சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Sep 2015

உத்தரபிரதேசத்தை புரட்டி போட்ட 27 வயது இளைஞரின் போட்டோ!

முதியவர் என்று பாராமல் ஒரு சப் - இன்ஸ்பெக்டர் இரக்கமே இல்லாமல் நடந்து கொள்ள, அந்த சம்பவம் லக்னோ நகர மக்களை கொதித்தெழ வைத்து விட்டது. 
 
உத்தரபிரதேச முதல்வர்  முதல்வர் அகிலேஷ் யாதவே அந்த புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்து பாதிக்கப்பட்ட முதியவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய உத்தரவிட்டார். தற்போது  மாவட்ட ஆட்சியர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரை  முதியவர் கிருஷ்ணகுமார் வீட்டுக்கு நடையாய் நடக்கிறார்கள். இத்தனைக்கும் காரணம் ஒரு 27 வயது இளைஞர்தான்.

லக்னோவை சேர்ந்த அசுதோஷ் திரிபாதி என்ற 27 வயது புகைப்பட கலைஞர் எடுத்த அந்த புகைப்படங்கள்தான் இணையங்களில் வைரலாகி, தற்போது அந்த இன்ஸ்பெக்டரின் இடை நீக்கத்துக்கும் காரணமாக அமைந்துள்ளது. 

இந்த சம்பவத்தை படம் பிடித்தது குறித்து  திரிபாதி கூறுகையில், '' சம்பவம் நடந்த தினத்தில் வழக்கமாக கிருஷ்ணகுமார் வேலை செய்யும் இடத்தின் அருகில் ஒரு கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் ஒருவர், வி.ஐ.பி வருவதாக கூறி, அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினார். ஆனால் டீ குடித்துக் கொண்டிருந்த கடையில், லஞ்சம்  கேட்டு இப்படி தொல்லை செய்வதாக  என்னிடம் கூறினர்.

அந்த சமயத்தில்தான் கிருஷ்ணகுமாரின் தட்டச்சு எந்திரத்தை அந்த சப் - இன்ஸ்பெக்டர் உடைத்தெறிந்தார். அவர் கையெடுத்து கும்பிட்டும், கொஞ்சமும் இரக்கம் காட்டவில்லை. நான் படம் பிடிப்பதை பார்த்ததும், என்னிடம் வந்து, 'போட்டோக்களை அழிக்கிறாயா... இல்லையா?' என்று மிரட்டினார்.
மேலும் என் வேலையை எப்படி பார்க்க வேண்டுமென்று நீ சொல்லித் தர வேண்டாமென்று கத்தினார். என்னிடம் வந்த போது, அவரது பெயர் எழுதப்பட்ட பேட்ஜை சற்று குளோசப்பாக படம் எடுத்தேன். அதை வைத்துதான் அவரது பெயரை பிரதீப் குமார் என்று தெரிந்து கொண்டேன். அப்போது அவர் இன்னும் ஆவேசமடைந்தார். ஆனால் நான் மிரளவில்லை. எடுத்த படங்களை அழிக்க முடியாது என்று அவரிடம் கூறிவிட்டு,  நான் பணிபுரியும்' தைனிக் பாஸ்கர்' பத்திரிகை அலுவலகம் வந்து விட்டேன். 

அடுத்த நாள் தைனிக் பாஸ்கரில் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டேன். லக்னோவே பற்றிக் கொண்டது. சமூக வலைத்தளங்களில் நான் எடுத்த படம் அதிகமாக பரவப்பரவ லக்னோ நகர காவல்துறை அதிர்ந்து போனது.  முதல்வர் அகிலேஷ் யாதவே நேரடியாக நடவடிக்கை எடுக்கத் தொடங்கி விட்டார். நான் எடுத்த புகைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு என்னை மகிழ்ச்சியடைய வைத்தாலும், அந்த முதியவர் கெஞ்சிய போது, என்னால் தடுக்க முடியவில்லையே என்ற வருத்தமும்  இருக்கத்தான் செய்கிறது.


தற்போது பத்திரிகை துறைக்கு பொதுமக்களிடம் இருக்கும் மதிப்பு குறைந்து வரும் நிலையில், எனது புகைப்படங்கள் மீடியாவுக்குள்ள பவரை நிரூபிப்பது போல அமைந்தது  இன்னொரு மகிழ்ச்சி. அந்த புகைப்படம் வெளியாகி 2 நாட்கள் ஆகியும் இன்று வரை எனது  செல்போன் ஓய்வே இல்லாமல் அலறிக்கொண்டிருக்கிறது.  2 மணி நேரத்திற்கு ஒரு முறை சார்ஜ் போட்டுக் கொண்டே இருக்க வேண்டியது உள்ளது.  அந்தளவுக்கு வாழ்த்து மழையில் குளித்துக் கொண்டு இருக்கிறேன்''  என்றார்.

அசுதோஷ் திரிபாதி, லக்னோவில் உள்ள அமிதி பல்கலைக்கழகத்தில் இதழியல் முடித்தவர். 'தைனிக் பாஸ்கர் ' பத்திரிகையில் இணைவதற்கு முன் 'நவபாரத் டைம்ஸ்' நாளிதழில் பணிபுரிந்தவர். 


No comments:

Post a Comment