சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Sept 2015

சாக்கு மூட்டையிலும், பீரோவிலும் கோடிக்கணக்கில் பணத்தை பதுக்கி வைத்த தமிழக தொழிலதிபர்!

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமான இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சாக்கு மூட்டைகளிலும், பீரோவிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த ஒருவர் மேற்குவங்கம், தமிழகம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் சட்டவிரோதமாக லாட்டரி தொழிலில் ஈடுபட்டு வருவதாக உளவுத் துறையிடமிருந்து மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. 


அதன் அடிப்படையில், மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத்தை சேர்ந்த அதிகாரிகள், தமிழருக்கு சொந்தமான சிலிகுரி உட்பட 9 இடங்களில்  அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, சாக்கு மூட்டைகளிலும், பீரோவிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் பணம் சிக்கியது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு சுமார் ரூ.20 கோடி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
 
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், " போலி லாட்டரி கும்பல் ரூ.1000 கோடி ஹவாலா மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு பணத்தை அனுப்பி ஹவாலா மோசடியில் இக்கும்பல் ஈடுபட்டுள்ளது. கொல்கத்தாவில் இவ்வளவு பெரிய ஹவாலா மோசடி அம்பலமானது இதுவே முதன்முறையாகும். இதுவரை இச்சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது" என்றனர்.

கொல்கத்தாவில், தமிழக தொழிலதிபர் ஒருவரின் குடோனில் இருந்து கத்தை கத்தையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment