சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

26 Sept 2015

அன்புக்கு முன் சட்டம் தோற்றது: மதுரை நீதிமன்றத்தில் ஒரு பாசப் போராட்டம்!

50 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய வளர்ப்பு பெற்றோரை விட்டுவிட்டு, பெற்ற தாயாரிடம் செல்வதற்கு சிறுவன் மறுத்துவிட்டான். இந்த உருக்கமான சம்பவம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்தது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பொன்னுவார்பட்டியை சேர்ந்த குமார்- மாரியம்மாள் தம்பதியின் 3 வயது மகன் வேல்முருகன். குமார் தனது மகனை, குழந்தையில்லாத தம்பதிக்கு ரூ.50 ஆயிரத்துக்கு விற்றுவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

இந்நிலையில் கணவரையும், குழந்தையையும் கண்டுபிடித்து ஆஜர்படுத்தக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாரியம்மாள் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாரியம்மாளும், வளர்ப்பு பெற்றோரும் சிறுவனை உரிமை கொண்டாடியபடி இருந்தனர். ஆனால் சிறுவனோ வளர்ப்பு தாயின் மடியில் இருந்து கீழே இறங்காமல் இருந்தான்.

மகனை அழைக்குமாறு மாரியம்மாளிடம் நீதிபதிகள் கூறினர். அதையேற்று மகனை தூக்குவதற்கு முயன்றார் மாரியம்மாள். ஆனால், மாரியம்மாளிடம் செல்ல மறுத்து அழுத சிறுவன், வளர்ப்பு தாயைவிட்டு நகரவில்லை.

இதை பார்த்த நீதிபதிகள், "சட்டப்படி தாயாரிடம்தான் குழந்தை இருக்க வேண்டும். இருப்பினும் இந்த சிறுவன், வளர்ப்பு பெற்றோரிடம் வைத்திருக்கும் பாசத்தை பார்க்கும் போது அன்பு, அரவணைப்புக்கு முன் சட்டம் தோற்றவிட்டதோ என நினைக்க தோன்றுகிறது" என தெரிவித்தனர்.

பின்னர் இது தொடர்பாக  நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "சிறுவன் வளர்ப்பு பெற்றோரிடம் 15 நாள் இருக்க வேண்டும். சிறுவனின் தாயார் மாரியம்மாள் தினமும், வளர்ப்பு பெற்றோரின் வீட்டிற்கு சென்று அவரது மகனை பார்த்து, அவனின் அன்பை பெற முயற்சிக்க வேண்டும். அடுத்த விசாரணையின் போது மனுதாரர், வளர்ப்பு பெற்றோர், சிறுவன் ஆகியோர் ஆஜராக வேண்டும். சிறுவன் யாருடன் இருக்க ஆசைப்படுகிறான் என்பதை அப்போது பார்க்கலாம்" எனக் கூறியதோடு, மாரியம்மாளின் கணவர் குமாரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு திண்டுக்கல் டிஎஸ்பி வனிதாவுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.



No comments:

Post a Comment