சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

15 Sept 2015

மீனவர்கள் எல்லை தாண்டும் விவகாரம்; தீர்வு சொல்கிறார்கள் மாணவர்கள்!

ந்திய எல்லையை தாண்டி மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் சிறைப்பிடிப்பு, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு, இலங்கை ராணுவத்தினர் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ளினர் என்ற தலைப்புச் செய்திக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள் தஞ்சாவூர் கிங்ஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள்.

மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு மீனவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்ற பெரும் உதவியாக இருக்கும் என்கிறார்கள். “மீனவர்களின் படகுகள் சிறைபிடித்து, வலை அறுத்து வீசுகின்ற நிலைக்கு தள்ளப்படுகின்ற மீனவர்களுக்கு, இந்திய எல்லையை தாண்டாமல் இருக்கச் செய்ய முடியும். தினந்தோறும் நாங்கள் எங்கள் கல்லூரி லைப்ரரிக்கு போகும்போது அங்கிருக்கிருக்கும் பத்திரிக்கைகளில் படித்துப் பார்க்கும்போது மீனவர்களின் தலைப்புச் செய்தியை படித்துப்பார்த்து மீனவர்களின் படகுகளை இந்திய எல்லையை நம்முடைய மீனவ படகுகள் தாண்டாமல் இருப்பதற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று எங்களுக்கு யோசனை வந்தது.
அப்பத்தான் எல்லை பார்டர் அலர்ட் என்று பெயர் வைத்து புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடிக்க செயல்பட தொடங்கினோம்” என்கிறார்கள் மாணவர்கள் ஜெனிபர் ராபின்சன், ஹரிஹரன் ஆகியோர் இருவரும் ஒரே குரலில். ஒரு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்திய முறைகள், பயன்படுத்தப்படும் முறைகள், செயல்களை தொடர்ந்து விவரித்தனர்

“எங்களின் யோசனைக்கு உதாரணமாக மீன் வலையில் மிதக்கும் அந்த பிளாஸ்டிக் நெட்டை வைத்துதான் பிளாக் பாக்ஸை தயாரிக்க முடிவு பண்ணினோம், பிளாக் பாக்சில் 12 வோல்ட் பேட்டரியுடன் பொருத்தப் பட்ட டிரான்ஸ்மிட்டரை பொருத்தி அதை இந்திய எல்லையில் கடலின் மேற்பரப்பிலோ அல்லது கடலின் ஆழப்பகுதியிலோ வைக்கலாம். கடலின் மேற்பரப்பில் அல்லது ஆழத்தில் வைக்கப்பட்ட பிளாக் பாக்சி லிருந்து வெளிப்படும் அலைகற்றை 50 மீட்டருக்கு அப்பால் வரும் மீனவ படகில் பொருத்தப்பட்டிருக் கும். 

ரிலேவுடன் இணைத்து பொருத்தப்பட்டுள்ள ரிசீவர், அலைக்கற்றையை உள்வாங்கிக்கொண்டு படகில் பொருத்தப்பட்டுள்ள அலாரம் முதலில் ஒலிக்கும். அலாரம் ஒலித்தவுடன் மீனவர்கள் படகினை இந்திய எல்லையின் முடிவு வந்துவிட்டது என உணர்ந்து கொண்டு மீனவர்கள் படகினை அந்த பக்கம் செலுத்தாமல் நிறுத்திக்கொள்ளலாம்.
அதையும் மீறி மீனவர்கள் இந்திய எல்லையை கடக்க நினைத்தால் தானாகவே படகின் முன்னோக்கி தள்ளும் கருவியை நிறுத்தும் சக்தி கொண்டது நாங்கள் கண்டுபிடித்துள்ள ரிலே கருவி. அதையும் மீறி தாண்ட முயற்சித்தால் படகில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார் தானாகவே நின்றுவிடும் என்றனர். எங்களுகடைய இந்த கண்டுபிடிப்பில் பொருத்தப்பட்டுள்ள டிரான்ஸ்மீட்டர் மற்றும் பேட்டரியின் அளவை கூட்டினால் எவ்வளவு தெலைவிலிருந்து இந்த டிரான்ஸ்மீட்டரை (பிளாக் பாக்ஸ்) இயக்க முடியும். 

பிளாக் பாக்ஸில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி செயல்படுத்தினால், மீனவர்கள் எல்லையை தாண்டும் போதோ அல்லது மீனவர்கள் எங்கு செல்கிறார்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிய முடியும். 
கடல் அளவான மைல் நாட்டிகல் அளவை பயன்படுத்தினால் மீனவர்கள் எவ்வளவு தொலைவில் இருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறியலாம். இன்னும் கொஞ்சம் பிளாக் பாக்ஸில் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்து, கேமராவை பொருத்தி மாற்றி அமைத்து அதற்கான இணைப்புகளை துறைமுகங்களிலும், காவல்நிலையங்களிலும் பொருத்தினால் மீனவர்களை பூமி யிலிருந்து கடலுக்கு சென்று மீன்பிடிப்பதையும், எல்லை மீறும் மீனவர்களையும், இலங்கை மீனவர்களால் தாக்கப்படும் சம்பவத்தையும், இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்படும் சம்பவத்தையும் உடனுக்குடன் கவனித்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கலாம் என்றனர்.

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்கள், 4142 சதுர கிலோமீட்டர் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. 

608 மீனவ குக்கிராமங்கள் இருக்கின்றன. தமிழக அரசால் பதிவு செய்யப்பட்டுள்ள 5253 விசைப் படகுகள், 30,436 ஃபைபர் படகுகள் தினந்தோறும் மீன்படிக்க சென்று வருகின்றன. பதிவு செய்யப் படாத படகுகளும் மீன்பிடிக்கச் சென்று வருகின்றன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் 1 சதவீதம் அளவுக்கு மீனவர்கள் அந்நிய செலவாணியை ஈட்டி வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மாணவர்களின் இந்த புதிய கண்டுபிடிப்பை அரசு செயல்படுத்த முயற்சிக்கலாம்!



No comments:

Post a Comment