தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.
முன்னதாக சட்டப்பேரவைக்கு வருகை தந்த முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, காவல்துறை தலைமை இயக்குனர் அசோக் குமார், சென்னை காவல் துறை ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இது தொடர்பான புகைப்படங்களை தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்தது. புகைப்படங்களை பிரசுரத்திற்காக பார்த்தபோது, அனைத்து புகைப்படங்களிலும் ஒருவித செயற்கைத்தனம், அதாவது போட்டோ ஷாப் முறையில் cut and paste செய்தது பளிச்சென தெரிகிறது. படம் எடுத்தபோது ஏதோ குளறுபடி நடந்து, அதனை சமாளிப்பதற்காக இந்த அரை குறை ஒட்டு வேலைகள் நடந்திருக்கலாம் என, இந்த புகைப்படங்களை வைத்து சமூக வலைத்தளங்களில் ஏகத்திற்கும் விமர்சனம் செய்தும், கிண்டலடித்தும் வருகின்றனர்.
படங்களில் காணப்படும் similarity யும், வித்தியாசமும் கீழே உள்ள படங்களில் குறியிட்டு காண்பிக்கப்பட்டுள்ளன. இன்னும் உற்று நோக்கினால் உங்களது கண்களுக்கும் மேலும் சில குறைபாடுகள் தெரியவரலாம்.
கீழே உள்ள படத்தில் என்ன ஒட்டுவேலை என்பது அபூர்வ வர்மாவின் முகத்தை பார்த்தாலே தெரியும்.
மேற்கூறிய படங்களை எடுக்கும்போது என்ன நடந்தது என்பது செய்தி மக்கள் தொடர்பு துறைக்கே வெளிச்சம்!
No comments:
Post a Comment