சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

15 Sept 2015

“என் மனம் திறந்தால் அவர்கள் தாங்க மாட்டார்கள்” சரத்குமார் தேர்தல் வியூகம்!

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் அக்டோபர் 18ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையிலும், விஷால் தலைமையிலும் இரு அணிகள் போட்டியிடயிருகின்றன. சரத்குமார் அணியை ஆதரிக்கும் நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் சரத்குமார், ராதாரவி, விஜயகுமார், சிம்பு, ஷாம், தியாகு, ராம்கி, அசோக், ராதிகா, நிரோஷா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டம் முடிவில் சரத்குமார் பேசிய போது, “ நடிகர்கள் ஒரே குடும்பமாக இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் தேர்தல் வந்துவிட்டதால் தேர்தல் சார்ந்த வியூகம், நடிக-நடிகைகளை சந்தித்து நேரில் ஓட்டு சேகரிப்பது குறித்தான ஆலோசனையே இன்று நடத்தப்பட்டது. 

நடிகர்கள் இடையே பிரச்னையோ பிரிவோ வரக்கூடாது என்று அமைதியாக இருந்தேன். ஆனாலும் என்னைப் பற்றி எதிரணியினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறி வருகின்றன.ர் அவதூறாக பேசுவதுமட்டுமில்லாமல் ஊழல் புகார் சொல்கின்றனர். இதையெல்லாம் கேட்கும் போது நெஞ்சு வலிக்கிறது.
 


கடந்த காலத்தில் நடிக - நடிகைகள் பிரச்னையைத் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தேன். கஷ்டப்பட்டு உழைத்தேன். உறுப்பினர்களுக்காக உழைப்பது கடமை. நடிக சங்க கடனை விஜயகாந்துடன் இணைந்து அடைத்தோம். மீண்டும் கடன் வரக்கூடாது என்பதற்காக நிறைய ஆலோசனைகளை நடத்தினோம். 

அந்த ஆலோசனையில், மாதம் ரூ26 லட்சம் வாடகை வரக்கூடிய நடிகர் சங்க கட்டிடம் தொடர்பாக நல்லதொரு ஒப்பந்தம் போடப்பட்டது. 29 ஆண்டுகள் 11 மாதம் என்று அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் கிடைக்கும் வருமானத்தில் நலிந்த நடிகர்களுக்கு உதவுவதற்கு திட்டமிட்டோம். செயற்குழுவிலும் இதற்கான ஒப்புதல் பெற்றப்பட்டது. 

அப்போது இந்த ஒப்புதல் வேண்டாம், நாங்களே நிதி திரட்டி கட்டிடம் கட்ட ஆவணம் செய்கிறோம் என்று சொல்லியிருந்தால், அந்த ஒப்பந்தத்தை வாபஸ் பெற்றிருப்பேன். ஆனால் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துவிட்டு, கடைசி நேரத்தில் கையெழுத்து வேட்டை நடத்தி எதிர்ப்பு தெரிவித்தது அதிர்ச்சி அளித்தது. 

அதுமட்டுமா, நடிகை மஞ்சுளா இறந்தபோது நான் தான் முதல் ஆளாக போய் நின்றேன். முரளி இறந்த போதும், பாலசந்தர் இறந்த போதும் கூட நான் தான் அங்கு இருந்தேன். அங்கு வந்திருந்த ரஜினிகாந்தை கூட்டத்துக்கு மத்தியில் பாதுகாப்பாக காரில் அனுப்பி வைத்தேன். 

கமல்ஹாசனின் உத்தமவில்லன் பட பிரச்னையின் போது படம் திரைக்கு வர நான் தான் உழைத்தேன்.  கார்த்தியின் கொம்பன், விஷாலின் பாயும்புலி, பட பிரச்னைகளை சரிசெய்து படம் வெளிவர முற்சிகளை மேற்கொண்டேன். 

நடிகர் சங்க உறுப்பினர்களுகாக உண்மையாக உழைத்திருக்கிறேன். அனாலும் என்னைப் பற்றி முறைகேடு செய்ததாக அவதூறு பரப்புகிறார்கள். தொடர்ந்து இதுபோல் பேசினால், 10 நாட்களில் அவர்களைப் பற்றியான உண்மை ரகசியங்களை வெளியிடுவேன். என் மனதை திறந்தால் அவர்கள் தாங்கமாட்டார்கள். நான் பேச ஆரம்பித்தால் நிறைய பேருக்கு சிக்கல் வரும். 

நேர்மையான முறைப்படி தேர்தல் நடக்கும். என் அணி நிச்சயம் வெற்றிபெறும். என் அணிசார்பில் துணைத் தலைவர் பதவிக்கு சிம்புவும், பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர்.கண்ணனும் போட்டியிடுகிறார்கள். மற்ற வேட்பாளருக்கான லிஸ்ட் ஒருவாரத்தில் அறிவிக்கப்படும்” என்று பேசினார் சரத்குமார்.



No comments:

Post a Comment