சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Sept 2015

இவரை மறக்க முடியுமா?

வர்ச்சி நடிகைகள் தமிழ் சினிமாவில் நடனம் மட்டுமே ஆடிக் கொண்டிருந்தபோது தன்னால் நடிக்கவும் முடியும் என்று நிரூபித்தவர் சில்க் ஸ்மிதா.
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எளுரு என்ற கிராமத்தில் பிறந்த விஜயலட்சுமி,  நான்காம் வகுப்புடன் படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார். சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த விஜயலட்சுமியை  ஒரு முறை பார்த்த நடிகர் வினுச்சக்கரவர்த்திதான் 'வண்டிச்சக்கரம்' படத்தில் அறிமுகப்படுத்தினார். சினிமாவுக்காக 'சில்க் ஸ்மிதா' என்ற பெயர் அவருக்கு சூட்டப்பட்டது. 


கவர்ச்சி நடிகைகள் என்றால் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுவார்கள், போய் விடுவார்கள் என்ற நிலையை தமிழ் சினிமாவில் மாற்றிக் காட்டியவர் சில்க் ஸ்மிதா. பாரதிராஜாவின்  அலைகள் ஓய்வதில்லை சில்க் ஸ்மிதாவை மிகச் சிறந்த குணச்சித்திர நடிகையாக காட்டியது. அசோக்குமாரின் 'அன்று பெய்த மழை' பன்முகத் திறமை கொண்ட நடிகையாக்கியது. சில்க் ஸ்மிதான் நடனத்திறமை பற்றி சொல்லவே வேண்டியது இல்லை.
1980களில் ஸ்மிதா இடம் பெறாத படங்களே இல்லை எனலாம். உண்மையை சொல்லப் போனால் ரஜினி, கமல் போன்றவர்கள் கூட படத்தில் ஸ்மிதாவுக்கு கேரக்டர் இருக்கிறதா? என்று கேட்பார்களாம். சில சமயங்களில் அவரது கால்ஷீட்டிற்கு முன்னணி கதாநாயகர்களே காத்திருந்தது உண்டு. தயாரிப்பாளர்களோ கதாநாயகிகளை ஒப்பந்தம் செய்யும் முன் சில்க் ஸ்மிதாவிடம் கால்ஷீட் கிடைக்குமா? என்று பார்த்து விட்டுதான் தயாரிப்பு பணியையே தொடங்குவார்கள்.
புகழின் உச்சியில் இருந்த சில்க்கிடம் பணமும் குவியத் தொடங்கியது. அந்த கால கதாநாயகிகளுக்கு இணையாக  ஸ்மிதா சம்பளமும் வாங்கினார். பணம் குவிந்தாலும் இயற்கையாகவே ஸ்மிதாவிடம் இருந்த இரக்க குணம் மட்டும் போகவே இல்லை.
செனனை வடபழனி குமரன் காலனியில் வசித்து வந்த சில்க் ஸ்மிதா, தெருவில் வரும் சிறுவர்களை பார்த்தால் அவர்களுக்கு சாக்லேட் கொடுப்பது, 'ஸ்கூலுக்கு போங்கடா ஒழுங்கா..!' என்றெல்லாம் அறிவுரை கூறுவாராம்.தெருவில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள், சில்க் ஸ்மிதாவின் வீட்டுக்குள் பந்தை அடித்தால் கூட, உள்ளேயிருந்து பந்து திரும்ப வெளியே வீசப்பட்டு விடுமாம். அதுமட்டுமல்ல, தான் சம்பாதித்த பணத்தை நல்ல காரியங்களுக்கும் சில்க் ஸ்மிதா செலவழித்து வந்துள்ளார். 

1990ம் ஆண்டு வாக்கில் காதலில் விழுந்த சில்க் ஸ்மிதா, தனது காதலருடன் இணைந்து சினிமா படங்களை தயாரித்து நஷ்டப்பட்டுக் கொண்டார். இதனால் கடும் மனஉளைச்சலுக்குள்ளான அவர்,  பொருளாதார ரீதியான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல். முடிவில் 1996ஆம் ஆண்டு, செப்டம்பர் 23ஆம் தேதி சில்க் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

தமிழ்நாடு மட்டுமல்ல தென்னிந்தியாவே இந்த  தற்கொலை சம்பவத்தால் அதிர்ந்து போனது.  தன்னோட தேவை என்னவென்று கடைசி வரை புரிந்து கொள்ள முடியாத அப்பாவி பெண்ணாகவே அவர் மறைந்து போனதாக சக நடிகைகள் கண்ணீர் விட்டனர். 

சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து நேற்றுடன் 19 ஆண்டுகள்  நிறைவடைகிறது. இப்போதும் அவரை நினைவு வைத்து ரசிகர்கள்  நினைவஞ்சலி போஸ்டர்கள் ஒட்டுகின்றனர். அப்படியென்றால்  தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த ஆளுமைகளில் சில்க் ஸ்மிதாவும் ஒருவர்  என்றுதானே அர்த்தம்! 

No comments:

Post a Comment