சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Sept 2015

சிக்கலான வேதாந்த விஷயங்களை எளிமையாக விளங்க வைத்தவர் சுவாமி தயானந்த சரஸ்வதி!

சுவாமி தயானந்த சரஸ்வதி மிகவும் எளிமையானவர். அனைவரையும் சமமாகவே பாவித்து அன்பு செலுத்துபவர். சிக்கலான வேதாந்த விஷயங்களைக்கூட மிகவும் எளிமையாகவும் கதைபோலவும் நகைச்சுவை கலந்து சொல்லி விளங்க வைப்பவர். குறிப்பாக, வேதாந்தக் கருத்துக்களை இன்றைய இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் பிரத்தியேகமான கவனமும் அக்கறையும் கொண்டிருப்பவர்.
''இன்றைய இளைஞர்கள் நம்மைவிடவும் மிகுந்த புத்திசாலிகள். எதையும் கற்றுக் கொள்வதில் துடிப்பும் ஆர்வமும் உள்ளவர்கள். அவர்களிடம் உள்ள ஒரே குறை பொறுப்பு இல்லாததுதான். நாம் முதலில் அவர்களுடைய பொறுப்பு உணர்வை அவர்கள் உணரும்படி செய்யவேண்டும். இது சற்று சவாலான பணிதான். ஆனால், நாம் சிரத்தை எடுத்து இதைச் செய்துதான் ஆகவேண்டும் என்றவர் சுவாமி தயானந்த சரஸ்வதி!
''நீங்கள் எங்களுக்குக் கற்றுக்கொடுக்க எதுவும் இல்லை. எங்களிடம் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியதுதான் அதிகம். எனவே, நீங்கள் உங்கள் மதபோதகர்களை எங்கள் நாட்டுக்கு அனுப்பி எங்களுக்கு உபதேசம் செய்யத் தேவையில்லை.'' 

சுமார் 120 வருஷங்களுக்கு முன்பு, நம்மை அடிமைப்படுத்தி ஆண்டு வந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் தலைநகரான லண்டனில், சிங்கத்தை அதன் குகைக்கே சென்று அடக்குவதுபோல் வீர கர்ஜனை புரிந்தார் சுவாமி விவேகானந்தர். அன்று அவரால்தான் புராதனமான நமது வேதாந்த சமயத்தின் உயர்வையும் பெருமையையும் உலகம் புரிந்துகொண்டது. அதுவரை கண்மூடித்தனமாக எதிர்த்து வந்தவர்கள், நமது வேதாந்த தர்மத்தை நோக்கிக் கவரப்பட்டார்கள்.
அன்று சுவாமிஜி அமைத்த பாதையில், அவரைத் தொடர்ந்து பல மகான்கள் பல நாடுகளுக்கும் சென்று, அங்குள்ள மக்களுக்கெல்லாம் நம்முடைய வேதாந்த தர்மத்தை உபதேசிக்கத் தொடங்கினார்கள். அவர்களுள் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஸ்வாமி தயானந்த சரஸ்வதி.
திருவாரூருக்கும் கும்பகோணத்துக்கும் இடையில் உள்ள மஞ்சக்குடியில் 1930ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி  பிறந்த ஸ்வாமிகளின் பூர்வாசிரமப் பெயர் நடராஜன் என்பதாகும். சிறு வயதில் இருந்தே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு இருந்தபடியால், லௌகீகமான விஷயங்களில் அவ்வளவாக பிடிப்பு இல்லாமல்தான் இருந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு, தாம் கொண்டிருந்த ஆன்மிக நாட்டத்தின் காரணமாக, பெங்களூரில் இருந்த சின்மயா மிஷனில் சேர்ந்து, ஆன்மிக சாதனைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். சின்மயா மிஷனில் இருந்து வெளிவந்த 'தியாகி' என்ற இதழின் ஆசிரியராக, சிறப்பான முறையில் பணியாற்றினார்.
1962ல் ஸ்வாமி சின்மயானந்தரிடம் சந்நியாச தீட்சை பெற்றுக்கொண்டார். சில காலம் பெங்களூரில் இருந்த ஸ்வாமிஜி, பின்னர் ரிஷிகேசத்துக்குச் சென்று, அங்கே ஸ்வாமி தாரானந்தர் மற்றும் பிரணவானந்தர் ஆகியோரிடம் வேதாந்தம் கற்பதிலும், தவம் புரிவதிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். அங்கேயே ஓர் ஆசிரமமும் அமைத்து வேதாந்த தர்மத்தைப் பரப்புவதில் தம்மைப் பூரணமாக ஈடுபடுத்திக் கொண்டார். அங்கே அவர் சிறு குடிலில் தொடங்கிய 'ஆர்ஷ வித்யா குருகுலம்’ இன்று நாடெங்கிலும் பல கிளைகளுடன் வேதாந்த தர்மத்தைப் பரப்பி வருகிறது. அமெரிக்க நாட்டின் பென்சில்வேனியாவில் குருகுல முறையில் வேதாந்த வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஏராளமான வெளிநாட்டுச் சீடர்கள் ஸ்வாமிஜியிடம் வேதாந்தம் கற்றுக்கொள்கிறார்கள். கோவை ஆனைக்கட்டி ஆசிரமத்தில்கூட பல வெளிநாட்டு பக்தர்களை நாம் காண முடிந்தது.
ஸ்வாமிஜி மிகவும் எளிமையானவர். அனைவரையும் சமமாகவே பாவித்து அன்பு செலுத்துபவர். சிக்கலான வேதாந்த விஷயங்களைக்கூட மிகவும் எளிமையாகவும் கதைபோலவும் நகைச்சுவை கலந்து சொல்லி விளங்க வைப்பவர். குறிப்பாக, வேதாந்தக் கருத்துக்களை இன்றைய இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் பிரத்தியேகமான கவனமும் அக்கறையும் கொண்டிருப்பவர்.
''இன்றைய இளைஞர்கள் நம்மைவிடவும் மிகுந்த புத்திசாலிகள். எதையும் கற்றுக் கொள்வதில் துடிப்பும் ஆர்வமும் உள்ளவர்கள். அவர்களிடம் உள்ள ஒரே குறை பொறுப்பு இல்லாததுதான். நாம் முதலில் அவர்களுடைய பொறுப்பு உணர்வை அவர்கள் உணரும்படி செய்யவேண்டும். இது சற்று சவாலான பணிதான். ஆனால், நாம் சிரத்தை எடுத்து இதைச் செய்துதான் ஆகவேண்டும்.'' என்கிறார் ஸ்வாமிகள்.
ஸ்வாமிஜியின் அணுக்கத் தொண்டரான ராமன்ஜியிடம் குருகுலத்தின் பணிகள் குறித்துக் கேட்டோம்.
''ஸ்வாமிஜி இங்கே வேதாந்த வகுப்புகள் எடுத்து வருகிறார். நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பலர் இங்கே வந்து தங்கி வேதாந்தம், உபநிஷதங்கள், பகவத் கீதை போன்றவற்றை ஸ்வாமிஜியிடம் கற்று வருகின்றனர். மதம் மாறுவதைத் தடுப்பதற்காக ஆசார்ய சபா என்னும் அமைப்பை ஏற்படுத்தி இருப்பதுடன், உலக அளவில் அதற்கான பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்'' என்றார்.
வேதாந்த வகுப்புகளை எடுப்பது மற்றும் ஆன்மிகப் பணிகளுடன் உலகத்தின் சுற்றுச்சூழலைப் பாது காப்பதன் அவசியம் குறித்தும் ஸ்வாமிஜி வலியுறுத்தி வருகிறார் என்பதை அறிந்தபோது, வரப் போகும் சந்ததியினரிடம் ஸ்வாமிஜிக்கு இருக்கும் பரிவு நம்மை சிலிர்க்கச் செய்தது.
''சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே, கோவையில் 2002ம் ஆண்டில், 'பசுமைக் கோவை’ (green kovai)  என்ற அமைப்பையும் தொடங்கி உள்ளார்'' என்று நம்மிடம் தெரிவித்த ஸ்வாமிணி பிரம்ம பிரகாசானந்த மாதாஜியிடம், அவர் சந்நியாசம் பெற்றதன் பின்னணி குறித்துக் கேட்டோம்.
''எனக்குப் பூர்வீகம் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு. ஆனால், நான் வளர்ந்தது படித்தது எல்லாமே பம்பாயில்தான். மகப்பேறு மருத்துவம் படித்த எனக்குச் சிறிய வயதில் இருந்தே ஸ்வாமிஜியைத் தெரியும். அவருடைய ஆசிகளால்தான் நான் படித்தேன். ஸ்வாமிஜியின் வேதாந்த சொற்பொழிவுகளைக் கேட்டு எனக்கும் ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்பட்டுவிட்டது. ஸ்வாமிஜியிடம் நான் சந்நியாச தீட்சை தரும்படிக் கேட்டபோது அவர், 'நீ முதலில் உன்னுடைய மருத்துவப் படிப்பை முடி. பிறகு கிராமப் பகுதிகளில் சிறிது காலம் சேவை செய்துவிட்டு வா. அப்போதுதான் சந்நியாச தீட்சை பெற்ற பிறகு உன்னால் இந்தச் சமூகத்துக்குச் சிறப்பான முறையில் சேவை செய்யமுடியும்’ என்றார். அதேபோல் நடந்துகொண்ட நான் ஸ்வாமிஜியிடம் சந்நியாச தீட்சை பெற்றுக்கொண்டு, இப்போது நாக்பூர் ஆசிரமத்தில் வேதாந்த வகுப்புகளை எடுப்பதுடன் மருத்துவ சேவையும் செய்து வருகிறேன்'' என்றார். தொடர்ந்து அவரிடம், ஸ்வாமிஜி நடத்தும் வேதாந்த வகுப்புகள் குறித்துக் கேட்டோம்.
''ஸ்வாமிஜியிடம் வேதாந்த பாடம் படிப்பது என்பது  எல்லோருக்குமே பிடித்த மான விஷயம். எளிமையாகச் சொல்லித் தருவார். ஏதேனும் தவறு செய்தாலும்கூட மென்மையாகத் திருத்துவார். பாரம்பர்யமும் நவீனமும் கலந்த ஆசான் அவர். ரசவாதம் என்பது இரும்புத் துண்டைத் தங்கமாக்குவது. ஆனால், அப்படித் தங்கமான இரும்பு மற்றொரு இரும்புத் துண்டைத் தங்கமாக்காது. ஆனால் ஸ்வாமிஜியிடம் வேதாந்தம் படித்த சீடர்கள் மற்றவர்களையும் தங்களின் நிலைக்கு உயர்த்துகிறார்கள். அப்படி நாடெங்கிலும் 250 சந்நியாசிகளும் 1000க்கும் மேற்பட்ட கிருகஸ்தர்களும் வேதாந்த பாடம் சொல்லித் தருகிறார்கள்'' என்றவர் தொடர்ந்து, ''ஸ்வாமிஜி வேதாந்தம் சொல்லிக் கொடுக்கும்போது முதலில் நம்முடைய மனநிலையைச் சரிப்படுத்தி, அதன் பிறகே பாடம் சொல்லிக் கொடுப்பார். வேதாந்த பாடம் படிப்பதற்காகத் தம்மைத் தேடி யார் வந்தாலும், அவர்களுக்குத் தகுதியே இல்லை என்றாலும், தகுதியை ஏற்படுத்தி வேதாந்தம் சொல்லித் தருவார். யாரையுமே வேண்டாம் என்று ஸ்வாமிஜி மறுத்தது இல்லை'' என்றார்.
ஸ்வாமிஜி வேதாந்த பாடம் சொல்லித் தருவதில் காட்டும் அதே சிரத்தையை சமூக நலனிலும் காட்டுகிறார். அவருடைய சமூக நலப் பணிகள் குறித்த தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ஷீலா பாலாஜி. இவர்தான் ஸ்வாமிஜி தொடங்கிய, 'எய்ம் ஃபார் சேவா’ (கிவீனீ யீஷீக்ஷீ sமீஸ்ணீ)  என்ற அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக இருந்து, ஸ்வாமிஜியின் சமூகநலப் பணிகளை முன்னெடுத்துச் செல்கிறார்.
''ஸ்வாமிஜி ஏழை எளிய மக்களிடம் அளவற்ற அன்பும் கருணையும் கொண்டவர். குறிப்பாக, ஆதிவாசிகள் என்று சொல்லப்படும் பழங்குடியின மக்களுக்காக அயராது பாடுபட்டு வருகிறார். அவர்களின் நலனுக்காக பள்ளிகள், விடுதிகள் போன்றவற்றை ஏற்படுத்தி அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வருகிறார். 2001ல் ஒரு விடுதி யுடன் தொடங்கினோம். இன்று நாடெங்கும் 112 விடுதிகள் உள்ளன. தொழிலதிபர்களும் தனிப்பட்ட அன்பர்களும் ஸ்வாமிஜியின் இந்த நல்ல முயற்சிக்கு நன்கொடைகள் தந்து உதவுகிறார்கள். அனைத்து விடுதிகளும் சரி, பள்ளிகளும் சரி... மிகவும் பின்தங்கிய கிராமங்களில்தான் அமைந்திருக்கிறதே தவிர, நகரங்களில் இல்லை.
மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சிக்காகவே ஸ்வாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை என்ற அறக்கட்டளையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஸ்வாமிஜி ஒருவரையும் புண்படுத்தவே மாட்டார். அன்பும் அஹிம்சையும் அவருக்கு இயல்பிலேயே அமைந்துவிட்டது'' என்று கூறினார் ஷீலா பாலாஜி.
கோவையில் ஆசிரமம் அமைத்த காலத்தில் இருந்தே ஸ்வாமிஜியிடம் தனி பக்தி கொண்டிருந்தவர் லக்ஷ்மி சுவாமிநாதன். (ஹரிஓம் பாட்டி என்று இவர் நம் சக்தி விகடன் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகம்).
ஸ்வாமிஜியின் ஆசிரமத்தில் உள்ள அனைவருக்கும் மிகப் பரிச்சயமான பக்தை. அடிக்கடி ஆசிரமத்துக்குச் சென்று ஸ்வாமிஜியை தரிசிப்பதையும், பஜனைப் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தவர். முதுமையின் காரணமாக இப்போது அவ்வள வாக பஜனைப் பாடல்கள் பாடுவது இல்லை என்றாலும், அவ்வப்போது ஆசிரமத்துக்குச் சென்று ஸ்வாமிஜியை தரிசித்து வருகிறார்.
''ஸ்வாமிஜி ஆசிரமம் அமைத்ததில் இருந்தே நான் இங்கு வருவது உண்டு. ஸ்வாமிஜி மிகவும் எளிமையானவர். அனைவரிடமும் அன்பாகப் பழகுவதில் அவருக்கு நிகர் அவர்தான். பெயருக்கு ஏற்ப கருணையும் தயையும் நிரம்பப் பெற்றவர். அவரைப் பற்றி நான் பெரிதாகச் சொல்லுவதற்கு எதுவும் இல்லை. அவருடைய ஆசிகள் ஒன்றே போதும், நம்மைச் செம்மைப்படுத்தி, நம்முடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிவிடும்'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் இவர்.
சமீபத்தில் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டில், 'ஹரி ஓம்' பாட்டியைப் பற்றிய விரிவான கட்டுரை ஒன்று வெளியானது. இதுபற்றி அறிந்த ஸ்வாமிஜி, ஒரு புன்னகையோடு தன்னிடம், 'எப்பவோ வந்திருக்க வேண்டியது. இட் ஈஸ் டூ லேட்!' என்று சொன்னதை ஸ்வாமிஜியின் பெரிய ஆசீர்வாதமாகவே சொல்லி நெகிழ்கிறார் இந்த பக்தை.
ராமன்ஜி நம்மிடம் பவித்ரா நிவாசன் என்பவரை அறிமுகப்படுத்தினார். சென்னையில் 'ஆர்ஷ கலா பாரதி' என்ற பரத நாட்டியப் பள்ளியை நடத்தி வருகிறார் பவித்ரா. அவர் நம்மிடம் பேசுகையில்...
''நான் முதல்முறையாக ஸ்வாமிஜியை 99ம் வருஷம் அமெரிக்காவில் தரிசித்தேன். அவருடைய சொற்பொழிவுகள் என்னை மிகவும் கவர்ந்துவிட்டன. சிறு வயதில் இருந்தே எனக்கு நம்முடைய பாரம்பர்யத்திலும், வேதாந்தத்திலும், கலாசாரத்திலும் மிகவும் ஈடுபாடு உண்டு என்பதால், ஸ்வாமிஜியின் சொற்பொழிவு என்னைக் கவர்ந்ததில் வியப்பில்லை.
ஸ்வாமிஜியை அமெரிக்காவில் தரிசித்து 8 வருடங்களுக்குப் பிறகு, நான் இங்கேயே வந்து செட்டிலாகி விட்டேன். இங்கே வந்ததும் ஸ்வாமிஜியின் உத்தரவுப்படி ஒரு பரதநாட்டியப் பள்ளியைத் தொடங்கி, நடத்திவருவதுடன், சிறுவர்களின் மனவளம் கருதி பஞ்சதந்திரக் கதைகள், சுந்தரகாண்டம், புருஷ சூக்தம் போன்றவற்றை நாட்டிய வடிவில் வீடியோக்களாகவும் வெளியிட்டு இருக்கிறேன். ஸ்வாமிஜி என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி, இந்தப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருப்பது நான் செய்த பாக்கியம்! இதில் இருந்தே இளைய தலைமுறையினரிடமும் சிறுவர்களிடமும் அவர் கொண்டிருக்கும் அன்பை நாம் புரிந்துகொள்ள முடியும்'' என்று பக்திப் பரவசத்துடன் கூறினார்.
ஒருமுறை, ஸ்வாமிஜி ஓரிடத்தில் தமக்குப் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டபோது, ''இங்கே நீங்கள் எனக்குப் பூரண கும்ப மரியாதை தருகிறீர்கள். கும்பம் என்பது இதயம் போன்றது. அதில் உள்ள மங்கல தீர்த்தம், புனிதமான உணர்வுகளைப் போன்றது. அதன் மேல் வைக்கப்பட்டிருக்கும் தேங்காயின் நீர் தாகத்தைத் தணிக்கும். அதன் பருப்போ பசியைப் போக்கும்.  இளநீர் பொங்கி வழிவதுபோல், பூரணகும்ப மரியாதையின்போது நல்ல உணர்வுகள் பெருகும். வரவேற்கும் மந்திரங்களோ தியாகத் தினால் அமரத்துவம் பெறமுடியும் என்பதை நமக்கு உணர்த்தும். எங்களைப் போன்ற துறவிகளுக்கு நீங்கள் கொடுக்கும் இந்த பூரணகும்ப மரியாதை எங்கள் சந்நியாசத்துக்கு ஆனது அல்ல; நாங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை எங்களுக்கு உணர்த்தும் அடையாளமே இந்தப் பூரணகும்ப மரியாதை'' என்று அருள்மொழி கூறினார்.

இந்த அற்புதமான விளக்கத்துக்கு தாமே நிதர்சனமான ஓர் உதாரண புருஷராகத் திகழ்பவர் ஸ்வாமி தயானந்த சரஸ்வதி.


No comments:

Post a Comment