அன்று, ஞாயிற்றுக்கிழமை என்பதால் டி.நகருக்கு துணிமணிகள் வாங்கச் சென்றேன். பல்வேறு தரப்பு மக்களும் தங்களின் தேவைகளை பூர்த்திச் செய்வதற்காக முந்திச் செல்லக்கூடிய ஒரு நெருக்கடியான பகுதிதான் டி.நகர். பல்வேறு கூட்ட நெரிசல்களுக்கு மத்தியிலும் வாங்கச் சென்ற பொருட்களை வாங்கிவிட்டு ரயிலில் வீடு திரும்பினேன்.
ரயிலில் பல்வேறு காட்சிகளை நம்மால் காண முடிந்தது. அதில், ஒன்று மாம்பலம் ஸ்டேஷன் தாண்டி, நுங்கம்பாக்கம் ஸ்டேஷனில் கையில் ஜோல்னா பையை தொங்கவிட்டவாறு ஒருவர் ரயிலில் ஏறினார். ஏறும்போதே தட்டுத் தடுமாறி, பிறரின் உதவியுடன் ஏறி, பையில் இருந்த பேனா, பென்சில், செல்போன் கவர் போன்ற பொருட்களை எடுத்து விற்பனை செய்ய ஆரம்பித்தார். அவரால் மற்றவர்களை பார்க்க முடியவில்லை. அவருடைய சத்தம்தான் மற்றவர்களுக்கு தொலைத்தொடர்பு சாதனம், அவர் கையில் வைத்திருக்கும் கம்பு அவருக்கான வழிகாட்டி.
எந்தவித தயக்கமுமின்றி அவர் தன்னுடைய சத்தத்தை உயர்த்தியபடியே இரண்டு பக்கமும் சத்தம் கொடுத்தவாறு விற்பனை செய்து கொண்டே சென்றார். சில நபர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினர். சில பேர் தங்களுடைய அனுதாபத்தை தங்களுடைய பார்வைகளால் தெரிவித்தனர். ஆனால், அவர் எதைப்பற்றியும் கண்டுகொள்ளவில்லை. அவருடைய வேலையை அவர் செய்து கொண்டே சென்றார். இவர்களின் செயல்பாடுகளை அவரால் பார்க்க முடியாது, அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
உண்மையில், அவருடைய முயற்சி மிகவும் பாராட்டக்கூடிய ஒன்றாகும். கண்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எனக்கு உள்ளத்தில் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது. ஊனம் என்னுடைய உடலுக்குத்தான், உள்ளத்துக்கு இல்லை என்ற அடிப்படையில் சுயமாக உழைத்துச் சாப்பிட வேண்டும் என்று முயற்சி செய்கிறாரே. அதனால்தான், அவரை பாராட்டினேன்.
இன்று, இதுபோன்ற நிறைய இடங்களில் பார்க்கலாம். ஏதாவதொரு நிலையில் தங்களால் முடிந்த சிறு வியாபாரங்களை செய்து, தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று, தங்களின் உடலில் உள்ள குறைபாடுகளை எல்லாம் பெரிதுபடுத்தாமல் உழைத்துக் கொண்டே இருப்பார்கள். இதுபோன்ற, மக்களுக்கு அரசு என்ன செய்து கொடுக்கின்றதுதான் என்பதுதான் என் முன் கேள்வியாக எழுந்தது. என்னுடைய இந்த கேள்விகளை ரயிலில் பயணிக்கும் ஒவ்வொருவரும் கேட்கும்பொழுது, அவர்களுக்கான தீர்வை கொடுக்கும் நிர்ப்பந்தத்திற்கான சூழலுக்கு அரசு தள்ளப்படும்.
மனிதனின் உடலில் சில உறுப்புகள் இயற்கையாகவோ அல்லது ஒரு விபத்திலோ பாதிக்கப்படும் பொழுது, அவர்கள் ஊனமுற்றோர் என்ற பெயருடன் அழைக்கப்பட்டு, சமூகத்தில் அவர்கள் ஒதுக்கப்பட்டவர்கள் போன்று பார்க்கப்படுகின்றார்கள். இதனால், அவர்கள் வேலை செய்து வருமானம் ஈட்டுவது என்பது கடினமான ஒன்றாகத்தான் கருதப்படுகிறது. அதுபோன்ற, சூழல்கள் குடும்பங்களிலும் அவர்கள் மீது அக்கறை என்பது குறைவாகத்தான் இருக்கின்றது. இதனால், அவர்கள் தங்கள் தேவைகளை சுயமாகவே தேடிக் கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்து, இதுபோன்ற ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பஸ் ஸ்டாண்டு போன்ற இடங்களில் சிறு சிறு பொருட்களை விற்பனை செய்யும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.
அதற்கு, அவர்கள் பல்வேறு கஷ்டங்களைத் தாண்டித்தான், அந்த விற்பனையையும் செய்ய முடிகின்றது. இதுபோன்ற சூழல்களில் கஷ்டப்பட்டு தங்கள் வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்று முயற்சி செய்பவர்களுக்கு அரசு முறையான ஏற்பாடுகளை செய்து கொடுக்கலாம்.
இதுபோன்று, பார்வை இல்லாதவர்களுக்கு ரயில் நிலையங்களிலேயே கூட கடை வைத்துக் கொடுக்கலாம். அவர்களுக்கு தேவையான கடன் உதவிகளை வழங்கி அவர்கள் ஓர் இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் ஏற்பாட்டை உருவாக்கலாம் என்ற சிந்தனைகள், பெரும்பாலான ரயில் பயணிகளிடம் நம்மால் காண முடிகின்றது. இதை அரசு செய்யுமா என்பதே நம்முன் உள்ள கேள்வி.

No comments:
Post a Comment