்பவர்களின் மனதை ஈர்க்கின்றன. மொழி தெரியாதவர்கள் கூட அவளின் முக அசைவில் நடப்பதை புரிந்து கொள்ளலாம். தந்தையின் அன்புத்தொல்லை தாங்காமல் கோபப்படும் போது கூட அவளின் கோபம் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இறுதியில் "அப்பாதான் பிடிக்கும்" என்று சொல்லிவிட்டு அடுத்த நொடியே "சும்மாதான் சொன்னேன், அம்மாதான் பிடிக்கும் என்று அப்பாவை கலாய்க்கும் போது நம் மனதை கொள்ளை கொல்கிறாள். அவளுடைய தாத்தாவிற்க்கும், பாட்டிக்கும் குழந்தையை காட்டுவதற்காக ஒரு வயதாகும் போது ஜஸ்ட் ஒரு போட்டோ எடுக்க முயற்சி செய்யும் போது எடுத்த எதார்த்தமான பதிவு. 2012 ஆம் ஆண்டில் அப்லோட் செய்யப்பட்ட இந்த வீடியோவை இதுவரை சுமார் 1.5 கோடி பார்வையாளர்கள் எண்ணிக்கையை தாண்டியிருக்கிறது.

ஆனால் இப்போது இந்த புத்திசாலி குழந்தை மேடி டிப்பெட் கடவுளின் குழந்தை ஆகிவிட்டாள். ஆம். இப்போது அவள் நம்மிடையே இல்லை. கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி காலம் அடைந்துவிட்டாள் மூன்று வயது மேடி டிப்பெட்.



17 ஆம் தேதி ஜலதோஷம் இருப்பதற்காக வீட்டிற்க்கு அருகில் இருந்த ஒரு டாக்டரை பார்க்க அவர் பார்த்து விட்டு சாதாரண ஜலதோஷம் தான், பிரச்சனையில்லை என்று சொல்லிவிட வீட்டுக்கே வந்துவிட்டனர். ஆனால் நேரம் அதிகம் ஆக ஆக ஜலதோஷம் தீவிரம் ஆக வேறு ஒரு பெரிய ஹாஸ்பிடலுக்கு கூட்டி சென்றிருக்கின்றனர். அங்கு சோதனை செய்தபோது இரண்டு விதமான வைரஸ்கள் குழந்தையை பாதித்திருப்பதாகவும், அதில் ஒன்று மேடியின் இதயத்தை தாக்கி கொண்டு இருப்பதையும் டாக்டர்கள் கண்டுபித்து இருக்கிறார்கள். இனி எதுவும் செய்ய முடியாது எனும் சூழ்நிலை. சற்று நேரத்தில் தனக்கு மிகவும் பிடித்த தந்தையின் மடியிலேயே இயற்கையை தழுவினாள் மேடி டிப்பெட்.

விஷயம் தெரிந்த பின்னர் இதுவரை வீடியோவில் மட்டுமே பார்த்தவர்கள் எத்தனையோ பேர் அவளது பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்கிறார்கள் இன்னமும். மேடியின் அம்மா கெரின் டிப்பெட் சொல்லும் போது " மேடி இந்த உலகில் நல்ல மாற்றங்களை கொண்டு வந்திருக்க கூடியவள். ஆனால் அவளுக்கு கொடுத்து வைக்கவில்லை போலும். ஆனாலும் இன்னும் பத்து வருடம் கழித்தும் மன உளைச்சலில் இருக்கும் ஏராளமானோர் மேடியின் வீடியோவை பார்த்து மகிழ்ச்சியடைவார்கள். அதுதான் மேடியின் வாழ்க்கையின் அர்த்தம்" என்று கண்ணீருடன் கூறியிருக்கிறார் கெரின் டிப்பெட்.

 மேடி டிப்பெட்டுக்காக ஆஸ்திரேலியாவின் நியூகேஸ் பூங்காவில் நடந்த நினைவு தின கூட்டத்தில்கூட பெற்றோரின் விருப்பப்படி புன்னகைகளும், பலூன்களும் நிரம்பிய மகிழ்ச்சியான நாளாகத்தான் கடந்திருக்கிறது. அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவதில் தான் நம் வாழ்க்கையின் அர்த்தம் இருக்கிறது என்று உலகுக்கு உணர்த்திய மேடி டிப்பெட் இன்றும் மற்றவர்களை சந்தோஷப்படுத்த காத்திருக்கிறாள் நாம் நம் வாழ்வில் யாரை சந்தோஷபடுத்துகிறோம் என்று பார்க்கவும்!!! மேடி டிப்பெட் என்ற தேவதை நம்முடன் வாழ நாம்தான் கொடுத்துவைக்கவில்லை போலும்.

No comments:

Post a Comment