சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Sept 2015

நடிகர் வடிவேலு எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்: தயாரிப்பாளர் போலீசில் பரபரப்பு புகார்!

காமெடி நடிகர் வடிவேலு எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று எலி பட தயாரிப்பாளர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

காமெடி நடிகர் வடிவேலு கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் தவிர்த்து வந்தார். அதன்பின் நடிகை சதாவுடன் 'எலி' என்ற படத்தில் நடித்தார். அந்த படம் கடந்த ஜூன் மாதம் வெளியானது. இந்நிலையில், அந்த படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று கமிஷனர் ஜார்ஜை சந்தித்து நடிகர் வடிவேல் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.


அந்த புகாரில், ''நான் ‘சிட்டி சினி கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறேன். என்னிடம் நடிகர் வடிவேலு, ‘தான் ‘எலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறேன். இப்படத்தின் தயாரிப்பாளரான ராம்குமார் சரிவர படத்துக்கு செலவு செய்யமுடியாத நிலையில் இருக்கிறார். எனவே ‘எலி’ படத்தை உங்கள் நிறுவனம் தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


நானும், நடிகர் வடிவேலுவும் நீண்டகால நண்பர்கள் என்பதால் படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு வேலைகள் பாதிக்கு மேல் நடந்து கொண்டிருந்தபோது, நடிகர் வடிவேலுவும், படத்தின் இயக்குனர் யுவராஜ் ஆகியோர் கூறிய ‘பட்ஜெட்’ தொகை ரூ.14 கோடியை தாண்டி விட்டது. வடிவேலுவின் பேச்சை நம்பி ரூ.17 கோடியை முதலீடு செய்தபின்னும், படம் சரிவர ஓடவில்லை. இதனால் எனக்கு ரூ.9.20 கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. படம் சரியாக ஓடாததால் ஒரு சில தியேட்டர் உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும் போலியான கணக்கை காண்பித்து என்னிடம் கந்துவட்டி போட்டு பணத்தை கேட்டு மிரட்டுகின்றனர்.

இந்தநிலையில் மீண்டும் நடிகர் வடிவேலு, முன்னாள் தயாரிப்பாளர் ராம்குமாருக்கு ரூ.90 லட்சம் கொடுக்க வேண்டும் என்று அடையாளம் தெரியாத 6 பேர் காசோலையை என்னிடமிருந்து மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் வாங்கியதோடு, தொடர்ந்து கொலைமிரட்டல் விடுக்கின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நான் என்னுடைய சூழ்நிலைகளை நடிகர் வடிவேலுவிடம் கூறியபோது, ‘அவரும், அவருடைய மானேஜர் பன்னீரும், கணக்காளர் முத்தையாவும் என்னை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, இப்படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை தர முடியாது என்று மிரட்டும் தோனியில் பேசுவதோடு பணத்தை கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர்.

அதனால், நடிகர் வடிவேலுவினால் ஏற்பட்ட நஷ்டத்தை அவரிடமிருந்து பெற்று தருவதோடும், என்னை மிரட்டுகின்ற வடிவேலு உள்ளிட்டவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனது உயிருக்கும், உடமைக்கும் உரிய பாதுகாப்பு தர வேண்டும்" என்று கூறி உள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த புகார் குறித்து நடிகர் வடிவேலு கூறும்போது, ''எலி படத்தை முதலில் ராம்குமார் என்பவர் தயாரிக்க இருந்தார். நிதி வசதி போதாது என்பதால் அவர் ஒதுங்கிக் கொண்டார். இதையறிந்த தயாரிப்பாளர் சதீஷ்குமார், எலி படத்தை தயாரிக்க முன் வந்தார். படம் வெளியான பின், எதிர்பார்த்தபடி ஓடவில்லை, நஷ்டமாகிவிட்டது அடுத்து ஒரு படம் நடித்து கொடுத்தால் உதவியாக இருக்கும் என்றார் சதீஷ்குமார். நானும் அதற்கு சம்மதம் தெரிவித்தேன்.

சதீஷ்குமாருக்கும், எனக்கும் இடையே படம் தொடர்பாக எந்தப் பிரச்னையும் இல்லை. நான் அவரை மிரட்ட வேண்டிய அவசியமும் இல்லை. தற்போது, நான் மதுரையில் இருக்கிறேன். தயாரிப்பாளர் போலீசில் புகார் செய்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. தயாரிப்பாளர் நல்ல மனிதர் தான், அவர் இப்படி புகார் கொடுக்க தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக இருக்கலாம். பைனான்சியர்கள் மிரட்டலால், புகார் மூலம் என்னை காரணம் காட்டி அவர்களை சமாளிக்க முற்பட்டிருக்கலாம்.


சதீஷ்குமாரின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள அரசியல் பிரமுகரை எனக்கு தெரியாது. எலி படத்திற்கு எனக்கு பேசிய சம்பளத்தில், 2 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்தார். மீதி சம்பளத்தை தரவில்லை. நஷ்டம் என்று கூறியதும், நானும் பாக்கி சம்பளத்தை கேட்கவில்லை. ஒரு நடிகன் என்ற முறையில் இதை தான் நான் செய்ய முடியும். நண்பராக இருந்த தயாரிப்பாளர் திடீரென எதிரியைபோல் நடந்துகொள்வது வருத்தமாக உள்ளது" என்று தெரிவித்து உள்ளார்.



No comments:

Post a Comment