பிரசவ அறுவை சிகிச்சையின்போது ராணுவ வீரர் மனைவியின் வயிற்றில் துணியை வைத்து தைத்துவிட்டதாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை மற்றும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
திருச்சி அருகே குண்டூர் பர்மா காலனியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஆனந்த் (31). இவரது மனைவி ராஜலட்சுமி (26). இவர்களுக்கு 1½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ராஜலட்சுமி மீண்டும் கருவுற்றார். பிரசவத்திற்காக திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தக்கடையில் உள்ள குழந்தை ஏசு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகான பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின்னர் ராஜலட்சுமிக்கு தொடர்ந்து வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதில் அவதிப்பட்டு வந்த ராஜலட்சுமிக்கு வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ராஜலட்சுமியை உடனடியாக அவரது குடும்பத்தார் அருகில் இருந்த மற்றொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கின்றனர்.
அந்த தனியார் மருத்துவமனையில் ராஜலட்சுமி 10 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் அவரது உடல் நிலை மேலும் மோசமானது. இதில் அதிர்ச்சி அடைந்த ராஜலட்சுமியின் குடும்பத்தார், பெங்களூரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ராஜலட்சுமியின் வயிற்றை ஏதோ ஒரு பொருள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதை தொடர்ந்து அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் ராஜலட்சுமியின் வயிற்றில் துணி இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். உடனே அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த துணியை அகற்றி வெளியே எடுத்துள்ளனர். அதன்பின் தொடர் சிகிச்சை முடிந்து ராஜலட்சுமி சகஜ நிலைக்கு வந்து வீடு திரும்பி இருக்கிறார். ராஜலட்சுமியின் வயிற்றில் இருந்து மருத்துவர்கள் எடுத்த அந்த துணி 1.29 மீட்டர் நீளமும், 11 சென்டி மீட்டர் அகலமும் இருந்துள்ளது. அது, சிகிச்சையின்போது பயன்படுத்தப்படக் கூடிய பேன்டேஜ் துணி என தெரிய வந்திருக்கிறது. மேலும் அந்த பேன்டேஜ் துணியை, ராஜலட்சுமிக்கு பிரசவ அறுவை சிகிச்சை செய்தபோது மருத்துவர்கள் தவறுதலாக அவரது வயிற்றுக்குள் வைத்து தையல் போட்டுள்ளனர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.
இதை தொடர்ந்து தனியார் மருத்துவமனை மீதும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜலட்சுமியின் கணவர் ஆனந்த தனது குடும்பத்தாருடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில், ''பிரசவத்திற்காக எனது மனைவி ராஜலட்சுமியை திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து இருந்தேன். அங்கே எனது மனைவிக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்தது முதல் அவருக்கு வயிற்றில் கடுமையான வலி இருந்தது. இதை தொடர்ந்து வேறு ஒரு மருத்துவமனையில் என் மனைவியை அனுமதித்து சிகிச்சை அளித்தோம். அப்போது என் மனைவியின் வயிற்றில் இருந்து மருத்துவர்கள் பேன்டேஜ் துணி எடுத்துள்ளனர். என் மனைவிக்கு பிரசவ சிகிச்சை செய்தபோது அந்த மருத்துவமனை மருத்துவர்கள் தவறுதலாக பேன்டேஜ் துணியை வயிற்றுக்குள் வைத்து தைத்துள்ளனர். அந்த துணி ராஜலட்சுமியின் வயிற்றில் இன்னும் சில நாட்கள் இருந்தால் அவர் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி இருக்கும். அதனால், கவனக்குறைவாக செயல்பட்ட தனியார் மருத்துவமனையின் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment