ஆன்லைனில் சம்பாதிக்க கிளிக்குங்கள்
சென்னை ஆன் ரோடு மதிப்பில் விலை விவரம்: பேஸிக் பெட்ரோல் = 5.43 லட்சம் எஸ் எக்ஸ் ஆப்சனல் பெட்ரோல் = 7.52 லட்சம் பேஸிக் டீசல் = 6.51 லட்சம் எஸ் எக்ஸ் ஆப்சனல் டீசல் = 8.60 லட்சம். முந்தைய மாடலான கிராண்ட் ஐ10 பிளாட்பார்மில் தயாரிக்கபட்டிருப்பதால் எக்ஸெண்ட் அச்சு அசலாக கிராண்ட் ஐ10 அண்ணனை போலவே இருக்கிறது.நீங்கள் கார்களை பற்றி அதிகம் தெரிந்தவர் எனில் முன்பக்கம் கிரில்களை சுற்றியுள்ள சில்வர் க்ரோம் ரிங் எடுப்பாக தெரிவதை கண்டுபிடித்து விடுவீர்கள்.ஷார்ப்பான ஹெட்லைட்ஸ்,பார்க்கிங் செய்யும் போது கீறல்கள் விழாமல் இருக்க காரின் இருபுறமும் பக்கவாட்டில் ரப்பர் பீடிங் கொடுத்திருப்பது ஸ்போர்ட்ஸ் காரை போன்ற அமைப்பை தருகிறது.காரின் ரூப் பகுதி, அருவி போல பின்பக்க பூட் வழியாக முடிவடைவது புதிய டிசையரை நினைவுபடுத்துகிறது. டெயில் லைட்டுகள் சிம்பிலாகவும் , இரவு நேரங்களில் அதை போடும்போது நல்ல வெளிச்சத்தை கொடுக்கும். ரியர்வியூ மிரர்களில் இண்டிகேட்டர் அமைத்திருப்பது பிர்மீயம் செடானில் இருக்கும் வசதி. எக்ஸெண்ட்டின் முக்கியமான சிறப்பம்சம் வீல்கள் தான்.15 இஞ் அலாய் வீல்கள், செம ஸ்போர்ட்டியாகவும், ஸ்டைலாகவும் இருக்கிறது.இதை "டைமண்ட் கட் அலாய் வீல்கள்" என சொல்கிறது ஹீண்டாய்.எடையும் ஒரளவு இருக்கிறது என்பதால் பீல்டு குவாலிட்டியில் கிராண்ட் ஐ10 விட நன்றாகவே இருக்கும்.பெட்ரோலுக்கு விடிவிடி பேட்ஜ் இருந்தால் பெட்ரோல் எனவும் க்ற்டீ என்ற பேட்ஜ் இருந்தால் டீசல் எனவும் அடையாளப்படுத்துகிறது ஹீண்டாய்.மொத்தத்தில் ஹீண்டாய் டிசைனர்கள், கிராண்ட் ஐ10 வடிவமைக்கும்போதே அடுத்த செடானுக்கும் சேர்த்து டிசைன் செய்துவிட்டார்கள் போல.
ஆன்லைனில் சம்பாதிக்க கிளிக்குங்கள்
கிராண்ட் ஐ10 இண்டிரியர் போலவே இருக்கிறது எக்ஸெண்ட்டின் உள்பக்கமும்.காரின் உள்ளே நீங்கள் அமர்ந்தால் கிராண்ட் ஐ10 காருக்குள் இருப்பதை போலவே நீங்கள் உணர்வீர்கள்.கீ-லெஸ் ஆப்சனோடு, பட்டன் ஸ்டார்ட் வசதியும் எக்ஸெண்டில் உண்டு.ஒரு ஹேட்ஸ்பேக் காரின் வீல்பேஸ்தான் என்பதால், பேனட் முன்புறம் நீளாமல், சாலை நன்றாக தெரிகிறது.உயரம் குறைவானவர்கள் ஓட்டும் வகையில் சீட்டின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.ஏ.சியை ஆன் செய்ததும் சில்லென்று ஆகிவிடுகிறது கேபின்.ரியர் ஏ.சி வசதியும் உண்டு என்பதால் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் குலுகுலு பயணத்தை அனுபவிக்கலாம். ஆனால் ஏ.சி டனல் நீண்டு இருப்பதால் பின்சீட்டில் மூன்று நபர்கள் அமர்ந்தால் அசவுகரியமாக இருக்கும். 5 ஸ்பிடு மேனுவல் கியர் பாக்ஸ் லக்ஸரி லுக்கில் இருக்கிறது.பெட்ரோல் வேரியண்டில் 4 ஸ்பிடு ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் வசதியும் உண்டு.டீசல் வேரியண்ட் என்றால், ரிவர்ஸ் மேல் நோக்கியும் பெட்ரோல் என்றால் சாதாரண கார்களில் இருப்பது போலவும் இருக்கிறது. கதவுகள் பெரியதாக இருப்பதால் குண்டாக இருப்பவர்களும் எளிதில் உள்ளே செல்லலாம். எக்ஸெண்டில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அதன் வசதிகள் தான். இதில் மிக முக்கிய மாடலான எஸ்.எக்ஸ் ல் ஆட்டோ கிளைட்மேட் கண்ட்ரோல் , ரியர் பார்க்கிங்க் சென்சார், ரியர் ஏ.சி, ரியர்வியூ கேமரா, கீ-லெஸ் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் , சென்ட்ரல் லாக்கிங், எலெக்ட்ரிக் போல்டிங் மெட்டிரியல்ஸ், காரை சுற்றிலும் பாட்டில் ஹோல்டர்கள், கப் ஹோலடர்கள், ஸ்டியர்ங் மவுண்டட் கண்ட்ரோல் என்று வசதிகளை அள்ளி இறைத்திருக்கிறார்கள். மேலும் இதன் ஆடியோ ஸிஸ்டம் துள்ளலான இசையை கொடுக்கிறது. ஆடியோ ஸிஸ்டத்தில் புளுடூத் வசதியும் உண்டு. பூட்-ஸ்பேஸ் 407 லிட்டர் இடவசதி இருக்கிறது. 1.1 லிட்டர் 3 சிலிண்டர்கொண்ட CRDi டீசல் இன்ஜின், 12. கப்பா கொண்ட VTVT பெட்ரோல் இன்ஜின் என இரண்டு ஆப்ஷன்களில் வருகிறது எக்ஸென்ட்.
ஆன்லைனில் சம்பாதிக்க கிளிக்குங்கள்
'நான் அப்படித்தான் வைப்ரேஷன் ஆவேன்’ என்று ஆரம்பத்தில் அடம்பிடிக்கிறது CRDi டீசல். ஆனால், கொஞ்சூண்டு ஆர்பிஎம் தாண்டிய பிறகு அதிர்வுகள் அரவமற்றுப் போகின்றன. அமேஸின் 1.5 லிட்டரைவிடவும், டிசையரின் 1.3 லிட்டரைவிடவும் சிசி குறைவாக இருந்தாலும், லோ ரேஞ்சில் எக்ஸென்ட்டின் திராட்டில் ரெஸ்பான்ஸ் இரண்டு கார்களுக்கும் இணையானதாகவே இருக்கிறது. காரணம் - எக்ஸ்ட்ரா டார்க். 18.4 kgm கொண்ட டார்க், சிட்டி டிராஃபிக்கில் புதுந்து விளையாட உதவுகிறது. கிராண்ட் ஐ10-ல் இருக்கும் அதே இன்ஜினை செடான் காருக்காக கொஞ்சம் ரிஃபைன் செய்திருக்கிறது ஹூண்டாய். அதாவது, 70 bhp-யும் 16.3 kgm டார்க்கும்கொண்ட கிராண்டைவிட 1 bhp அதிகமாகவும், 2.1 kgmடார்க்கும் எக்ஸ்ட்ராவாக வெளிப்படுவதால், பிக்-அப் பிரமாதம். ஆனால், மிட் ரேஞ்சில் பெரிதாக 'வ்வ்ர்ர்ரூம்’ பெர்ஃபாமென்ஸை எதிர்பார்க்க முடியவில்லை. இதுவே நான்கு சிலிண்டர்கள்கொண்ட 1.2 கப்பா பெட்ரோல் இன்ஜினில், ஒரு மென்மைத் தன்மை தெரிந்தது. நெடுஞ்சாலையில் 83 bhp, பரபரவென்று தன் வேலையைக் காட்டுகிறது. 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்கும், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸும் இதற்கு ஏற்றவாறு இருக்கின்றன. நெடுஞ்சாலையில் இதன் டாப் ஸ்பீடைச் சோதனை செய்தபோது, அதிர்வுகளற்று 175 கி.மீ-யைக் கடந்து சென்றது எக்ஸென்ட். பொதுவாக ஃபோர்டு, ஃபியட், மாருதி அளவுக்கு ஹூண்டாயில் ஓட்டுதல் தரம் இருக்காது என்ற குற்றச்சாட்டை ஓரளவு பொய்யாக்கி இருக்கிறது எக்ஸென்ட். டாப் ஸ்பீடில் நம்பிக்கையுடன் பயணிக்க முடிகிறது. திராட்டில் ரெஸ்பான்ஸ் லேசாகவும் வேகமாகவும் இருப்பதால், நம் சொல்படி நகர்கிறது எக்ஸென்ட். கிராண்ட் ஐ10 போலவே ஓட்டுதவற்கு பெப்பியாகவும், ஓவர்டேக் செய்யும்போது கையாளுவதற்கு எளிமையாகவும் உள்ளது. நான்காவது கியரில்கூட 100 கி.மீ வேகம் வரை செல்ல முடியும்படி கியர்பாக்ஸ் வடிவமைக்கப்பட்டிருப்பதால், சிட்டி டிராஃபிக்கில் அடிக்கடி கியரை மாற்றச் சொல்லி தொந்தரவு கொடுக்கவில்லை எக்ஸென்ட். கிராண்ட் ஐ10-ல் இருக்கும் அதே சஸ்பென்ஷன் இங்கேயும் ஷிஃப்ட் ஆகியிருக்கிறது.
ஆன்லைனில் சம்பாதிக்க கிளிக்குங்கள்
<a
target="_blank"
href="http://www.goldenclix.com/?ref=Onlinejobs8447"><img src="http://www.goldenclix.com/images/banner1.gif"
border="0" width="468" height="60"
/></a>
முன் பக்கம் இண்டிபென்டன்ட் மெக்ஃபர்ஸன் ஸ்ட்ரட், பின் பக்கம் டார்ஷன் பீம் ஆக்ஸில், ஸ்பீடு பிரேக்கர்களில் அசால்ட்டாக எகிறிக் குதிக்க உதவுகிறது. ஏபிஎஸ் பிரேக்குகள் ஓகே ரகம். ஒரு செடான் காருக்கே உரிய டயர்கள், ஓரளவு கிரிப்பைத் தருகின்றன. கியர்பாக்ஸ் முதல் கிளட்ச் வரை கிட்டத்தட்ட எல்லாமே கிராண்ட் ஐ10-ன் காப்பிகேட் என்பதால், நிச்சயம் ஒரு ஹேட்ச்பேக் காரின் மைலேஜ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். ARAI விதிமுறையின்படி எக்ஸென்ட் டீசல், மைலேஜ் 24.4 kmpl தரும் என்கிறது ஹூண்டாய். முழுமையான டெஸ்ட் டிரைவ் செய்யாததால், ஆட்டோமேட்டிக், பெட்ரோல் எக்ஸென்ட்டின் மைலேஜ் விவரங்கள் முழுமையாகத் தெரியவில்லை.
No comments:
Post a Comment