சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Sep 2015

மெக்காவில் துயர சம்பவம்: கூட்ட நெரிசலில் சிக்கி 717 பேர் பலி!

சவுதி அரேபியாவின் மெக்காவில், கூட்ட நெரிசலில் சிக்கி 717 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 800 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஹஜ் புனித யாத்திரைக்கு வந்தவர்களின் கூட்டம் அதிகமானதால், திடீரென மெக்கா மசூதிக்கு வெளியே  கடும் நெரிசல் ஏற்பட்டதாகவும், அதில் சிக்கி 717 பேர் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மினாவில் உள்ள சாத்தான் சுவர் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின்போது இந்த நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நெரிசலில் சிக்கி சுமார் 800 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக சவுதி அரேபியா தொலைக்காட்சி தகவல் வெளியிட்டு உள்ளது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2 இந்தியர் பலி

இந்த விபத்தில் பலியானவர்களில் இரண்டு பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்திருக்கிறது. ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த 60 வயதான பிபி ஜான் என்பவரும், கேரளாவைச் சேர்ந்த முகமது என்பவரும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனிடையே நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தோனேசியா மற்றும் மலேசியாவை சேர்ந்தவர்கள் என்றும், இந்தியாவை சேர்ந்த யாருக்கும் பாதிப்பில்லை என்றும் இந்திய ஹஜ் கமிட்டித் துணைத்தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரான மெக்காவுக்கு, ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ‘ஹஜ்’ புனித பயணம் செல்வது வழக்கம். அதன்படி பல நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் மெக்கா நகருக்கு சென்றனர்.

வழக்கம்போல், இந்த ஆண்டும் லட்சக்கணக்கானோர் மெக்காவில் உள்ள பெரிய மசூதியில் திரண்டு,  தங்கள் ‘ஹஜ்’ கடமையை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.  
  
சமீபத்தில் மெக்கா மசூதியில் கிரேன் முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதில், 107 பேர் பரிதாபமாக பலியானார்கள். 200 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பக்ரீத் திருநாளில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
ஹெல்ப் லைன் எண்கள்:  0096 6125 458 000 மற்றும் 0096 6125 496 000.

No comments:

Post a Comment