சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Sept 2015

லைக்கு மட்டும் இல்லை! அதுக்கும் மேல

நம் மணிக்கட்டின் நாடி எண்ணிக்கை, இதயத்துடிப்பின் எண்ணிக்கை, நாம் விடும் மூச்சின் எண்ணிக்கைப் பற்றியெல்லாம் கூடக் கவலைப் படாதவர்கள் அநேகம் பேர் உண்டு. ஆனால் ஃபேஸ்புக்கில் தனக்குக் கிடைக்கும் ‘லைக்கு’களின் எண்ணிக்கை குறித்துக் கவலை கொள்ளாதவர்களே இல்லை என்று சொன்னாலும் தகும்.

அந்த அளவு நம் வாழ்வியலில் கலந்துவிட்ட ’லைக்கு’ தற்போது அடுத்த கட்டத்திற்குச் செல்ல இருக்கிறது. ஏற்கனவே, ‘எமோட்டிகான்ஸ்’, ‘ஃபோட்டோ க்மெண்ட்ஸ்’ என உணர்ச்சிகளை, நேரடியாக உணர்ச்சிப்பூர்வமாகவே வெளிப்படுத்துவதற்கு வழிவகை செய்திருக்கும் ஃபேஸ்புக், தற்போது ’லைக்’ அமைப்பையும் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல இருக்கிறது.



கலிஃபோர்னியாவிலுள்ள, ஃபேஸ்புக் மெல்னோ பார்க்கிலிருந்து, இது குறித்துப் பேசிய, அந்நிறுவனத்தின், முதன்மை இயக்குநர், ஜூக்கர்பெர்க், ”ஃபேஸ்புக்கில் லைக்குகளைப் போலவே ’டிஸ்லைக்கு’ களுக்கு ஒரு அமைப்புப் பொத்தான் வேண்டுமெனத் தொடர்ந்து, கேட்டு வருகின்றனர் பயனர்கள். இது ஒருவரின் பதிவை இறக்கம் செய்வதற்கும், மன உளைச்சல் உருவாக்குவதற்கும் காரணியாக அமைந்துவிடுமென்பதால் இதை நாங்கள் அமல்படுத்தவில்லை. ஆனால் ‘லைக்’ அமைப்பை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் சோதனை முயற்சிக்கு நாங்கள் தயாராகிவிட்டோம். இதற்குக் காரணம் என்னவென்றால்,  சில தருணங்களில் லைக் சரியான கருத்து தெரிவிக்கும் ஊடகமாக அமைவதில்லை. குறிப்பாக, சில சோகமான சம்பவங்களைப் பதியவோ, இரங்கலைத் தெரிவிக்கவோ தேவை ஏற்படும்போது ‘லைக்’ அதற்கானக் கருவி அல்ல என்பது தெளிவாகிறது. எனவே, பயனாளர், தன் தாக்கத்தை வெளிப்படுத்தும் வண்ணம் ஒரு பன்முக அமைப்பு கொண்ட பொத்தானை ஃபேஸ்புக் சில நாட்களில் வெளிக்கொணர 
இருக்கிறது என்பது உறுதி”, என்று தெரிவித்தார்.

லைக் யுத்தங்கள் நடந்து கொண்டிருக்கும் நம் நாட்டில் இது எங்கு கொண்டு சேர்க்கும் என்பது நம் பயனாளர்களின் கையிலேயே இருக்கிறது.

No comments:

Post a Comment