சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Sep 2015

12 இன்ச் ஐபேட் முதல் ஆப்பிள் டிவி வரை : ஆப்பிள் நிகழ்வு ஒரு தொகுப்பு

ப்பிள் லைவ் நிகழ்ச்சி நேற்று சான்ஃப்ரான்சிஸ்கோவில் நடந்தது. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடக்கும் இந்த நிகழ்வில், ஆப்பிளின் புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம் இந்த முறையும் ஆப்பிளின் புதிய தயாரிப்புகளை, ஆப்பிள் சிஇஓ டிம் குக் அறிமுகம் செய்தார். அவற்றின் விவரங்கள் பின்வருமாறு...

ஆப்பிள் ஐபேட் ப்ரோ:
ஆப்பிள் தயாரிப்புகளிலேயே மிகப்பெரிய அளவு கொண்ட தயாரிப்பு இதுதான். 12.9 இன்ச் அளவுள்ள இந்த ஐபேடின் திரை, 5.6 மில்லியன் பிக்சல் திறன் கொண்டது.iOs X மற்றும் iOS இயங்குதளங்களில் இயங்கக்கூடியது. இதில் 4 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ அமைப்பும், 10 மணி நேரம் பேட்டரி லைஃப் கொண்ட பேட்டரியும் உள்ளது. இது 32GB, 128GB ஆகிய இரண்டு நினைவக அளவுகளில் கிடைக்கிறது. இதன் விலை 799 டாலர் ( 53000 இந்திய மதிப்பு) முதல் கிடைக்கிறது.

ஆப்பிள் பென்சில்:
ஐபேட் ப்ரோவில் பயன்படுத்தும் வண்ணம் ஆப்பிள் பென்சில் எனும் தயாரிப்பை வெளியிட்டுள்ளது ஆப்பிள். ஆப்பிள் பென்சில் மூலம் ஐபேட் திரையில் வரையவும், அதன் மூலம் ஆவணங்களை எடிட் செய்யவும் முடியும். உங்கள் குறிப்புகளை இதனைக் கொண்டு குறித்துக் கொள்ளவும் முடியும். அதிக உணர் திறன் கொண்டதாக இது இருக்கும். இதன் விலை 99 டாலர் (சுமார் 6600 ரூபாய்) என்கிறது ஆப்பிள்.
ஆப்பிள் ஐபோன் 6S மற்றும் 6S plus
சென்ற ஆண்டு ஆப்பிள் 6 மற்றும் 6 plus ஐபோன்கள் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் ஐபோன் 6S மற்றும் 6S plus வெளியிடப்பட்டுள்ளன.இவை A9 எனும் 64 bit நான்காம் தலைமுறை ப்ராசஸர் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.12 MP ஐசைட் கேமராவும், 4K வீடியோ ரெக்கார்டிங் திறனும் கொண்டுள்ளது. மேலும் இதில் 3D டச் தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் டிவி!
நான்காம் தலைமுறை ஆப்பிள் டிவி நேற்றைய நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை அறிமுகம் செய்யும் போது பேசிய ஆப்பிள் சிஇஓ டிம் குக், " எதிர்கால டிவி என்பதை நாங்கள் ஆப்ஸ் ஆக பார்க்கிறோம்" என்றார். இந்த டிவியில் ஆப்ஸ் ஸ்டோர் இணைக்கப்பட்டுள்ளது. வாய்ஸ் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய ரிமோட் மூலம் இந்த டிவியை இயக்கலாம். வ்வை-ஃபை வசதியும் இந்த டிவியில் இருப்பதாக கூறியுள்ளது ஆப்பிள்.  இந்த டிவி அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 32 GB மற்றும் 64 GB ஆகிய அளவுகளில் கிடைக்கிறது. இதன் விலை முறையே 149 டாலர்  (சுமார் 10000 ரூபாய்) 199 டாலர் (சுமார் 13000 ரூபாய்) என்ற விலையில் கிடைக்குமாம்.
.
ஆப்பிள் இயங்குதளங்கள்:
ஆப்பிள் புதிய இயங்குதளங்களை பற்றிய தகவலும் நேற்று வெளியிடப்பட்டது. iOS 9 மற்றும் EI Captain ஆகிய இயங்குதளங்களை முறையே செப்டம்பர் 25 மற்றும் செப்டம்பர் 30 ஆகிய தேதிகளில் வெளியிட இருப்பதாகவும், அதற்கான Beta சோதனைகள் நடைபெற்று வருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் புதுமைகளை தயாரிப்புகளில் கொண்டு வரும் ஆப்பிள், இந்த வருடமும் பல புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் வெளியீடு தேதிகளில் இருந்து சில நாட்களில், உலகின் மற்ற பகுதிகளிலும் அந்த தயாரிப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment