சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

15 Sep 2015

சகாயம் வடிவில் விஜயகாந்தை பார்க்கிறேன்: கோவையில் குபீர் கிளப்பிய பிரேமலதா!

சகாயம் வடிவில் நான் விஜயகாந்தை பார்க்கிறேன். நியாயத்தை நிலை நிறுத்த சகாயம் பாடுபடும் அதே மதுரை மண்ணில் பிறந்த விஜயகாந்த் அவருக்கு உதாரணமாக இருக்கிறார் என்று கோவையில் நடந்த தே.மு.தி.க. முப்பெரும் விழாவில் பிரேமலதா பேசினார்.

கோவையில் தே.மு.தி.க.வின் 11 ஆம் ஆண்டு துவக்க விழா, விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி வறுமை ஒழிப்பு தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு தே.மு.தி.க. மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

அப்போது, ''உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் தமிழக அரசின் இந்த மாநாடு கண்துடைப்பு மாநாடு. நான்கரை ஆண்டுகள் சும்மா இருந்துவிட்டு, ஆறுமாதத்தில் என்ன செய்துவிட முடியும்?. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2.40 லட்சம் கோடி முதலீடு வந்து விட்டதாக அரசு கூறுகிறது. ஆனால், இங்கு ஆயிரக்கணக்கான சிறு, குறு, நடுத்தர உற்பத்தியாளர்கள் வேலையிழந்து வருகின்றனர். சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், திட்டமிடப்பட்டுள்ள தொழிற்சாலைகள், திட்டங்களை வெள்ளை அறிக்கையாக மக்கள் மத்தியில் அரசு வெளியிட வேண்டும்.
கிரானைட் குவாரி மோசடிகளை விசாரித்து வரும் சகாயம், நியாயத்தை நிலை நாட்ட அமாவாசை இரவில் மயானத்தில் படுத்து தூங்குகிறார். அந்த காட்சியை நான் டி.வி.யில் பார்த்தேன். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், சகாயம் எனக்கு கேப்டனை போல தெரிகிறார். நியாயத்தை நிலை நிறுத்த சகாயம் போராடி வரும் அதே மதுரை மண்ணில் பிறந்த விஜயகாந்த் தான் அவருக்கு உதாரணமாக இருக்கிறார். சகாயத்துக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால் தவறான அதிகாரிகள் களையெடுக்கப்பட்டு, சகாயம் மாதிரியான நேர்மையான அதிகாரிகள் தான் இருப்பார்கள்.

விஜயகாந்த் நடித்த படங்கள் தான் போலீசாருக்கு பாடங்களாக உள்ளன. போலீஸ் அகடாமியில் விஜயகாந்த்தின் படங்கள் தான் போட்டு காட்டப்படுகிறது. போலீஸ் அதிகாரிகளுக்கு உதாரணமாக இருப்பவர் தான் நம் கேப்டன்" என்று அவர் பேசினார்.


No comments:

Post a Comment