ஹிந்தி, ஆங்கில படங்களை கவனிப்பதுபோல நாம் மராத்தி போஜ்புரி படங்களை பற்றி கேள்விபடுவது கூட கிடையாது. ஒரு அளவுக்கு மலையாளம், தெலுங்கு படங்களை கூட அவ்வப்போது காண முடிகிறது. ஆனால், சைலன்டாக 'கோர்ட்' எனும் மராத்தி படம் இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகளுக்கு இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்டு உள்ளது.
இது முதல் முறை அல்ல, 2004ல் 'ஷ்வாஸ்', 2009ல் 'ஹரிஷ்சந்திராஸ் ஃபேக்டரி'யின் வரிசையில் இது மூன்றாவது மராத்தி படம் என்பது குறிப்பிடத்தக்கது. வியன்னா, சிங்கப்பூர், வெனிஸ் திரைப்பட விழாகளில் விருதுகளை குவித்தது மட்டும் அல்லாது சிறந்த திரைப்படம் என தேசிய விருதும் பெற்றுள்ளது 'கோர்ட்'. இந்த திரைப்படத்தை இயக்கி இருப்பவர் சைதன்யா தம்ஹானே.
'கோர்ட்' படத்திற்கு பலமான போட்டி கொடுத்தன பாகுபலி, காக்கா முட்டை, மேரி கோம், மாசான், பீ.கே, குற்றம் கடிதல். அட பயங்கரமான பட்டியலா இருக்கே? சூப்பர் ஹிட் படங்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு இந்த படத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்?
'கோர்ட்' படத்திற்கு பலமான போட்டி கொடுத்தன பாகுபலி, காக்கா முட்டை, மேரி கோம், மாசான், பீ.கே, குற்றம் கடிதல். அட பயங்கரமான பட்டியலா இருக்கே? சூப்பர் ஹிட் படங்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு இந்த படத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்?
தலைப்புக்கு ஏற்றார் போல கதை ஒரு நீதிமன்றத்தின் உள்ளே நடைபெறுகிறது. குற்றம் சாட்டப்பட்ட ஒரு கிராமப்புற பாடல் கலைஞரின் வாயிலாக இந்திய சட்டத்துறையில் உள்ள தவறுகளை சுட்டி காட்டுகிறது இந்த படம். எந்தவித பெரிய நடிகர்களும் இல்லாமல் வெறும் கதையின் பலத்திலேயே பயணம் செய்கிறது 'கோர்ட்' திரைப்படம். முக்கால்வாசி படம் கோர்ட்டுக்கு உள்ளே நடை பெற்றாலும் எந்த இடத்திலும் அலுக்காமல், எதார்த்தத்தை மட்டுமே வெளி கொண்டு வருகிறது.
சிறந்த நடிப்பின் மூலம் 16 பேர் கொண்ட தேர்வாளர்கள் குழுவை அசர வைத்திருக்கின்றது இந்த படம். இதை இயக்கி இருப்பது ஒரு அறிமுக இயக்குநர் என்பது கூடுதல் சிறப்பு. குழுவின் தலைவர் அமோல் பலேக்கர் சென்ற மாதம் ஒரு பேட்டியில், ''இந்தியா போன்ற ஒரு நாட்டிலிருந்து ஒரே ஒரு படத்தை மட்டும் தேர்ந்தெடுப்பது கடினமான வேலை. வேறு எந்த நாட்டிலும் இத்தனை வகையான மொழிகளிலும், கலாச்சார பிண்ணனியில் இருந்தும் படங்கள் வராது" என்று கூறியிருந்தார்.
இது வரை இந்தியா சிறந்த பிறமொழி திரைப்படம் பிரிவில் ஆஸ்கார் விருது வாங்கியது இல்லை. கடைசியாக டாப் 5 பட்டியலை தொட்ட படம் லகான். கோர்ட் இந்த கவலையை தீர்த்து வைக்கும் என்று நம்புகிறது சினிமா வட்டாரம்!
2000 - ஹே ராம்
2001 - லகான்
2002 - தேவதாஸ்
2004 - ஷ்வாஸ்
2005 - பஹேலி
2006 - ரங் தே பசந்தி
2007 - எக்லாவ்யா: ராயல் கார்ட்
2008 - தாரே ஜமீன் பர்
2009 - ஹரிஷ்சந்திராஸ் ஃபேக்டரி
2010 - பீப்லி லைவ்
2011 - ஆதாமின்டேமகன் அபு
2012 - ப்ர்ஃபி
2013 – தி குட் ரோட்
2014 – லையர்ஸ் டைஸ்
2000 - ஹே ராம்
2001 - லகான்
2002 - தேவதாஸ்
2004 - ஷ்வாஸ்
2005 - பஹேலி
2006 - ரங் தே பசந்தி
2007 - எக்லாவ்யா: ராயல் கார்ட்
2008 - தாரே ஜமீன் பர்
2009 - ஹரிஷ்சந்திராஸ் ஃபேக்டரி
2010 - பீப்லி லைவ்
2011 - ஆதாமின்டேமகன் அபு
2012 - ப்ர்ஃபி
2013 – தி குட் ரோட்
2014 – லையர்ஸ் டைஸ்
No comments:
Post a Comment