சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Sept 2015

'அவரை ஏன் விசாரிக்காமல் விட்டார்கள்?' - கைதுக்கு முன் அட்டாக் அளித்த பரபரப்பு பேட்டி!

எடுத்த எடுப்பிலேயே ‘‘கோபாலகிருஷ்ணனை (பெயர் மாற்றப்பட்டு உள்ளது!) ஏன் போலீஸ் விசாரிக்கவில்லை? அவரை ஏன் காப்பாற்றுகிறார்கள்” எனக் கேள்வி எழுப்பினார்.

‘‘கோபாலகிருஷ்ணன் யார்?’’ என்றோம்

‘‘குற்றவாளிகள் விஜயபாண்டி, ஆரோக்கிய பிரபு ஆகியோர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்த பிறகு அவர்கள் இருவரையும் மதுரை கோர்ட்டில் மனு போட்டு போலீஸார்  கஸ்டடியில் எடுத்தார்கள். மதுரை அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து இரண்டு பேரையும் விசாரித்தார்கள். அப்போது கோபாலகிருஷ்ணன் பற்றி இவர்கள் இருவரும் ஸ்டேட்மென்ட் கொடுத்தார்கள். நேர்மையான இன்ஸ்பெக்டர் ........... என்பவர் உடனே கோபாலகிருஷ்ணனை அழைத்து விசாரித்தார். அவர் விசாரித்துக்கொண்டிருந்தபோது நள்ளிரவு மூன்று மணிக்கு டி.எஸ்.பி-யான .............. என்பவர், இன்ஸ்பெக்டரிடம்  பேசியிருக்கிறார். ‘டி.சி, கமிஷனர் எல்லாம் பிரஷர் கொடுக்குறாங்க... கோபாலகிருஷ்ணனை உடனே அனுப்பி விடுங்கள். அவரைத் தொட்டால் பெரிய பிரச்னைகள் வரும்’ எனச் சொல்கிறார். அதன்பிறகு கோபாலகிருஷ்ணனை எந்த விசாரணையும் செய்யாமல் விட்டுவிட்டார்கள்.

‘ஹை கமாண்ட் ரெகமெண்ட்’ எனச் சொல்லி அவரை விடுவிக்கிறார்கள். கோபாலகிருஷ்ணனை தொட்டால் பின்னால் என்ன வரும்னு போலீஸுக்குத் தெரியும். ஒருநாள் இரவு முழுவதும் கோபாலகிருஷ்ணனை ஸ்டேஷனில் வைத்துவிட்டு ஏன் விட்டுவிட்டார்கள்? அதற்கான காரணம் என்ன? விஜயபாண்டி, ஆரோக்கிய பிரபு ஸ்டேட்மென்ட்டில் கோபாலகிருஷ்ணன் பெயர் இருந்தும் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
இது நடந்தது உண்மையா என விசாரியுங்கள். குற்றத்தில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது உலகத்துக்குத் தெரிய வேண்டுமா, இல்லையா? இதில் நாங்கள் பலிகடா ஆக்கப்படுகிறோம். அதனால்தான் உண்மையை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நான் அப்போது மதுரையிலேயே இல்லை. ‘பொட்டு’ சுரேஷ் இறப்பதற்கு முன்பே அங்கிருந்து வந்துவிட்டேன். சென்னையில் இருந்தபோதுதான் முன்பு உங்கள் பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தேன்.’’

பொட்டுவை கொலை செய்ய அந்த நபருக்கு என்ன உள்நோக்கம் இருக்க முடியும்?

‘‘அவரும் மதுரை பாலிடிக்ஸில் முக்கியமானவர்தான். ‘பொட்டு சுரேஷ் இருந்தால் நம்ம ஆட்கள் இருக்க முடியாது’ எனச் சொல்லியிருக்கிறார் கோபாலகிருஷ்ணன். அவர் பேசிய உரையாடல்கள் நம்பர் எல்லாமே போலீஸில் இருக்கிறது. அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒருநாள் இரவு முழுவதும் அவரை வைத்திருந்தது உண்மையா, பொய்யா? என்பதெல்லாம் முறையாக விசாரித்தால் தெரிந்துவிடும்.”

‘பொட்டு’ சுரேஷ் கொலைக்கு நீங்கள்தான்  காரணம் என்று வலுவாகச் சொல்லப்படுகிறதே?’

‘‘கொலை சம்பவத்துக்குப் பல பேர் காரணமாக இருக்கிறார்கள். ஒன்று, இரண்டு, மூன்று என வரிசையாக ஸ்டேட்மென்ட் கொடுக்க முடிவு செய்திருக்கிறேன். இரண்டாவது ஸ்டேட்மென்ட்-ல் பிரபு பற்றி விரிவாகச் சொல்கிறேன். அதன்பிறகு அடுத்தடுத்து யார் எனச் சொல்கிறேன்.”

கோபாலகிருஷ்ணனை விடுவிக்க டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டருக்கு ஏன் பிரஷர் கொடுத்தார்கள்?

‘‘என்ன பிரஷர் என்பது போலீஸுக்குத்தான் தெரியும். அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில் கோபாலகிருஷ்ணனை ஜட்டியோடு நிற்க வைத்து விசாரித்தவர்கள், கடைசியில்  ஏன் ரிமாண்ட் செய்யாமல் விட்டார்கள்? அதுதான் முக்கியமான விஷயம்.”

உங்களை கொல்ல ‘பொட்டு’ சுரேஷ் முயன்றதால்தான் நாங்கள் முந்திக்கொண்டோம் என கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்களே?
‘‘அப்படிச் சொன்னவர்கள்... உடந்தையாக இருந்தவர்கள் யார்?, பசங்களுக்கு உதவியவர்கள் யாரையாவது இதுவரை ரிமாண்ட் பண்ணி இருக்காங்களா?, ஏன் பண்ணவில்லை? அரசியல்வாதிகள்தான் அவருடைய எதிரிகள். அவர்களை ஏன் கைது பண்ணவில்லை? குற்றவாளிகள் எல்லாமே புவர்ஸ் (ஏழைகள்!). என்னோட இருந்த என் உறவினர்களை மட்டுமே கைதுசெய்திருக்கிறார்கள். ஏன் மற்றவர்களைப் பிடிக்கவில்லை.

ஜூனியர் விகடன் பத்திரிகையில் ‘என் மீது ஏன் போலீஸ் ஆக்‌ஷன் எடுக்கவில்லை’,‘தி.மு.க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை’ என தப்பாக எழுதுகிறீர்கள்... நான் மதுரையைவிட்டு போய் இரண்டு வருடங்கள் ஆன பிறகு, நடந்த சம்பவம் இது. தி.மு.க ஆட்சியிலேயே நான் வெளியே போய்விட்டேன். மதுரையிலேயே இல்லை. எங்களை மட்டுமே  ஏன் பலிகடா ஆக்குகிறீர்கள்... உள்ளுக்குள் நடந்தது தெரிய வேண்டுமா, இல்லையா?”

சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் உங்களைக் கைதுசெய்து தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுக்கவும் அதன்மூலம் ஆளும் கட்சி தன் இமேஜை உயர்த்திக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக வரும் தகவல் பற்றி என்ன சொல்கிறீர்கள்?



‘‘இரண்டுமே உண்டு. என்னைப் பிடிக்காதவர்கள் என்னைவைத்து பயன்படுத்தவும் செய்யலாம். பலிகடாவும் ஆக்கலாம்.’’

 ‘பொட்டு’ சுரேஷ் கொலைக்கு தனிப்பட்ட விரோதம்தான் காரணமா?

‘‘பசங்களைவிட்டு ஆபரேஷன் நடந்திருக்கு. வழக்கில் கீழே இருந்து விசாரியுங்கள். நான் பேசமாட்டேன். பேசினால் அதில் உறுதியாக இருப்பேன்’’ என அவசர அவசரமாக முடித்துக்கொண்டார்.

சுற்றி வளைத்து ‘அட்டாக்’ பாண்டி சொல்லும் நபர், மதுரை பிரமுகர் குடும்பத்துக்கு இன்னமும் நெருக்கமாக இருப்பவர். ‘பொட்டு’ மறைவுக்குப் பிறகு, இவர்தான் அங்கு அதிகாரம் உள்ளவராக வலம் வருகிறார். இவ்வளவு காலம் அமைதியாக தலைமறைவாக இருந்துவிட்டு இப்போது ‘அட்டாக்’ பாண்டி வெளியில் வருகிறார் என்றால், விவகாரம் முற்றுப்புள்ளியை நோக்கி நெருங்க ஆரம்பித்திருக்கிறது என்று அர்த்தம்.

பூதம் கிளம்புகிறது. எந்த வீட்டில் போய் நிற்கப் போகிறதோ?

No comments:

Post a Comment