சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Sept 2015

”மங்கள்யான்” ஓர் ஆண்டு நிறைவு: செவ்வாய் கிரகத்தின் அரிய புகைப்படங்கள் வெளியீடு

”மங்கள்யான்” என்று அழைக்கப்படும் “செவ்வாய் சுற்றுகலன் திட்டம் (Mars Orbiter Mission)” விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. 2014 செப்டம்பர் 24 அன்று செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் இணைந்தது.

இந்நிகழ்வை கொண்டாடும் வகையில் அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையம், கடந்த ஓராண்டாக மங்கள்யான் எடுத்த செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை கொண்டு ”செவ்வாய் அட்லஸ்”(Mars Atlas) வெளியிட்டுள்ளனர்.



மார்ஸ் கலர் கேமரா(Mars Color Camera) மூலம் apoapsis நிலையில் இருந்து, அதாவது 72,000 கி.மீ தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட இப்புகைப்படங்கள் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தின் மேகங்கள், தூசுகள் மற்றும் எதிரொளித்திறன் (Albedo)  ஆகிய தரவுகளையும் வழங்குகிறது. Periapsis நிலையில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் செவ்வாயின் மேற்பரப்பு பற்றிய செய்திகளை வழங்குகிறது. இப்புகைப்படங்கள் இந்த அட்லஸ் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

Payloads எனப்படும் துணைக் கருவிகள் ஐந்துடன் செவ்வாய் கிரகத்தை மங்கள்யான் ஆராய்ந்து வருகிறது. 1960களில் இருந்து செவ்வாய் கிரகத்தின் மீதான ஆராய்ச்சி நடந்து வருகிறது. மிகக்குறைந்த கால அளவில் உருவாக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம் செவ்வாய் பற்றிய பல முக்கிய தகவல்களை தினம்தோறும் தந்துகொண்டிருக்கிறது.

Mars Atlasஐ இங்கே தரவிரக்கிகொள்ளலாம்.



No comments:

Post a Comment