சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Sep 2015

பெரிய கோவிலுக்கு விழா எடுக்கும் ஜெ., கருணாநிதி இருவரும் ராஜராஜனை புறக்கணிப்பது ஏன்?'

வீரத்தின் மூலமும், கலையின் மூலமும் தமிழர்களின் புகழை உலகறிய செய்த பேரரசன் ராஜராஜசோழன். அவருடைய சமாதி கவனிக்கபடாமலும், பராமரிக்கபடாமலும் உள்ளது. சமாதி இருக்கும் இடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் சமூக ஆர்வலர்களும், பொது மக்களும்.

தஞ்சாவூர் மாவட்டம், தாராசுரம் உடையாளூரில் உள்ளது மாமன்னன் ராஜராஜசோழனின் சமாதி. சமாதி இருக்கும் இடத்தில் லிங்கம் ஒன்று உள்ளது. அதற்கு ஆஸ்பட்டாஸ் சீட்டில் கொட்டகை அமைத்து கோவிலாகவும் வணங்கி வருகிறார்கள் பொது மக்கள். அந்த இடத்தில் தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை சமீப காலமாக வலுப்பெற்று வருகிறது.

இதுகுறித்து ராஜராஜன் கல்வி பண்பாட்டு கழகத்தின் மாவட்ட தலைவர் மணிமொழியன் கூறுகையில், ''தன் வீரத்தின் மூலம் கீழ்திசை நாடுகள் மற்றும் வடக்கு திசை நாடுகளையும் வென்று தன் வெற்றி கொடியை பறக்க விட்டு, சோழர்களின் சின்னத்தையும் பொறித்து விட்டு வந்தார் ராஜராஜ சோழன். அப்போதே பெரிய அளவில் கடற்படை வீரர்களும், பெரிய கப்பல்களும் வைத்திருந்த பேரரசன். அவர் காலத்தில்தான் கடற்படை வாணிபம் சிறந்து விளங்கியது என ஆய்வுகள் கூறுகிறது. மேலும் மக்கள் ஆட்சி முறையை முதன் முதலில் கொண்டு வந்த மன்னரும் இவர்தான். கலைஞர்களையும், தொழிலாளர்களையும் மதித்தவர். அதனால்தான் பெரிய கோவிலை கட்டியவருக்கு ராஜராஜன் பெரும் தச்சர் என்று தன் பெயரையும் சேர்த்து பட்டம் கொடுத்தார். அவர் காலத்தில் ஆட்சி முறையும், நிர்வாகமும் சிறப்பாக விளங்கியதாக வரலாறுகள் கூறுகிறது. இதற்கு ஆய்வுகளும் சட்சியாக இருக்கிறது.
அவர் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாய் காட்சி அளிப்பதுடன், இன்றும் அவரின் புகழுக்கு காரணமாகவும் இருக்கிறது. அப்படிபட்ட மாமன்னனுடைய சமாதி உடையாளூரில் இருக்கிறது. பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்டவரின் சமாதி சிறிய இடத்தில், ஆஸ்பெட்டாஸ் கொட்டகையில் கவனிக்கபடாமல் இருப்பது வேதனையான ஒன்றுதான். சமாதி இருந்த இடத்தில் உள்ள தூணை வைத்துதான் அருகே உள்ள பால்குளத்தின் அம்மன் கோவில் கட்டபட்டுள்ளது.
சமாதிக்கான ஆதாரமும் அந்த தூணிலேயே பொறிக்கபட்டுள்ளதாக கல்வெட்டு ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனவே அந்த இடத்தில் பெரிய அளவில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக போராடி வருகிறோம். ஆனால், பெரிய கோவிலுக்கு ஆயிரம் ஆண்டு விழா எடுத்த கருணாநிதியும், 100 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் ஒட வைத்த ஜெயலலிதாவும் சமாதியில் நினைவு மண்டபம் கட்ட ஆர்வம் காட்டாமல் இருப்பது ஏன் என புரியவில்லை.

கல்லணை கட்டிய கரிகால சோழனுக்கு மணி மண்டபம் கட்டி பெருமை சேர்த்தார் முதல்வர் ஜெயலலிதா. அதேபோல் உலக புரதான சின்னமாக விளங்கும் பெரிய கோவில் அதன் மூலம் தமிழர்களின் பெருமையை உலகுக்கு பரவ செய்த ராஜராஜ சோழனுக்கும் மணிமண்டபம் கட்ட வேண்டும். அவர் சமாதி இருக்கும் இடத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளபட்டு மணி மண்டபம் அமைக்க உத்தரவிட வேண்டும். அப்படி செய்தால் முதல்வர் ஜெயலலிதா மூலம் தமிழர்களில் கனவு நினைவாகும் என்றார்.

No comments:

Post a Comment